Read in : English
எழுத்தாளர் பாரதிமணி சொல் அல்ல செயலே அறம்
சுவாரசியம் தரும் படைப்புகளை தந்த பாரதிமணியின் மரணம் இந்த வாரம் துவக்கத்தில் நிகழ்ந்தது. வாழ்வின் எல்லா தருணங்களையும் மிக கண்ணியமாக எதிர்கொண்டவர். மரணம் குறித்து அறிவிப்பில், ‘நோயை கண்ணியமுடன் எதிர்கொண்டார்’ என்று அவரது மகள் குறிப்பிட்டிருந்தார். நடிகர், எழுத்தாளர், சமையல் கலையில் வல்லவர் என...
வேளாண் சட்டங்கள் வாபஸ்: தேர்தல் பயமா? தமிழக விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள்?
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓராண்டு காலமாக தில்லியில் விவசாயிகள் தொடர்ந்து இடைவிடாமல் போராடி வந்த சூழ்நிலையில், திடீரென்று அச்சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் விவசாயிகள் தங்களுக்கு எதிராகத்...
மீண்டும் பள்ளிக்கூடம்: இடைநின்ற மாணவர்களைப் பள்ளிக்குக் கொண்டு வருவது எப்படி?
மீண்டும் பள்ளிக்கூடங்கள் திறந்தாலும்கூட, இந்த 19 மாத காலத்தில் தங்களது வாழ்வாதாரம் கருதி பள்ளிப் படிப்பைவிட்டுவிட்ட வேறு வேலைக்குப் போன மாணவர்களை மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வருவது என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்கிறார்கள் கல்வியாளர்கள். கொரோனாவின் பாதிப்புகள் குறைய தொடங்க...
ஜெய்பீம்: வாரண்ட் இல்லாமல் கைது செய்யும் அதிகாரம் போலீசுக்கு எதற்கு?
ஜெய்பீம் திரைப்படம் போலீஸ் அத்துமீறல்களையும் அடக்குமுறையையும் மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து பொது விவாதப் பொருளாக்கியுள்ளது. கடந்த 120 ஆண்டுகளுக்கும் மேலாக, நமது கிரிமினல் நடைமுறைச் சட்டம் (Criminal Procedure Code), சட்டப்பிரிவுகள் 41(1) a, 41 (1) b, 41 (1) b a ஆகியவை, இந்திய...
தலைமை நீதிபதி பானர்ஜி மாற்றம்: பண்டாரியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக்குவதற்காகவா?
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீப் பானர்ஜி, மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றபட்டுள்ள அதேநேரத்தில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியான மிகவும் மூத்த நீதிபதியான மூனீஸ்வர்நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தற்போதைய உச்ச...
பத்மஸ்ரீ விருது பெறும் நாதஸ்வர தம்பதிகள்!
இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது ஷேக் மெகபூப் சுபானி மற்றும் காலிஷா மெகபூப் என்ற விசேஷ நாகஸ்வர தம்பதியரை வந்தடைந்துள்ளது. இது இந்த இரு கலைஞர்களுக்குக் கிடைத்த கௌரவம் மட்டுமில்லை. நாகஸ்வரக் கலைக்கே கிடைத்த மறுஅங்கீகாரமாகும். இவர்கள் ஏழு தலைமுறைகளைத் தாண்டி இப்போது எட்டாவது தலைமுறையினராக இந்த ஒப்பற்ற...
மாநிலங்களின் சுயநலனில் சிக்கித் தவிக்கும் முல்லைப் பெரியார் பிரச்சினை!
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்ட காலத்தில், மக்களிடம் ஆழ்ந்த ஒற்றுமை நிலவியது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, நிர்வாகத்துக்காக தன்னாட்சியுடன்கூடிய மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, தேசியப் பெருமிதத்துக்கு எதிரான கட்டமைப்புத் தடைகள் உருவாயின. இதனால், உணர்ச்சியால்...
தமிழ் திரையிசையில் மழை எனும் ஆதி ஊற்று!
எந்த மொழி சினிமாவானாலும், மழை என்பது எப்போதும் ஒரு பேண்டஸி. வார்த்தைகளில் விவரிக்கமுடியாத வேதனைகளானாலும், ஏக்கங்களானாலும், ஆசைகளானாலும், அபிலாஷைகளானாலும், கதாபாத்திரங்களின் மீது படரும் மழைத்துளி அவற்றை மனதுக்குள் இருந்து இழுத்துவரும். குறிப்பாக, நாயகன் மனச்சோதனைக்கு உள்ளாகும்போதெல்லாம் வானம்...
மதிஸ்போர்ட்: தீபாவளி மிக்சரில் மேற்பகுதியில் தெரியும் முந்திரிப் பருப்பும் வேர்க்கடலையும்.The Eight Column
பிரேசில் மரக்கொட்டை விளைவு சிறிய பரிசோதனை ஒன்றை செய்து பாருங்கள்.இரண்டு மூன்று உடைக்காத முழு முந்தரி பருப்பை எடுத்துக்கொள்ளுங்கள். டி குடிக்கும் கண்ணாடி கிளாசில் கிழே இடுங்கள். அதன் மீது கிளாசின் முக்கால் பாகம் நிரம்பும் படியாக உரித்த முழு நிலக்கடலை (வேர்கடலை) யைப் போடுங்கள். அந்தக் கிளாஸை...
தொடர்ந்து சென்னைக்குப் புயல் வெள்ளம் வந்தால் பாதிப்புகளை எதிர்கொள்வது எப்படி?
நவம்பர் 12ஆம் தேதியிலிருந்து சென்னையின் சில பகுதிகளில் சிறிய சாலைகளில் வழக்கத்துக்கு மாறாக மோட்டார் பம்புகள் பொருத்திய விவசாயத்துக்கான டிராக்டர்கள் வந்து போய்க் கொண்டிருந்தன. குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை அகற்றுவதற்காக பல இடங்களில் மோட்டார் பம்புகள் இயங்கிக் கொண்டிருந்தன....
Read in : English