நெல்லும் மரபும்: பாரம்பரிய நெல் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?
'சாலி நெல்லின் சிறை கொள் வேலி ஆயிரம் விளையுட்டு ஆக காவிரி புரக்கும் நாடு கிழவோனே' இப்படியாக கரிகால் பெருவளத்தானை, முடத்தாமக்கண்ணியார், பொருநராற்றுப்படையில் அழைக்கின்றார். இங்கு நாம் நோக்க வேண்டிய செய்தி, சாலி நெல் என்ற சொற்கோவை. வேலி நிலத்தில் ஆயிரம் கலம் விளையும் சாலி என்ற நெல்லைப் பற்றிய...