Read in : English
வடக்கும் தெற்கும்: தென்னிந்தியா தண்டிக்கப்படுவது ஏன்?
நீங்கள் இடதுசாரியாக இருக்கலாம்; வலதுசாரியாக இருக்கலாம்; இரண்டுமில்லாமல் மத்திமமாகவும் இருக்கலாம். யாராக இருந்தாலும், ஒரு சமூகத்தில் குழந்தைகள் இறப்பதை யாரும் விரும்பமாட்டார்கள். இந்தக் கருத்தை இன்மதிக்கு அளித்த ஒரு நேர்காணலில் தரவியல் விஞ்ஞானி ஆர்.எஸ்.நீலகண்டன் கூறினார். அரசாங்கம் பின்பற்றும்...
சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ தருவது ஆச்சர்யமா? அதிர்ச்சியா?
இன்றைய தமிழ் திரைப்பட நட்சத்திரங்களில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன். விஜய், அஜித் படங்களைப் போலவே இவரது படங்களும் அதிக முன்பதிவைப் பெற்று சாதனை படைத்து வருகின்றன. கோவிட்-19க்கு பிறகான காலகட்டத்தில் வெளியான ’டாக்டர்’ மற்றும் கடந்த மே மாதம் வெளியான ‘டான்’ இரண்டுமே நூறு...
அதிக அபராதம்: சாலை விதிமீறல் அடங்குமா?
சாலை விதிமீறல்களில் ஈடுபடும் மோட்டார் வாகன ஓட்டிகளைத் திருத்த அரசு எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்கள் திருந்தியபாடில்லை. கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 13) அன்று தமிழ்நாடு அரசு மற்றொரு நடவடிக்கையை அறிவித்திருக்கிறது. சிஏஜி உட்பட பல்வேறு அரசு சாரா நிறுவனங்கள் நீண்ட நாளாகச் சொல்வது போல சாலை விதிமீறல்...
உழைப்பாளர்களுக்கான வில்லிசை!
சினிமா, தமிழக கிராமங்களில் புகுந்து கொண்டிருந்த காலம் அது. கன்னியாகுமரி மாவட்ட கிராமப் பகுதியில் வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம் போன்ற கலைகள் பிரபலம். கோடை அறுவடைக்குப் பின், கொடை விழாக்கள் இந்த கலைகளால் சிறக்கும். அவற்றில் பூங்கனி என்ற வில்லிசைக் கலைஞர் பெயர் நிரம்பி இருக்கும். அவர் குரல்...
தோப்பூர் சாலை: ஆபத்து நீங்குமா?எட்டாவது நெடுவரிசை
தர்மபுரி மாவட்டம் சேலம்-பெங்களூரு நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான தோப்பூர் சாலைதான் தென்னிந்தியாவின் மிக ஆபத்தான சாலை. இதை நான் கூறவில்லை. கடந்த ஞாயிறு அன்று வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரி ஒருவர் நுகர்வோர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் கூட்டத்தில் இப்படிக் கூறினார். போக்குவரத்துத் துறை...
தென்னிந்திய மொழிகளுக்கான ஒரே அகராதி
பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காத கேரளாவைச் சார்ந்த என்.ஸ்ரீதரன் தமிழ், மலையாளம், தெலுங்கு, மற்றும் கன்னடம் ஆகிய நான்கு திராவிட மொழிகளுக்கான ஓர் ஒருங்கிணைந்த பன்மொழி அகராதியை 2018-ல் தயாரித்தார். அதன் பின்னால் அவரின் 25 ஆண்டு கால அயராத உழைப்பு மறைந்திருக்கிறது. ‘சதுர்திராவிட பாஷா நிகண்டு’ என்ற...
திருமாவளவன் பற்றிய மிகைப்படுத்தல் தேவையா?
தமிழகத்தின் பிரதானமான தலித் தலைவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் பற்றி நான் நிறையவே எழுதிவிட்டேன். ஆனால் அருமை நண்பர் என். ரவிக்குமார் சமீபகாலமாக திருமாவளவனைப் பற்றி ’ஆகா ஓகோ’ என்று புகழ்ந்து எழுதியதை வாசித்தபோது எனக்கு மீண்டும் எழுத ஆவல் எழுந்தது. திருமாவளவன்...
ஆம்னி பேருந்து: தொடரும் அதிர்ச்சி!எட்டாவது நெடுவரிசை
தீபாவளிக்குப் பட்டாசு, பொங்கலுக்குக் கரும்பு என்று ஒவ்வொரு பண்டிகைக்கும் ஓர் அடையாளம் உண்டு. போலவே, ஆம்னி பேருந்து என்றால் பண்டிகைக் கால கட்டண உயர்வு என்பதையும் தவிர்க்க முடியாதுபோல. அது சரியா தவறா என்றொரு விவாதம் வழக்கம் போல காரசாரமாக நடந்துகொண்டிருக்க, இன்னொருபுறம் ‘தற்போதிருக்கும் ஆம்னி...
ஜெயலலிதா மரணம்: விலக்கப்படும் திரை!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையானது வி.கே. சசிகலா, மருத்துவர் கே.எஸ். சிவக்குமார், சிகிச்சை வழங்கப்பட்ட காலகட்டத்தில் சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்...
மூன்றாவது மாஸ்டர் பிளான்: சிங்காரச் சென்னை கனவு பலிக்குமா?
சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் (சிஎம்டிஏ) சார்பாக சென்னைக்கான மூன்றாவது மாஸ்டர் பிளான் தயாரிப்பு ஆயத்தப் பணிகள் ஆரம்பமாகிவிட்டன. ஆதலால் இந்தப் பெருநகரம் ஜீவத்துடிப்புள்ள மாநகரமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. கனடா-அமெரிக்கப் பொருளாதார மேதையும், 1960-களின் ஆரம்பத்தில்...
Read in : English