Site icon இன்மதி

சரக்குக் கப்பல்கள் மீனவர்களின் படகுளை விழுங்கும் அரக்கனா?

Image by zzkonst from Pixabay

Read in : English

ஆழி சூழ் உலகு என்பது பண்டைய தமிழரின் புவியியல் அறிவு. அவ்வாறு முக்கால் பாகம் நீரால் சூழ்ந்துள்ள கடல்தான் வணிகத்தின் அச்சாணி. நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் கடல் போக்குவரத்தின் மூலமாகவே நம்மை வந்தடைகின்றன.

அதேபோன்று உலகின் உணவு தேவையை கடல்தான் மூன்றில் ஒரு பங்கு நிறைவு செய்கிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான கப்பல்கள் பல்வேறு சரக்குகளுடன் துறைமுகங்களை விட்டு புறப்படுகின்றன அதேபோல் லட்சக்கணக்கான மீனவர்கள் கடலை நம்பி தங்களுடைய படகுகளில் மீன்பிடிக்க செல்கின்றனர். தரையில் உள்ளது போன்று வரையறுக்கப்பட்ட சாலைகள் இல்லாத நீர்ப்பரப்பில் கப்பலும் படகும் மோதிக்கொண்டால் என்ன ஆகும்?

கடந்த அக்டோபர் மாதம் 22ம் தேதி குளச்சலிலிருந்து மீன்பிடிக்க சென்ற படகும், சிங்கப்பூரில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பலும் மோதிக்கொண்டதில் இரண்டு மீனவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார்கள்.

தங்களுடைய மீன்பிடி படகுகள் அடிக்கடி சரக்குக் கப்பல்களால் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டும் மீனவ அமைப்புகள் சரக்குக்கப்பலின் அதிகாரிகளைக் கைது செய்யவேண்டும் எனவும் காயம்பட்ட மீனவர்களுக்குத் தகுந்த நிவாரணம் வேண்டும் எனவும் மாநில, மத்திய அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

ஆயிரக்கணக்கான டன் எடைகொண்ட கப்பல்களின் முன்னால் அவர்களது மரப்படகுகள் சிறுதுறும்பு என்றும் இவ்வாறு அடிக்கடி நடக்கும் மோதல்களால் பல மீனவர்கள் மரணமடைந்துள்ளதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். தங்கள் படகுளை மோதித்தள்ளிவிட்டு, சுக்குநூறாகிப்போன படகுகளில் இருந்து கடலில் விழுந்து உயிருக்கு போராடும் மீனவர்களை காப்பாற்றாமல் சரக்குக் கப்பல்கள் சென்றுவிடுவதாக மீனவர்கள் முறையிட்டு வருகிறார்கள்.

உண்மையில், சரக்குக் கப்பல்கள் மீனவர்களின் படகுளையும் அவர்களின் உயிர்களையும் விழுங்கும் நடுக்கடலில் விழுங்கும் அரக்கனா?

சரக்குக் கப்பல்களை கண்டு மீனவர்கள் அஞ்சுவது போல தங்கள் முன் திடீரென்று தோன்றும் மீன்பிடி படகுளை கண்டு தாங்கள் அஞ்சுவதாக மாலுமிகள் கூறுகிறார்கள்.

இயந்திரமயமாக்கலின் பிறகு மீன்பிடி படகுகள் ஆழ் கடலுக்கு அதிகம் செல்கின்றன எனவும் தாங்கள் முன்பு கண்டிராத அல்லது மீன்பிடி தடைசெய்யப்பட்ட பகுதிகளில் கூட படகுகள் தென்படுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

நல்ல வேகத்தில் அதாவது 12 முதல் 18 நாட் வேகத்தில் பயணம் செய்யும் ஒரு பெரிய கப்பலை சட்டென்று நிறுத்துவது இயலாத காரியம் எனவும் அவ்வாறு நிறுத்தினாலும் ஒரு கப்பல் குறைந்தது நான்கு கடல் மைல்கள் சென்றே நிற்கும் எனவும் கப்பல் கேப்டன் சஞ்சய் பிரசார் தெரிவிக்கிறார். “வாணிப கப்பல்களுக்கு வரையறுக்கபட்ட கடல்வழி சாலைகள் உண்டு.

