Read in : English
2021: சென்றிடுவேன் வழி அனுப்பு!
கடந்த ஆண்டில், அதாவது 2020இல் கோவிட்19 என்கிற கொரோனா பெருந்தொற்று கொடிகட்டிப் பறந்தபோது நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு, அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தார்கள். அலுவலகங்கள் மூடப்பட்டு வீட்டிலிருந்து வேலை ஐ.டி. காரர்களுக்கு. பலருக்கு வேலை போச்சு. சாமானிய மக்களில் பலரின்...
உங்கள் தொழில் வளர்ச்சிக்கான வியூகம் என்ன?
உங்கள் தொழிலை மேம்படுத்த நீங்கள் விரும்பினால், தொழில் மேம்பாட்டுக்கான வியூகத்தில் கவனம் செலுத்துவது அவசியம். அந்த வியூகத்தைச் செயல்படுத்துவதற்கு மையமாக இருப்பவை கட்டமைப்பு, இணைத்துத் செயல்படுதல் மற்றும் தீர்வு. ஒரு பெரிய தொழில் நிறுவனத்தின் உரிமையாளரின் லட்சியமே நிறைய பணம் சம்பாதிப்பதுதான்....
மீண்டும் மஞ்சப்பை: திரும்புகிறது ஒரு பழைய வழக்கம்
ஒரு காலத்தில் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளான தமிழ்நாட்டு மஞ்சப்பை இப்போது மீண்டும் பெருங்கவனம் பெறுகிறது. உபயம்: முதல்வர் மு.க. ஸ்டாலின். மஞ்சப்பையின் மீள்வருகைக்கு, மீண்டும் ‘மஞ்சப்பை’ என்று பெயரிட்ட திட்டத்தின்கீழ் சமீபத்தில் பச்சைக்கொடி காட்டி வரவேற்று உள்ளார். நடப்புகாலத்துச்...
83: தமிழர்களாகிய நாங்கள் எல்லோரும் ஸ்ரீகாந்துகள்தான்!
’83’ திரைப்படத்தில் ஒவ்வொருவருக்குமான நிமிடங்கள் இருக்கின்றன. கீர்த்தி ஆஸாத்துக்கும், ரவி சாஸ்திரிக்கும்கூட அவர்களுக்கான புகழ் கொஞ்சம் இருக்கிறது. அந்த உலகக்கோப்பையில் சுனில் கவாஸ்கர் சொல்லிக்கொள்ளும்படியாக விளையாடவில்லை. ஆனால் அவருக்குமான ஒரு தருணம் இந்த படத்தில் இருக்கிறது. ஷேன் வார்ன் மைக்...
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் போது எழுந்து நிற்க வேண்டும்: தமிழக அரசு அறிவித்தது சரியா?
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ. சுந்தரனார். அவர் எழுதி 1891இல் வெளியான மனோன்மணீயம் என்ற நாடக நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம் என்ற தலைப்பில் உள்ள பாடலின் ஒரு பகுதிதான் நீராரும் கடலுடுத்த பாடல். தமிழகத்தின் அனைத்து விழாக்களிலும் பாட வேண்டும் என்று கரந்தைத்...
எம்ஜியார் என்னும் மந்திரச்சொல்லின் மர்மம்!
ஷேக்ஸ்பியரின் நாடகம் ’ஜூலியஸ் சீசர்’. அதில் கதாநாயகன் பாதிக்கு முன்பே இறந்துவிடுவார். ஆனால் சீசரின் மரணம்தான் மீதி நாடகத்தை ஜீவனுடனும் விறுவிறுப்புடனும், வேகத்துடனும் கொண்டுபோகும். ஆகப்பெரிய ஆளுமையான சீசரைத் தவிர்த்து ரோமானிய அரசியல் இல்லை. தமிழ்நாட்டில் மூன்று தலைமுறையைச் சினிமாவிலும்...
மாரிதாஸ் கைது: பேச்சுரிமையில் திமுகவின் தலையீடு தொடர்கிறதா?
பொது விவாதங்கள், ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகள் துடிப்பான ஜனநாயகத்தின் முக்கிய மூலக்கூறுகளாகும். மோசமான ஆட்சி அல்லது தவறான நிர்வாகம் இதை சிதைத்துவிடும். தவறான நிர்வாகம் என்பது மெதுவாக வெளிப்படும். ஒருசிலரால் மட்டுமே என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஜனநாயகம் என்பது சிலர்...
ஒரே தேசம், ஒரே சினிமா: பல மொழிகளில் ஒரு திரைப்படம் ரிலீஸ் என்ன காரணம்?
ஒரு மொழியில் எடுக்கப்படும் ஒரு திரைப்படம் வேறு மொழிகளில் ‘டப்’ செய்யப்படுவதோ அல்லது ஒரே நேரத்தில் பல்வேறு மொழிகளில் ஒரு திரைப்படம் உருவாக்கப்படுவதோ புதிய விஷயமல்ல. தமிழில் எஸ்.எஸ்.வாசன், ஏ.வி.எம்., நாகி ரெட்டி, எல்.வி.பிரசாத் ஆகியோருக்கு முன்பிருந்தே இந்த வழக்கம் திரையுலகில் இருந்து வருகிறது....
சர்ச்சைக்கு உள்ளான தப்லிக் ஜமாத் என்ன செய்கிறது?
சௌதி அரேபியாவின் ஒரே ஒரு ட்வீட் உலகில் உள்ள நாடுகளில் பல்வேறு விவாதங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் வழி ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான நாடுகளில் பரந்து இருக்கும் தப்லிக் ஜமாத்திற்கு தடை விதிக்கப்படுகிறது என்று மட்டும் கூறாமல், இது தீவிரவாதிகளின் நுழைவு வாயில் என அந்நாட்டின் இஸ்லாமிய...
ஐ-டி வேலையும் வேண்டாம்; இண்டர்நெட்டும் வேண்டாம்; பசுமாடுகள் வளர்க்கும் இளைஞர்
மாடு விற்பவர் 35,000 ரூபாய் விலைசொன்னார். வாங்குபவரான கிரிஷ்க்கு 27 வயதிருக்கலாம்; நவீன உலகப் பணியாளர் தோற்றம். அவருக்கு இந்த விளையாட்டுத் தெரியும். விடாப்பிடியாகப் பேரம்பேசி விலையைக் குறைத்துகொண்டே வந்தார். மாலைப்பொழுது இருட்டாகிக் கொண்டே வந்தது. விற்பவர் தன் சரக்கை விற்றுத்தீர்க்கும்...
Read in : English