பொன்னியின் செல்வன்: விளம்பரங்கள் வெற்றிக்கு உதவுமா?
ஒரு திரைப்படம் வெளியாவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே பாடல்கள் வெளியாகும். புகைப்படங்கள், செய்திகள் தினசரிகளிலும் பத்திரிகைகளிலும் இடம்பெறும். சில வாரங்கள் முன்பாக பத்திரிகைகளிலும், வானொலியிலும் விளம்பரங்கள் வரும். இவ்வளவு ஏன், சுவர்களில் வண்ணம் தெரியாத அளவுக்குச் சுவரொட்டிகளும் கைகளால் வரைந்த...