Site icon இன்மதி

காட்டு யானை பிரச்சினை: இரு மாநிலங்கள், இரு விதமான அணுகுமுறைகள்!

Read in : English

ஊருக்குள் புகுந்து களேபரம் செய்த காட்டு யானை ஒன்றுக்கு பி.எம்.2 (பந்தலூர் மக்னா–2) என்று பெயரிட்டு இருக்கிறார்கள். கூடலூர் காட்டுப்பகுதிகளில் உள்ள அந்த காட்டு யானைக்கு தமிழ்நாடு வனத்துறை, கண்காணிப்புப் பட்டையைக் கட்டியிருக்கிறது. அண்மையில் கேரள வனத்துறை அந்த முரட்டு காட்டு யானையைப்

பிடித்திருக்கிறது. இது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் அபாயகரமாக உள்ள விலங்குகளை கண்காணிப்புப் பட்டையைக் கட்டிவிட்டு சுதந்திரமாக சுற்றித் திரிய விடுவது சரியா என்பதுதான் அந்த சர்ச்சை. பி.எம்.2 என்று பெயரிடப்பட்ட அந்த காட்டு யானை கூடலூரில் இரண்டு பேரை கொன்றிருக்கிறது. தோப்புகளில் இரவில் நுழைந்து ஊழியர்களின் குடிசைகளை சூறையாடி அரிசியைத் தின்றுவிடும் என்று ஏற்கனவே கெட்ட பெயர் வாங்கியிருக்கிறது. கூடலூர் பகுதியில் வீடுகளை உடைத்திருக்கிறது.

வீடுகளில் சேமிப்புக் கிடங்கு எங்கு இருக்கிறது என்பதை இந்த முரட்டு காட்டு யானை தனது கூர்மையான அறிவால் கண்டுபிடித்து, அதை உடைத்து அரிசி மூட்டைகளை தூக்கிச் செல்லும். யானையின் இந்த சாதுரியத்துக்காக கூடலூர் பகுதி மக்கள் அதை அரிசி ராஜா என்று பெயரிட்டிருக்கிறார்கள். வீடுகளில் இருப்பவர்கள் சத்தம் போடக்கூட மாட்டார்கள் ஏனென்றால் அது தங்களையும் தாக்கிவிடும் என்ற அச்சத்தினால்.

மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் அபாயகரமாக உள்ள விலங்குகளை கண்காணிப்புப் பட்டையைக் கட்டிவிட்டு சுதந்திரமாக சுற்றித் திரிய விடுவது சரியா என்பதுதான் அந்த சர்ச்சை

அந்த காட்டு யானை அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியதும் அதனால் சிலர் உயிர் இழந்ததையும் அடுத்து வனத்துறை டிசம்பர் 9ஆம் தேதி அந்த யானையைப் பிடித்தது. பொது மக்களின் எதிர்ப்பை பொருட்டாகக் கருதாமல், அந்த யானைக்கு கண்காணிப்புப் பட்டையைக் கட்டிவிட்டு, அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டுபோய்விட்டது வனத்துறை.

வனத்துறையின் மனிதத் தன்மையற்ற மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து பொது மக்கள் தரப்பில் புகார்கள் வந்ததை அடுத்து, யானையின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படும் என்றும் அது மீண்டும் மனிதர்கள் வாழும் பகுதிகளில் நுழைய அனுமதிக்கப்படாது என்றும் வனத்துறை உறுதி அளித்தது.

மேலும் படிக்க: காடுகளைச் சுற்றி பஃபர் மண்டலங்கள்: கொதித்தெழும் விவசாயிகள்!

இருந்தாலும் மனிதர்கள் வாழும் பகுதிகளில் யானை நுழைவதைத் தடுப்பதை விட்டுவிட்டு, ஊருக்குள் யானை வந்தால் வீட்டுக்கு வெளியே வராதீர்கள் என்று ஊர் மக்களை எச்சரித்தது வனத்துறை. இதன் மூலம் அந்த யானை தான் ராஜா என்றும் மக்கள் தங்கள் நடமாட்டத்தை யானையின் விருப்புவெறுப்புக்கேற்ப கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

இருந்தாலும் அந்த யானை கூடலூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள காட்டுப் பகுதிக்கு சுல்தான் பத்தேரி அருகே தாண்டிச் சென்றது. ஜனவரி 6 அன்று கருக்கலில் அந்த யானை ஊருக்குள்ளே சுற்றித் திரிவதைப் பார்த்து அந்த ஊர் மக்கள் திகிலடைந்தனர். சுல்தான் பத்தேரி வாழ் ஊர் மக்கள். அந்த யானை ஒரு பேருந்தைத் தாக்க முயற்சிப்பது சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.

கூடலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் வீடுகளை உடைத்து அங்கு வைத்திருக்கும் அரிசி மூட்டைகளை தூக்கிச் சென்றதால் அரிசி ராஜா என்று பெயர் பெற்ற பிஎம் 2 காட்டு யானை மயக்க ஊசி போடப்பட்டு பிடிக்கப்பட்டது.

நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு ஆதரவற்ற மனிதன் அதனுடைய தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பினார். கேரளா வனத்துறை அலுவலர்கள் தீவிர முயற்சி செய்து மூன்று நாட்களில் அந்த யானைப் பிடித்தனர்.

