Site icon இன்மதி

இடஒதுக்கீடு: 100 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி தொடங்கியது

இடஒதுக்கீட்டுக்கு முன்னோடியாக இருந்த Communal GO

Read in : English

அரசியலில் ஒரு நூற்றாண்டு என்பது மிகப்பெரிய காலம். தமிழகத்தைப் பொறுத்தவரை கம்யூனல் ஜி.ஓ. என்று அழைக்கப்படும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டு இன்றோடு நூறாண்டுகள் நிறைவுறுகின்றன. அரசியலிலும் சமூகத்திலும் அது ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. பிராமணரல்லாதோர் இன்று சமூகத்திலும் அரசியலிலும் அதிகாரம் பெற்று உயர்ந்திருக்கிறார்களென்றால் அதற்கு அந்த அரசாணைதான் காரணம். இன்று தமிழகத்தில் 60 சதவீதம் இட ஒதுக்கீடு வழக்கத்தில் உள்ளது. 

1921-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி இந்த அறிக்கையானது அப்போதையை நீதிக்கட்சி அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது. வருவாய் துறையில் ஏற்கெனவே இருந்த ஏற்பாட்டை மற்ற துறைகளுக்கும் நீட்டிப்பதற்கான ஏற்பாடே இந்த அறிக்கை. பிராமணரல்லாதோரின் எண்ணிக்கையை எல்லா துறைகளிலும் அதிகரிக்க வேண்டும் என்று நோக்கத்திலேயே அது வெளியிடபட்டது. அப்படி பிராணரல்லாதோர் பணியில் அமர்த்தப்பட்டது குறித்து ஆண்டு தோறும் ஜனவரி 15 மற்றும் ஜூன் 15-ம் தேதிக்குள் அரசுக்கு தெரிவிக்கப்பட் வேண்டும்  என்றும் அந்த  அறிக்கை தெரிவிக்கிறது. 

இந்த அரசாணையைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் அந்த அரசாணை வெளியாவதற்கான நிர்ப்பந்தம் உருவாகிய சூழல் குறித்து அறிய வேண்டியது அவசியமாகிறது. இந்த அரசாணையின் தொடக்கமானது 1916-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பிராமணரல்லாதோர் அறிக்கையில் அமைந்திருக்கிறது. 

நீதிக்கட்சிக்கு முந்தைய அமைப்பான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation)  டாக்டர் சி. நடேசன், டி.எம். நாயர், தியாகராய செட்டி ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அச் சங்கமானது கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் பிராமணரல்லாதோரின் பிரதிநிதித்துவம் குறித்து தொடர்ந்து பேசிவந்தது. அதன் செயலாளரான பி. தியாகராய செட்டியார் 1916-ஆம் ஆண்டு அந்த அறிக்கையை வெளியிட்டார். 

“சென்னை மாகாணத்தில் வசிக்கும் 4.01 கோடி பேரில், 4 கோடிக்கும் குறைவில்லாதவர்கள் பிராமணரல்லாதோர். வரி செலுத்துவோரில் பெரும்பகுதியினர் அவர்கள்தான். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஜமீன்தார்கள், நிலம் வைத்திரு்பவர்கள், வேளாண்மை செய்பவர்கள் என எல்லோருமே அவர்கள்தான் ஆனால் மாகாண அரசியலில் அவர்களுக்கான இடத்தை ஏற்கவில்லை. மக்களுக்கிடையே அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கை அவர்கள் பயன்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்காக அவர்கள் செயல்படவில்லை,” என்று  அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 

பிராமணரல்லாதோரின் கோரிக்கையின் நியாத்தைப் புரிந்து கொள்ள சில புள்ளிவிவரங்கள்தேவைப்படுகின்றன. சுமார் 3 விழுக்காடு மட்டுமே இருந்த பிராமணர்கள் எல்லாத்துறைகளையும் ஆக்கிரமித்திருந்தனர்.

