உள்ளூர்ப் பொருளாதாரத்தின் ஊற்றுக்கண் உழவர் சந்தைகள்
'விளைய வைப்பதும் உழவரே; விலையை வைப்பதும் உழவரே' என்ற கொள்கை முழக்கத்தோடு தொடங்கப்பட்டதுதான் உழவர் சந்தை என்ற உயரிய திட்டம். இதைத் தமிழகத்தில் கொண்டு வந்த பெருமை மறைந்த முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களையே சேரும். உற்பத்தி செய்யும் உழவர்களே நேரடியாக தங்கள் பொருள்களைச் சந்தைப்படுத்த இயலும்...