இப்பொழுது அது ராஜாவாக அது சுதந்திரமாகத் திரியவில்லை. தற்போது, வயநாடு முத்தங்காவில் உள்ள யானை முகாமில் இருக்கிறது. காட்டு விலங்கு வல்லுநர்கள், கால்நடை மருத்துவர்கள், மாவட்ட வனத்துறை அலுவலர்கள், சரக அலுவலர்கள், மற்றவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் இந்த நடவடிக்கைக்கு வழிகாட்ட அங்கே இருந்தார்கள். யானை தாமதமின்றி பிடிக்கப்படுவதை உறுதி செய்யவும் மேலும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் வனத்துறை அமைச்சரே வயநாடு வந்திருந்தார்.

காட்டில் இருந்து யானை முகாமிற்கு மாற்றும்பொழுது மயக்க மருந்து செலுத்திய கால்நடை மருத்துவர் அருண் ஜகாரியா மயிரிழையில் அந்த யானையிடமிருந்து தப்பினார். மேலே இருந்து அதன் மீது மயக்க மருந்து செலுத்திய போது அவரையும் வண்டிக்கு உள்ளே இழுக்கப் பார்த்தது. ஆனால் அதிலிருந்து அவர் தப்பிவிட்டார். அந்த யானை பழக்கப்படுத்தப்பட்டு மெதுவாக யானை ரோந்துக் குழுவில் சேர்த்துக் கொள்ளப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தார்கள். தமிழ்நாடு வனத்துறை  அந்த யானைக்கு மயக்க மருந்து கொடுத்து கண்காணிப்புப் பட்டை கட்டினாலும் அது எங்களுடையது என்று நல்ல வேளையாக உரிமை கோரவில்லை.

யானைகளுக்கும் புலிகளுக்கும் தனிக்கவனம் செலுத்தி வனத்துறையால் கணக்கெடுப்பு தொடர்ந்து நடத்தப்பட்டாலும் அவைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதால் அந்த எண்ணிக்கையை வெளியே அறிவிப்பதில் வனத்துறை துறைக்கு தயக்கம் இருக்கிறது

இப்படிப்பட்ட விலங்குகளை மீண்டும் காடுகளில் சுதந்திரமாகத் திரியவிடுவதற்குப் பதிலாக காடுகளில் குறிப்பிட்டபகுதிகளில் இருக்கும்படி கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் காடுகளின் பரப்பளவுக்கு அதிகமாக விலங்குகளின் எண்ணிக்கைக் கூடி வருவதால் இதுபோன்று பிரச்சினைக்குரிய விலங்குகளால் மீண்டும் இப்படிப்பட்ட நிலைமைகள் தொடர்வதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.

யானைகளுக்கும் புலிகளுக்கும் தனிக்கவனம் செலுத்தி வனத்துறையால் கணக்கெடுப்பு தொடர்ந்து நடத்தப்பட்டாலும் அவைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதால் அந்த எண்ணிக்கையை வெளியே அறிவிப்பதில் வனத்துறை துறைக்கு தயக்கம் இருக்கிறது. காடுகள் நெரிசலாகிக் கொண்டிருக்கின்றன என்பதற்கான அறிகுறிகள் மனித வாழ்விடங்களில் கடந்த பல ஆண்டுகளாகவே உணரப்படுகின்றது.

மேலும் படிக்க: நீலகிரி: உச்சத்தில் வனவிலங்குகள் அத்துமீறல்!

காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மட்டுமே இருந்து வந்த காட்டு விலங்குகளால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் இப்பொழுது காடுகளுக்கு பக்கத்தில் உள்ள ஊர்களையும் நகரப் பகுதிகளையும் எட்டியிருக்கிறது. இரவு சாய்ந்துவிட்டால் நீலகிரியில் உள்ள பட்டவயல், தேவலா, தேவர்சோலா, பித்ருகாடு, செரம்பாடி ஆகிய சிற்றூர்களில் ஏற்கனவே யானைக் கூட்டங்களால் அச்சுறுத்தல்கள் இருந்தன.

பிஎம்2 காட்டு யானையைப் பிடிப்பது குறித்து தனது குழுவினரிடம் விளக்கும் தெற்கு வயநாடு டிவிஷனல் வன அதிகாரி ஏ.ஷாஜனா.

அங்கு மக்கள் வீதிகளில் நடக்க பயந்தார்கள். இருட்டுவதற்கு முன்பே வேலைகளை முடித்து வீடுகளுக்கு வந்துவிடுகிறார்கள். இந்த ஊர்களின் வழியாக வாகனங்களில் செல்வதற்கும் பயப்படும் சூழ்நிலை உள்ளது. அதனால் அந்த சாலைகளை பெரும்பாலான வாகனங்கள் தவிர்க்க முயலுகின்றன.

இந்தப் பகுதியில் உள்ள பெரிய ஊர்களான கூடலூரும் பந்தலூரும் யானைக் கூட்டங்களால் தாக்குதலுக்கு ஆளாகின்றன. இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒரு நாள் அதிகாலையில் கூடலூர் நகர் வாழ் மக்கள் சாலையில் காட்டு யானை நடமாட்டம் இருப்பதைப் பார்த்தார்கள்.

அதே நேரத்தில், காலையில் நடைப்பயிற்சி செய்யும் மனிதர்களுக்கு யானை ராஜாவின் நடமாட்டம் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. இதற்கு முன்பு சிற்றூர்களில் யானைக் கூட்டங்கள் நடமாட்டம் இருந்தாலும்கூட நடந்திருந்தாலும் கூடலூர் நகரத்திற்கு உள்ளே யானைகள் புகுந்திருப்பது இதுதான் முதல்முறை.

Share the Article

Read in : English

Exit mobile version