மத்திய பட்ஜெட்: டிஜிட்டல் சொத்து வரி தமிழக கிரிப்டோ வர்த்தகர்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
மத்திய பட்ஜெட்டில் டிஜிட்டல் சொத்துகள் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படும் என்று
கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஒழுங்குமுறைகள் தமிழ்நாட்டில் கிரிப்டோ தொடர்பான குற்றச் சம்பவங்களை குறைக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது
இந்தியாவில் புதிய டிஜிட்டல் சொத்து வரியானது, கிரிப்டோ சமூகத்தினரிடையே உள்ள நிச்சயமற்ற தன்மையை அகற்ற உதவும் என்கிறார் தமிழ்நாடு எமர்ஜிங் டெக்னாலஜிகளுக்கான சிறப்பு மையத்தின் (CEET) பிளாக்செயின் முன்முயற்சிக்கானத் தலைவர் இஷான் ராய். அவர் , இன்மதி இணையதளத்திற்கு அளித்த பேட்டி: