Read in : English
சர்ச்சை இல்லாமல் உருவாகுமா பென்னி குவிக் வரலாற்றுப் படம்?
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் பென்னி குவிக்கின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்க விரும்புவதாகப் பிரபல இயக்குநர் சீனு ராமசாமி நவம்பர் ஒன்று அன்று தனது ட்வீட் வழியே தெரிவித்திருந்தார். இந்த ட்வீட் சட்டெனப் பலரது கவனத்தையும் ஈர்த்தது. காரணம், பென்னி குவிக் கட்டிய முல்லைப் பெரியாறு...
ஜெய்பீம்: இருளர்கள் முன்னேற என்ன செய்ய வேண்டும்?
இருளர் இன மக்களின் துயரை முன்னிலைப்படுத்தியுள்ள, ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை பார்த்தேன். தமிழகத்தில் வாழும் ஒரு பிரிவினரின் துன்பியலை கலாப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது. அது தொடர்பாக சூடான விவாத அலையும் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதிகார மட்டத்தில் பல நிலையில் உள்ளோர், கல்வியாளர்கள்,...
அண்ணாத்த ரஜினி இனியாவது விழித்துக்கொள்வாரா?
ரஜினி காந்த் என்னும் பெயருக்கும் அவரது ஸ்டைலுக்கும் தமிழ்நாட்டில் பெரிய சந்தை மதிப்பு உள்ளது. அதை அறுவடை செய்வதில் இன்னும் தயாரிப்பாளரிடையே போட்டியே இருக்கிறது. வயது எழுபதைத் தொட்டிருந்தாலும் ரஜினியைக் காண அவருடைய ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதெல்லாம் சரிதான். ஆனால், ரஜினி என்னும்...
தீபாவளி பட்டாசுகளின் அட்டைப் பெட்டியில் விலை ரூ.1500; விற்பனை விலை ரூ.120; விலை குறைப்பு பின்னணி என்ன?
தீப ஒளி திருநாளாம் தீபாவளி பண்டிகையின் முக்கியமான ஓர் அங்கம் பட்டாசுகள். காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடு போன்றவை பேசுபொருளாகிவிட்ட இந்தச் சூழ்நிலையிலும் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடுபவர்கள் குறைவு. பட்டாசுதான் சிறுவர், சிறுமிகளுக்குத் குதூகலம். பட்டாசு வாங்கும்போது அந்த பெட்டியின் மேலுள்ள...
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு: கோட்டையிலிருந்து கலைவாணர் அரங்கம் வரை
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 100 வயது ஆகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு தனித்தனித்தன்மையுடன் செயல்பட்ட மதராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்று அழைக்கப்படும் இச்சட்டமன்றம் 12.1.1921இல் தொடங்கியது. அதிலிருந்து தமிழக சட்டப்பேரவை வரலாறு தொடங்குகிறது. அப்போது சென்னையில் செயின்ட்...
இன்றைய மெனு: சாப்பாட்டு புராணங்கள் படிப்பதற்கு மட்டும்
தீபாவளி என்றாலே புதிய துணிமணிகளும் பலகாரங்களும்தான். அந்தக் காலத்தில் சாமானியக் குடும்பங்களில் இட்லி அவிப்பது முக்கியமானது. வடையும், பஜ்ஜியும் அத்துடன் இருக்கும். நடுத்தரக் குடும்பங்களில்தான் தீபாவளிக்கு சில தினங்கள் முந்தியே அதிரசம், முறுக்கு போன்ற பலகாரங்கள் தயாராகிவிடும். தலை தீபாவளிக்கு...
சரக்குக் கப்பல்கள் மீனவர்களின் படகுளை விழுங்கும் அரக்கனா?
ஆழி சூழ் உலகு என்பது பண்டைய தமிழரின் புவியியல் அறிவு. அவ்வாறு முக்கால் பாகம் நீரால் சூழ்ந்துள்ள கடல்தான் வணிகத்தின் அச்சாணி. நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் கடல் போக்குவரத்தின் மூலமாகவே நம்மை வந்தடைகின்றன. அதேபோன்று உலகின் உணவு தேவையை கடல்தான் மூன்றில் ஒரு பங்கு நிறைவு செய்கிறது....
சூர்யாவின் ஜெய் பீம்: மு.க. ஸ்டாலினின் மனக்கண் முன் நிழலாடிய நினைவில் நீங்காத வடு!
விளிம்பு நிலை மக்களான இருளர்களின் வாழ்க்கையும் அவர்களது துயரக்கதையையும், காவலர்களின் அத்துமீறல்களையும் சொல்லும்படமான ஜெய் பீம் படத்தைப் பார்த்துப் பாராட்டிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அவசரநிலை காலத்தில் தானும் சிறையில் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், தன்னைக் காப்பாற்றுவதற்காக...
நன்மாறன்: சாமானியனாகப் பிறந்து, சாமானியனாக வாழ்ந்து, சாமானியனாகப் மறைந்த அபூர்வ எம்எல்ஏ!
மாற்றம் ஒன்றே மாறாது. நன்மாறனைப் பொருத்தவரை இது பொருந்தாது. சட்டப்பேரவை உறுப்பினராவதற்கு முன்னாலும் சரி, அதற்குப் பிறகும் சரி எப்போதும் மாறாதவர். பதவி அவரது பொருளாதார நிலையையோ வாழ்க்கை முறையையோ மாற்றிவிட முடிந்ததில்லை. அவர் எப்போதும் போல சாமானியர்கள் அணுகக்கூடியவராகத்தான் இருந்தார்....
ஜெய் பீம் – நீதிதேவதையின் மீது இருந்த கடைசி நம்பிக்கையின் கதை
தீபாவளிக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான சூர்யா நடித்த `ஜெய்’ பீம் தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்பே அமேசான் பிரைமில் வெளியாகிவிட்டது. `ஜெய் பீம்’ எதைப்பற்றிய படம்? நீதிமன்ற விசாரணையை தழுவி எடுக்கப்படும் கோர்ட் ரூம் ட்ராமா எனப்படும் வகையைச் சேர்ந்த திரைப்படங்கள் உலக...
Read in : English