பள்ளிப் பேருந்து மோதி குழந்தை மரணங்கள்: அரசு நினைத்தால் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தடுக்கலாமே!
சென்னையில் ஆழ்வார்திருநகரில் மார்ச் 28-ஆம் தேதியன்று ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிப் பேருந்து ஏறி ஏழு வயது சிறுவன் வி.ஜே. தீக்ஷெத் இறந்து விட்டான். இந்த அதிர்ச்சியான செய்தியின் பின்னணியில், அன்றாடப் போக்குவரத்தைப் பாதுகாப்பானதாக ஆக்குவதற்காக ஏதேனும் நடவடிக்கை...