நல்ல வேகத்தில் அதாவது 12 முதல் 18 நாட் வேகத்தில் பயணம் செய்யும் ஒரு பெரிய கப்பலை சட்டென்று நிறுத்துவது இயலாத காரியம் எனவும் அவ்வாறு நிறுத்தினாலும் ஒரு கப்பல் குறைந்தது நான்கு கடல் மைல்கள் சென்றே நிற்கும் எனவும் கப்பல் கேப்டன் சஞ்சய் பிரசார் தெரிவிக்கிறார். “வாணிப கப்பல்களுக்கு வரையறுக்கபட்ட கடல்வழி சாலைகள் உண்டு.

மீன்பிடி படகுகள் போல எங்களால் விரும்பிய பாதையில் செல்ல முடியாது. கடல் வாணிபத்தை முறைப்படுத்தும் இந்திய மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மிக குறைவே என்றாலும் நடுக்கடல் மோதல்கள் நடக்கவே செய்கின்றன என்கிறார் சஞ்சய்.

மீன்பிடி படகுகள் போல எங்களால் விரும்பிய பாதையில் செல்ல முடியாது. கடல் வாணிபத்தை முறைப்படுத்தும் இந்திய மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மிக குறைவே என்றாலும் நடுக்கடல் மோதல்கள் நடக்கவே செய்கின்றன என்கிறார் சஞ்சய்.

இருப்பினும் மோதல்களைத் தவிர்க்க கப்பல்கள் எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என மாலுமிகள் சொல்கிறார்கள். எப்பொழுதுமே கப்பலின் பிரிட்ஜ் எனப்படும் கட்டுப்பாட்டு அறை உயர் அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் எனவும் கடற்பரப்பை ஆறு கடல் மைல் அளவு சாதாரணமாகவும் 10 கடல் மைல் வரை ரேடார் மூலமும் கண்காணிப்பார்கள் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

மீன்பிடி படகுகள் தென்படும் இடங்களில் கப்பலின் இயக்கத்தை டீசல் எரிபொருளுக்கு மாற்றவும் கேப்டன் உத்தரவிடுவார். டீசல் எரிபொருள் விலை அதிகம். ஆனால் கப்பலை எளிதாக கட்டுப்படுத்த முடியும். நெடுந்தொலைவு பயணிக்கும் வணிகக் கப்பல்கள் ஹெவி ஆயில் எனும் எரிபொருளில் இயங்கும். இந்தவகை எரிபொருள் விலை குறைவு.

கோடிக்கணக்கான மதிப்புள்ள சரக்குகளைக் கொண்டு செல்லும்போது நேரம் முக்கியம் என்றும் நடுக்கடல் மோதலில் குற்றம் சாட்டப்பட்டு கப்பல் துறைமுகத்தில் தடைசெய்யப்பட்டால் ஏற்படும் நஷ்டம் மிக அதிகம் என்று கப்பல் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த நஷ்டக் கணக்கை அறிந்துகொண்ட சில மீன்பிடி அமைப்புகள் நடுக்கடல் மோதல்களை தங்களது லாபத்துக்காக உபயோகிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் கப்பல் கம்பெனிகளின் தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்த நடுக்கடல் மோதல்களை விசாரிக்க தனியான நடுவர் மன்றம் வேண்டும் என்பதும் ஆழ்கடல் செல்லும் மீனவர்களுக்கு தகுந்த கருவிகளும் கடல்வழி வாணிபச் சட்டதிட்டங்களை பற்றிய அறிவுரைகளும் மிகவும் பயனளிக்கும் என்பதும் மாலுமிகளின் வேண்டுகோள்.

Share the Article

Read in : English

Exit mobile version