பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்
நரிக்குறவர் எனத் தமிழகப் பொதுவழக்கில் அழைக்கப்படும், அக்கிபிக்கி என்ற பழங்குடியினர், நாடோடிகளாக வாழ்ந்த சமூகம். கர்நாடகாவில் ஹக்கிபிக்கி என்றும், ஆந்திராவில், நக்கவாண்டோ என்றும் அழைக்கப்படுகின்றனர். உண்டி வில்லால் பறவை வேட்டை, நரி பிடிப்பது, பச்சை குத்துவது போன்றவற்றைப் பாரம்பரிய...