Read in : English
ரூ.80 ஆயிரம் செலவில் மதுரை மாணவரின் 200 நாள் பயணம்!
இருநூறு நாட்கள் இந்தியாவின் வடக்கு பகுதியை சுற்றிய பின் சொந்த மாநிலம் திரும்பியிருக்கிறார் 23 வயதான மதுரையை சேர்ந்த ஜி.ஜி. சிவப்ரகாஷ். நாடு 73வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்த நாளில் சிவப்ரகாஷின் அனுபவம் நாம் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
பத்திரிகை நிருபர்களுக்கு பாரதியார் 1908இல் சொன்னது, இப்போதும் பொருத்தமானது!
கவிஞராக அறியப்பட்டாலும்கூட, மகாகவி சி. சுப்பிரமணிய பாரதியார் பத்திரிகையாளராகச் செயல்பட்டவர். சுதேசமித்திரன் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்தார். இந்தியா பத்திரிகை ஆசிரியராக இருந்தார். சக்கரவர்த்தினி, விஜயா, கர்மயோகி போன்ற வேறு சில பத்திரிகைகளிலும் ஆசிரியராகப் பணிபுரிந்து இருக்கிறார்....
தொலைக்காட்சிகளில் குழந்தை நிகழ்ச்சிகள்: பெரியவர்கள் ஆட்டுவிக்க, ஆடும் தோற்பாவைகளா குழந்தைகள்?
பொங்கலை ஒட்டி ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் சிறுவர்கள் இருவர் பிரதமர் மோடியின் மாண்பைக் குறைக்கும் வகையில் பேசியதாகவும் அது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார். அதற்குப் பின்னர்தான் அது என்ன காட்சி என்ற ஆர்வம் தூண்டப்பட்டது. அந்தக் காட்சி வைரலானது. மன்னரும் அமைச்சரும் உரையாடுவது போல் சித்திரிக்கப்பட்டிருந்த அந்தக் காட்சியில் இரண்டு சிறுவர்கள் பணமதிப்பிழப்பு, கறுப்புப் பண ஒழிப்பு பற்றி எல்லாம் பேசினார்கள். காட்சியில் இடம்பெற்ற சம்பவங்கள் நேரடியாகப் பெயரைக் குறிப்பிடாவிடினும் மத்திய அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது போல் இருந்தது. அதைத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பகிர்ந்திருந்தார். ஆகவே, சாமானியர் பலரும் பார்த்து மகிழ்ந்த அந்தக் காட்சி அரசியல் தலைவர்களது பார்வைக்கும் சென்றது.
தமிழர்களுக்கு ஏற்ற கீட்டோ டயட் முறை!
இந்தியாவில் பிரபலமடைந்து வரும் கீட்டோ டயட் முறை உடலுக்கு ஆபத்தானது என்ற கருந்து நிலவி வந்தாலும், தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க உணவுகளான தேங்காய் எண்ணெய், தேங்காய் பால், காய்கறிகள், எண்ணெய் வித்துகள், பன்னீர், பாதாம், முட்டை, கீரைகள், பூசணி ஆகியவற்றை பயன்படுத்தி கீட்டோ டயட்டை கடைப்பிடிக்கலாம் என்கிறார்கள் உணவு ஊட்டச்சத்து நிபுணர்கள்.
அடுத்த குடியரசுத் தலைவர் ஆவாரா தமிழிசை? ஜோடனையும் அல்ல, ஜோக்கும் அல்ல!
எம்ஜிஆர், -கருணாநிதி நட்புறவு பற்றி மணிரத்தினம் இயக்கிய இருவர் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு காலத்தில் சேர்ந்து செயல்பட்ட முன்னாள் நண்பர்கள் நீண்டபிரிவுக்குப் பின்பு ஒருநாள் சந்திக்கும் காட்சி அது. ஒரு திருமண நிகழ்வு. அதில் அருகருகே உட்கார்ந்திருக்கும் எம்ஜிஆரும், கருணாநிதியும் அந்தப் பழைய, பரிச்சய உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இருவரும் நட்போடு காட்சி தருவது நல்லதல்ல என்றும், போட்டியும் பகையும்தான் தங்களின் தேர்தல் வெற்றிக்கும் தோல்விக்கும் அச்சாணி என்றும் எம்ஜிஆராக நடித்திருக்கும் மோகன்லால் சொல்வார்
அடுத்த மழை வெள்ளம் வருவதற்கு, இன்னும் 5 மாதங்கள்தான்: விரைவில் செயல்படுமா அரசு?
இந்த 2022-இல் சென்னையும், தமிழ்நாட்டின் பிறபகுதிகளும் பருவகால மழைக்கு ஏங்குமா? 2021ஆம் ஆண்டு டிசம்பர் 30, -31 தேதிகளில் நுங்கம்பாக்கத்தில் 201.2 மிமீ மழையைக் கொட்டி அந்த ஆண்டை முடித்து வைத்த பருவகாலத்தை, புத்தாண்டுக்கு முந்திய நாளின் சிம்மசொப்பனத்தை, அனுபவித்த சென்னை மாநகரவாசிகள் வெள்ளக்காடான நிலையிலிருந்து விடுபடவே விரும்புகிறார்கள்
குடியரசு தின அணிவகுப்பு: 21 ஆண்டுகளில் 9 முறை மட்டுமே தமிழக அலங்கார ஊர்திகளுக்கு இடம்!
குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ் நாட்டின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது மிகப்பெரிய பேசுபொருளாக உருவெடுத்துள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்த வருடத்துக்கான தலைப்பாக கொடுத்த ஒன்றான இந்திய விடுதலை போராட்டம் @75 தழுவியே ஊர்தியில் தமிழக விடுதலை போராட்ட வீரர்களான சுப்பிரமணிய பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளை, வீரமங்கை வேலு நாச்சியார் மற்றும் மருது சகோதரர்கள் உருவங்கள் அமைக்கப்பட்டன. எனினும் பாதுகாப்பு அமைச்சகம் அலங்கார ஊர்தியை நிராகரித்திருக்கும் நிலையில் தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் இந்த ஊர்தி கலந்துகொள்ளும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
மதி மீம்ஸ்: மோடியை பகடி செய்த தமிழ் தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிக்கு கிளம்பிய எதிர்ப்பு!
பிரதமர் மோடி 2016ஆம் ஆண்டு 8ஆம் தேதி இரவு தொலைக்காட்சியில் உரையாற்றினார். 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்றும் அந்த நோட்டுகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள் என்றும் என்றும் அறிவித்தார். இது கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை இது...
ஒரு பொருளின் விற்பனையை அதிகரிக்க விலை நிர்ணய யுக்தி மட்டும் போதுமா?
வருவாய் ஈட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும் காரணிகளில் விலைப்புள்ளியும் ஒன்று. ஒரு பொருள் அல்லது ஒரு சேவையின் விலை வாங்குவதை தீர்மானிக்கிறது. (அந்த பொருள் வாழ்வாதாரத்துக்கு அத்தியாவசிய தேவை அல்லது பற்றாக்குறை இருந்தால் தவிர). வர்த்தகம் சில சமயங்களில் சரியான விலை உத்தியை அடைவதற்கு அல்லது சில...
Read in : English