Read in : English
திமுகவில் உதயநிதியை முந்தும் கனிமொழி
திமுக துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டிருக்கிறார். தனது மகனை அடுத்த தலைவராக்கும் திட்டத்துடன் தங்கைக்கு மு.க. ஸ்டாலின் முட்டுக்கட்டை போடுகிறார் என்று இதுவரை நிலவிய குற்றச்சாட்டைக் கட்சியின் தலைவராக அவர் எடுத்திருக்கும் இந்த முடிவு நீர்த்துப்போகவைத்துள்ளது. கனிமொழியும் குடும்பத்தில்...
கழிவு மேலாண்மை: தமிழ்நாடு ஏன் விருது பெறவில்லை?
அண்மையில் 2022ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் ‘ஸ்வச் சர்வேக்ஷன்’ (தூய்மை ஆய்வு) விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்தியாவின் நகர்ப்புறக் கழிவு மேலாண்மைச் சட்டத்தின் அடிப்படைத் தோல்விகளை அந்த விருதுகள் மறைத்துவிட்டன. ஒன்றிய அரசின் வீட்டுத்துறை மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் அளவுகோல்கள்படி, தமிழ்நாடு...
பொன்னியின் செல்வனும் வெற்றிமாறன் அரசியலும்
வெற்றிமாறன் திரைப்படங்களில் அரசியல் உண்டு. அதிகாரத்தைப் பற்றி, அதன் வன்ம ஆட்டம் பற்றி, அதற்கெதிரான அரசியல் பற்றி அவரது திரைப்படங்கள் நிறைய நுண்மையாகவே பேசியிருக்கின்றன. ஆடுகளத்தில் குருவிற்கும் சீடனுக்கும் இடையிலான ஓர் அதிகார அரசியல் பேசப்பட்டது. விசாரணை, சட்டம் மீறிய எதேச்சாதிகாரம் பற்றிய ஒரு...
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை ஏன்?
அண்மையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைத் தடைசெய்யப்பட்டது. அதைக் குறித்து மிகப் பரவலாக அறியப்பட்ட ஆளுமையான பேராசிரியர் ராமு மணிவண்ணனிடம் இன்மதி இணைய இதழுக்காகப் பேசினோம். பேராசிரியர் ராமு மணிவண்ணன் தில்லி பல்கலைக் கழகத்திலும் சென்னைப் பல்கலைக் கழகத்திலும் அரசியல் அறிவியல் துறையில்...
புதுச்சேரி சுதந்திரம் பெற்ற கதை
புதுச்சேரி வரலாறு முறையாக எழுதப்படவில்லையே என்னும் பெரிய குறையைத் தீர்த்துவைத்துவிட்டார் பிரான்ஸ் நாட்டு வரலாற்று அறிஞர் J.B.P. மொரே. அரசியல்வாதிகள் புதுச்சேரி விடுதலை வரலாற்றை எழுதியிருக்கிறார்கள்; பாடநூல் ஆசிரியர்கள் புதுச்சேரி வரலாற்றை எழுதியிருக்கிறார்கள். வரலாற்று அறிஞர்கள் பலரும் நூல்களை...
கர்மா தீர்ப்பில் இடம்பெறலாமா?
கர்மா கொள்கைப்படி, ஒரு போலீஸ்காரர் தனது மோசமான செயல்கள் எல்லாவற்றுக்குமான தண்டனைகளையும் அனுபவிக்கத் தேவையில்லை; ஒருசில நடத்தைகளுக்கான தண்டனைகளை அவர் அனுபவித்தால் போதும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கூறியிருக்கிறது. இதன் மூலம் போலீஸ்காரர் ஒருவர் மீது பாய்ந்த காவல்துறை சார்ந்த...
திமுக கூட்டணி: விரிசல்கொள்கிறதா?
2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தீவிரமான பாஜக எதிர்ப்பு அரசியலை முன்வைத்து வெற்றிபெற்றது திமுக. அரியணையில் ஏறினார் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின். ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்குப் பின் பாஜக எதிர்ப்பு என்பதைப் பெயரளவில் மட்டுமே ஸ்டாலின் கைக்கொள்கிறார் என்ற கண்ணோட்டம் பரவலாக...
ஆர்எஸ்எஸ் பேரணி, அரசு தடுக்குமா?
தமிழ்நாட்டில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் இயக்கம் தமிழ்நாட்டில் சுமார் 50 இடங்களில் ஒரு பேரணியை நடத்த உத்தேசித்திருந்தது. ஆனால், தமிழக அரசு இந்தப் பேரணியை நடத்த அனுமதி தரவில்லை. இதைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது. தங்கள் சீருடையுடன் அணிவகுப்பு...
5ஜி: இனி எல்லாம் மின்னல் வேகம்!
டிஜிட்டல் இந்தியாவின் மைல்கல்லாகக் கருதப்படும் 5ஜி சேவை இன்று முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அதிவேக அலைக்கற்றைத் திறன் கொண்ட ஐந்தாம் தலைமுறை, 5ஜி, சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். உள்நாட்டில் செயல்பட்டுவரும் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற...
பொன்னியின் செல்வன் பாகம் 1 வியப்பு!
பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்துக்குள் நுழைவதற்கு முன்னர் கடந்து வந்த பாதையை அசை போடுவோம். அது ஒரு வகை சுவை. போலவே, பல ஆண்டுகளுக்கு முன் நம் மூதாதையர்கள் எவ்வாறு வாழ்ந்தனர் என்பதும், அப்போதிருந்த அரசுகள் என்ன செய்தன என்பதும் சுவாரசியத்தைத் தரும். அதனாலேயே, நம்மில் பலர் வரலாற்றை அறிவதில்...
Read in : English