இலவச வாக்குறுதிகள் சமூகநலனுக்கானவையா?
தலைமை நீதிபதி எம்.வி.ரமணாவின் தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் முன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு பொதுநலன் வழக்கொன்றை விசாரித்துக் கொண்டிருக்கிறது. அஷ்வினி குமார் உபாத்யாய என்னும் பாஜக உறுப்பினர் ஒருவர், தேர்தல் அறிக்கைகளில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத இலவச வாக்குறுதிகளைத் தரும் கட்சிகளின்...