சோழர் திரைப்படங்கள் வெற்றிபெறுமா?
பல்லாண்டுத் தடைகள் பல கடந்து இறுதியாக, சோழர் பெருமைபேசும் பொன்னியின் செல்வன் (பாகம் 1) மணிரத்தினத்தின் இயக்கத்தில் திரைக்கு வந்துவிட்டது. கடந்த தலைமுறைத் தமிழர்களோடு வேலோடும் வாளோடும் நடந்து வீரத்தமிழ் சொல்லாடிய சோழக் கதாபாத்திரங்கள் புத்தாயிர மின்னணுயுகத்தில் புத்துயிர் பெற்றுத் திரையில்...