பிரபல நடிகர் பிரதாப் போத்தன்: இனிய பொன்நிலா இனியில்லை…
ஜூலை 15 வியாழக்கிழமை காலையில்எப்போதும்போல் ஃபேஸ்புக்கைத்திறந்தபோது, முதலில் கண்ணில் பட்ட பதிவுகளில் சில இயக்குநர் பிரதாப் போத்தனுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருந்தன. ஐயோ பிரதாப் இறந்துவிட்டாரா என்றிருந்தது. அவருடன் எனக்கொன்றும் நேரிடையான பரிச்சயம் இல்லை. அவரது வெறித்தனமான ரசிகனும் அல்ல நான்....