1912-ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசின் புள்ளிவிவரப்படி, அரசு உயர்பதவிகளில் பிராமணர்களே கோலோச்சினர். துணை ஆட்சியரில் 55 விழுக்காடும், துணை நீதிபதிகள் பதவியில் 83.3 விழுக்காடும், மாவட்ட முன்சீப் பதவியில் 72.6 விழுக்காடு பேரும் இருந்தனர். வருவாய் மற்றும் நீதித்துறையில் தாசில்தார்கள், துணை தாசில்தார், தலைமை குமஸ்தாவாகவும் அவர்களை இருந்தனர்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் படிப்பில் 67.71 விழுக்காடு மாணவர்கள் பிராமணர்களே. சட்டப்படிப்பில் அவர்களின் பங்கேற்பு 73.57 விழுக்காடு. மருத்துவத்துறையில் அவர்களுடைய எண்ணிக்கைக் குறைவாக இருந்தது. இருப்பினும் அப்போதெல்லாம் மருத்துவம் படிக்க வேண்டுமானால் சமஸ்கிருத மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற விதி இருந்தது.
இந்நிலையை

மாற்றி, பிராமணரல்லாதோருக்கு வேலை வாய்ப்பில் பங்களிக்கவே வகுப்புவாரி பிரதிநித்துதவ அரசாணை வெளியிடப்பட்டது. அதில் பிராமரல்லாதோர், இசுலாமியர்கள், கிறித்தவர்கள் மற்றும் ஆதி திராவிடர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிப்பதற்கு வகை செய்யப்பட்டது. ஆணை வெளியிடப்படுவதற்கு முன்னதார, சட்டப்பேரவையில் அது ஒரு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
பணியில் அமர்த்தி விட்டு, பணியில் சேர்ந்தவர்களை தனித்தனியாக பிரித்து அரசுக்கு தெரிவிக்க அந்த ஆணை தெரிவித்தது. அதன் படி, பிராமணர்கள், பிராமணரல்லாத இந்துக்கள், இந்திய கிறித்தவர்கள், இசுலாமியர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்கள், மற்றவர்கள் என பிரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சிர்களும், மாவட்ட நீதிபதிகளும் பல்வேறு துறைத் தலைவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

1912-ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசின் புள்ளிவிவரப்படி, அரசு உயர்பதவிகளில் பிராமணர்களே கோலோச்சினர். துணை ஆட்சியரில் 55 விழுக்காடும், துணை நீதிபதிகள் பதவியில் 83.3 விழுக்காடும், மாவட்ட முன்சீப் பதவியில் 72.6 விழுக்காடு பேரும் இருந்தனர். வருவாய் மற்றும் நீதித்துறையில் தாசில்தார்கள், துணை தாசில்தார், தலைமை குமஸ்தாவாகவும் அவர்களை இருந்தனர்.  

ஆனால் அந்த ஆணை பெயரளவிலேயே இருந்தது. செயல்படுத்தப்படவில்லை. அதை செயல்படுத்துவதற்காக மறுபடியும் 1922-ஆம் ஆண்டு இரண்டாவது வகுப்புவாத பிரதிநிதித்துவ ஆணை வெளியிடப்பட்டது. கல்வி நிலையங்களில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அந்த ஆணைப் பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் நீதிக்கட்சி அரசாங்கத்தால் இந்த ஆணைகளை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.

1928-ஆம் ஆண்டு டாக்டர் பி. சுப்பராயன் முதலமைச்சரான பிறகே அவை தீவிரமாக செயல்படுத்தப்பட்டன. அவருடைய அமைச்சரவையில் கல்வி மற்றும் சுங்கத்துறை அமைச்சராக இருந்த எஸ். முத்தையா முதலியார் அவற்றை நிறைவேற்ற பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி பெற்றார். அதனால் வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை என்றாலே முத்தையா முதலியார்தான் என்ற அளவுக்கு அதை செயல்படுத்தியதில் அவருடைய பங்கு இருந்தது.

இதற்காக தனியாக 1928-ஆம் ஆண்டு மூன்றாவதாக ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. வேடிக்கை என்னவென்றால் இந்த ஆணையில் பிராமணர்களுக்கு 16 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தது. அந்த ஆணையின் படி, 12 காலியிடங்கள் இருந்தால், அதில் பிராமணரல்லாதோர் 5 பேரும், இசுலாமியர்கள் 2 பேரும், ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் கிறித்தவர்கள் (ஐரோப்பியர் உட்பட) 2 பேரும் மற்ற ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் ஒருவரும் என தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அவர்கள் எந்தெந்த வரிசையில் நிரப்பட்ட வேண்டும் என்று விவரமாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த வரிசைப்படி ஒரு பிரிவைச் சேர்ந்தவர்

பணியில் சேர மறுத்துவிட்டால், வரிசையில் இருக்கும் அடுத்தப்பிரிவை சேர்ந்தவர் நியமிக்கப்படலாம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவான போது வகுப்புவாரி பிரிதிநிதித்துவத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றம் அதை இரத்து செய்தது. இதற்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. திராவிட இயக்கத்தினரை பொறுத்தவரை ஏதோ இட ஒதுக்கீடுக்காகத்தான் திருத்தம் கொண்டுவரப்பட்டது போல ஒரு கருத்தைத் தெரிவிப்பார்கள். ஆனால் 14 விசயங்களுக்காகவே அத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில் இட ஒதுக்கீடு 4-ஆவது அம்சமாகவே இடம் பெற்றது.

இன்று இட ஒதுக்கீடு அதிகரித்து 69 விழுக்காட்டை எட்டியுள்ளது. 1987-ஆம் ஆண்டு வாக்கில் பாமக நிறுவனர் எஸ். இராமதாஸ் நடத்திய போரட்டத்தின் விளைவாக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு தனியாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழகத்தில் அடையாள அரசியலுக்கும் அது வழி வகுத்தது. இராமதாசின் வெற்றியால் ஊக்கம் பெற்ற மற்ற சாதியினர்,1990-களின் மத்தியில் தமிழகத்தில் சாதி அமைப்புகளைக் கட்சிகளாக்கி வலம் வந்தனர். ஆனால் 2001-ல் அக்கட்சிகள் சந்தித்த தோல்வி, சாதி அரசியலுக்கு சற்று பின்னடவை ஏற்படுத்தியது. இருப்பினும் சாதி என்பது அரசியலில் முக்கிய அடையாளமாக மாறி விட்டது. எல்லாக் கட்சிகளுமே குறிப்பிட்ட சாதியினருக்கு அவர்களின் பலத்துக்கு ஏற்ப இடம் ஒதுக்க வேண்டிய நிலைமை. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் அவர்களின் பலத்தின் அடிப்படையில் அமைச்சர் பதவி.
ஆதி திராவிடர்கள் இந்த இட ஒதுக்கீட்டால் பயனடைந்தாலும் அரசியலிலும் அரசுப் பணிகளிலும் இடைநிலை சாதியினரை மிஞ்சி எதுவும் செய்ய முடியாத நிலை. அமைச்சர் பதவி என்று வந்தால் சமூக நலம், ஆதி திராவிடர் நலம் என்ற சிறிய அமைச்சரவைகளே அவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. இத்தனைக்கும் அவர்கள் மக்கள் தொகையில் 21 விழுக்காட்டை எட்டிப் பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது சாதி வாரி இட ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை முன்னெழுந்துள்ளது. சாதி ஒழிப்பு கணக்கெடுப்பு முடிந்து அதன் முடிவுகள் வெளியாகும் போது அரசியல் இன்னொரு பரிமாணம் பெறும் என்பதில் ஐயமில்லை.

Share the Article

Read in : English

Exit mobile version