Read in : English
கன்னட சாளுவாலிகா அமைப்பின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வாட்டாள் நாகராஜ், காவிரிப் பிரச்சினைக்காக அரசியல் கட்சிகள் செப்டம்பர் 26 அன்று நடத்தவிருக்கும் வேலை நிறுத்தத்தை ஆதரிக்கவில்லை என்றாலும் காவிரியின் மீது கர்நாடகத்திற்கு பிரத்யேக உரிமை உள்ளது என்று பேசுபவர்களுக்கு ஆதரவாகவே இருக்கிறார்.
வாட்டாள் நாகராஜ், இன்மதிக்கு அளித்த நேர்காணலில் தன்னுடைய நிலைப்பாட்டை வலியுறுத்திப் பேசினார்; “காவிரி கர்நாடகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பிறப்பெடுப்பதாலும், பெரும்பாலும் கர்நாடகத்தின் அரசியல், புவியியல் எல்லைகளில் நீண்ட தூரம் பயணிப்பதாலும், காவிரி கர்நாடகத்திற்குத்தான் சொந்தம் என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன்.
இந்த நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் கர்நாடக அரசு தமிழக அரசோடு சமாதானமாகப் போவதற்காகக் கொள்ளும் அணுகுமுறையை நான் எதிர்க்கிறேன். காவிரி நதியை அப்படியே தமிழ்நாட்டிற்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட முடியாது. காவிரி தமிழ்நாட்டின் சொத்தாக மாறுவதைத் தடுக்க கன்னட சாளுவாலிகர்கள் மிகக் கடுமையாகப் போராடுவார்கள்.’
“காவிரி கர்நாடகக் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. கன்னடர்கள் அந்த நதியின் மீது ஓர் உணர்ச்சிமிக்கப் பந்தம் வைத்திருக்கிறார்கள். தெற்குக் கர்நாடகத்தில் அது எங்கள் உயிர்மூச்சு. அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் இலாபத்திற்காக காவிரி நதியைப் பயன்படுத்துவதைக் கன்னடர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்”
மேலும் அவர் சொன்னார்: “காவிரி, கர்நாடகக் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. கன்னடர்கள் அந்த நதியின் மீது ஓர் உணர்ச்சிமிக்கப் பந்தம் வைத்திருக்கிறார்கள். தெற்குக் கர்நாடகத்தில் அது எங்கள் உயிர்மூச்சு. அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் லாபத்திற்காக காவிரி நதியைப் பயன்படுத்துவதைக் கன்னடர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகத்திலும், தமிழகத்திலும் இருக்கும் அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் பிழைப்பிற்காக ரகசிய கூட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை நிறுத்தியாக வேண்டும். வெகுவிரைவில் கன்னடர்கள் அரசியல் ரீதியாக, தீர்க்கமாக அரசுக்குப் பதிலடி கொடுக்கத்தான் போகிறார்கள்.”
வாட்டாள் நாகராஜ் போராட்டம் நடத்தும் செப்டம்பர் 29 (வெள்ளிக் கிழமை) அன்றும், அவர் ஆதரிக்காத செப்டம்பர் 26 வேலை நிறுத்தத்தின் போதும், கர்நாடகத்தின் மூன்று மாநகரங்கள் முடக்கப்பட்டு விடும். பாஜக-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கும், காங்கிரஸ் (கர்நாடகாவின் ஆளும் கட்சி) மற்றும் திமுக (தமிழகத்தின் ஆளும் கட்சி) இடம் பெற்றிருக்கும் ’இந்தியா’ கூட்டணிக்கும் இடையிலான பலப்பரீட்சையாக இந்தப் பந்த் மாறியுள்ளது..
காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் மத்திய அரசை இழுக்க கர்நாடக அரசு முயற்சிக்கிறது. ஆனால் மத்திய அரசின் தலையீடு தேவையில்லை என்று மதச்சார்பற்ற ஜனதா தளம்- பாஜக கூட்டணி கூறி வருகிறது. மாறாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும், என்கிறது அந்தக் கூட்டணி.
