Read in : English
கதாநாயகர் பிடியிலிருந்து விலகிடுமா தலித் சினிமா?
நடிகர் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23 அன்று அவர் தான் நடிக்கும் ஜெய் பீம் என்னும் படத்தின் போஸ்டரைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதுவரை சூர்யா 39 எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருந்த படத்தின் பெயரையும் போஸ்டரையும் ரசிகர்களுக்காகப் பரவசத்துடன் பகிர்வதாகவும் தெரிவித்திருந்தார்....
திராவிட இயக்க வரலாற்றில் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்
இந்த ஆண்டு மே மாதம் மு.க, ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபின் சென்னை மைலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் மீண்டும் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துவருகிறது. ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி அன்னைத் தமிழில்...
போலீஸ் துறை சிலநேரம் பொய்சாட்சி தயாரிப்பது எதனால்?
புலன் விசாரணையில் குற்றவாளிக்குச் சாதகமாக விசாரணையை நகர்த்துகிறார் என்ற குற்றச்சாட்டும், எந்த குற்றமும் செய்யாத தன் மீது பொய்யான குற்றத்தைச் சுமத்த சாட்சிகளை உருவாக்குகிறார் என்ற குற்றச்சாட்டும் விசாரணை அதிகாரி மீது வாதியும், குற்றம் சாட்டப்பட்டவரும் கூறுவது உண்டு. இவ்விரு...
இது கபாலீஸ்வரர் கோயில் சொத்து: யாரைக் கேட்கிறாய் வாடகை? எதற்குக் கேட்கிறாய் குத்தகை?
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பழமையானது. பல்லவ மன்னர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. திருஞான சம்பந்தரால் தேவார பதிகம் பாடப்பட்ட தலம். முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கியங்கள் உள்ளன. தாண்டவ கவிராயர் இக்கோயில் குறித்து ‘திருமயிலை யமக அந்தாதி’ நூலை உ.வே.சா 1936 ஆம் ஆண்டில்...
அரசியுல் துறவுக்குப் பின் ‘அண்ணாத்த’ நிலை என்ன?
தமிழ்த் திரையுலகில் மின்னிய நட்சத்திரங்களின் வரிசையில் முதன்மையான இடம் ரஜினி காந்துக்கு உண்டு. சற்றேறக்குறைய நாற்பது ஆண்டுகளாகத் திரைப்படங்களில் நாயகனாகவே நடித்தும், நடிகைகளுடன் டூயட் பாடியும் முத்திரை வசனங்களை முழங்கியும் வரும் ரஜினி காந்தின் படங்கள் இன்றுவரை பெரும்பாலான சந்தர்ப்பங்களில்...
இடஒதுக்கீடு: 100 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி தொடங்கியது
அரசியலில் ஒரு நூற்றாண்டு என்பது மிகப்பெரிய காலம். தமிழகத்தைப் பொறுத்தவரை கம்யூனல் ஜி.ஓ. என்று அழைக்கப்படும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டு இன்றோடு நூறாண்டுகள் நிறைவுறுகின்றன. அரசியலிலும் சமூகத்திலும் அது ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. பிராமணரல்லாதோர் இன்று...
காவல்துறையின் கருப்பு ஆடுகளுக்கு கருணை காட்டுவது எப்படி தீங்கு விளைவிக்கும்
ரவுடிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து, அவர்களின் குற்றச் செயல்பாடுகளை முறியடிப்பதற்காக ‘ரவுடி ஸ்குவார்ட்’ என்ற பெயரில் தனிப்படைகளைப் பல மாவட்ட எஸ்.பி.களும், காவல் ஆணையர்களும் உருவாக்கி, அவைகளை அவர்களின் நேரடி கண்காணிப்பில் செயல்பட அனுமதித்து வந்த காலகட்டம் அது. ரவுடிகளின் செயல்பாடுகள்...
பாரதியைப் போற்றும் திமுக, தூற்றும் திக
”பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்” என்றான் பாரதி. அதை மெய்யாக்கும் நோக்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாரதி நினைவு நூற்றாண்டில் 14 புதிய திட்டங்களை வெளியிட்டுள்ளார். அதில், பாரதி பிறந்தநாள் ‘மகாகவி நாளாக’ கடைப்பிடிக்கப்படும், பாரதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புக்கள் 37 லட்சம்...
தமிழ்நாடு ஆளுநராக முன்னாள் தேசியப் பாதுகாப்பு அதிகாரி: அமைதிப்பூங்காவை பிரிவினை பூமிபோல் பார்க்கலாமா?
தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக இருந்த ரவீந்திர நாராயண ரவியை தமிழ்நாட்டு ஆளுநராக ஒன்றிய அரசு நியமித்துள்ள நடவடிக்கை மாநில அரசியல் அரங்கில் எதிர்மறைக் கருத்துகளை எழுப்பியுள்ளதற்கு பல நியாயமான காரணங்களை அடுக்கலாம். ஜம்மு-காஷ்மீரைப் போலவும் வடகிழக்கு மாநிலங்களைப் போலவும் பிரிவினைவாத இயக்கங்களும்...
தமிழக வளர்ச்சிக்கு நல்லது! வரவேற்போம் புதிய ஆளுநரை!
யாரும் எதிர்பாராத வகையில் திடீர் திருப்பமாக நாகாலாந்து ஆளுநர் ரவீந்திர நாராயண ரவியை தமிழ் நாட்டு ஆளுநராக குடியரசுத் தலைவர் வெள்ளிக்கிழமை நியமித்தார். பஞ்சாப் ஆளுநராக மாற்றப்பட்ட பன்வாரிலால் புரோஹித் இடத்தை அவர் நிரப்புகிறார். தடாலடியான ஆளுநர் மாற்றத்துக்கு அவசர தேவை எதுவும் இல்லாத நிலையில்...
Read in : English