மேலும் படிக்க: மீண்டும் சூடுபிடிக்கிறது மேகதாது அணைத் திட்ட சர்ச்சை!
காவிரிப் படுகையில் கர்நாடக அரசு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காததால், தமிழகத்தில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடாக தமிழக அரசு வழங்க முன்வருகிறது. ஆனால் அதிக இழப்பீடு வழங்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. பேரணிகள் மற்றும் போராட்டங்களை உள்ளடக்கிய யாத்திரையை நடத்த பாஜக தீர்மானித்திருக்கிறது.
பாஜக-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கும், காங்கிரஸ் (கர்நாடகாவின் ஆளும் கட்சி) மற்றும் திமுக (தமிழகத்தின் ஆளும் கட்சி) இடம் பெற்றிருக்கும் ’இந்தியா’ கூட்டணிக்கும் இடையிலான பலப்பரீட்சையாக இந்தப் பந்த் மாறியுள்ளது.. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி செப்டம்பர் 26-ஆம் தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டிய கர்நாடகாவின் கடமையை வலியுறுத்திய காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சொல்வதும் இதுதான்.
தமிழகத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்க சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் கர்நாடக அமைச்சரவை ஒருமனதாக முடிவு செய்துள்ளது. கர்நாடக அட்வகேட் ஜெனரல் கே.ஷசி கிரண் ஷெட்டி உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கடைப்பிடிப்பதின் மூலம் கர்நாடக அரசு சரியாக நடந்து கொண்டிருக்கிறது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்
துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், குடிநீர் வழங்குவதற்கு முன்னுரிமை அளிப்பதற்கான மாநிலத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். ”எங்கள் சட்ட வல்லுநர்கள் இந்த விஷயத்தில் அனைத்து அம்சங்களையும் தெளிவுபடுத்தியுள்ளனர். தற்போது விநாடிக்கு 7,000 கன அடி நீர்வரத்தும், 3,000 கன அடி வெளியேற்றமும் உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நாங்கள் முழுமையாக நிறைவேற்றுவோம்,” என்று செப்டம்பர் 25 அன்று அவர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார். தனது செல்லத் திட்டமான மேகதாது அணை விவகாரத்தை முன்னிறுத்தி இரு மாநிலங்களுக்குமிடையே தற்போது நிலவி வரும் மோதலையும் சிவக்குமார் அதிகமாக்கிவிட்டார்.
”மேகதாது திட்டம் மூலம் 177 டிஎம்சி நீர் கிடைக்கும். விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்து, தேவையான சுற்றுச்சூழல் அனுமதிகளை தீவிரமான முயற்சியோடு பெற்று, மு.க.ஸ்டாலினுக்கும் ஓர் அறிக்கையை வழங்க உள்ளோம்,” என்றார் அவர்.
தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடக் கூடாது என்று வலியுறுத்தி மாண்டியாவில் பந்த் நடத்த பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. பெங்களூருவில், மாநில அரசின் முடிவுக்கு எதிராக பல கன்னட ஆதரவு குழுக்கள் தொடர்ச்சியான போராட்டங்களைத் தொடங்கியுள்ளன, இதனால் மாண்டியா மற்றும் மாநிலத் தலைநகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: மேகதாது அணைக்கட்டு உபரிநீரைச் சேமிக்குமா?
தமிழக வேளாண் துறையின் சமீபத்திய தகவலின்படி, தமிழகத்தில் குறுவை பயிர் காப்பாற்றப்படலாம். திருவாரூர், திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் கடலூரின் சில பகுதிகளில் ஐந்து லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்படுகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டும் போது திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரைமுறை ஜூன் மாதத்தில் ஒரு முறையும், ஜூலையில் இரண்டு முறையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் மேட்டூர் அணை இந்த நீர்மட்டத்தைத் தொடர்ந்து பராமரித்து வந்தது.
Read in : English