Site icon இன்மதி

வெப்ப அலை செயல் திட்டத்தை செயல் படுத்த வேண்டும்

Read in : English

தமிழ்நாட்டில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், வெப்ப அலை வீசுவதால் பள்ளிக்கூடங்களை திறப்பது ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்பு கூறியிருந்தார்.

தமிழ்நாட்டில் கடும் வெப்பநிலை நிலவுவதால் பள்ளிக்கூடங்களைத் திறப்பதைத் தள்ளி வைக்க வேண்டும் என்று சில தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து பள்ளிக் கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.சென்னை உள்பட மாநிலத்தின் பல மாவட்டங்களில் நிலவும் கடுமையான வெப்பம், குறிப்பாக குழந்தைகளையும் உடல் உழைப்புத் தொழிலாளர்களையும் கடுமையாகப் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஈரமான துணியில் மூடப்பட்டிருக்கும் வெப்பமானி (ஈரமான பல்ப் தெர்மாமீட்டர்) மூலம் பதிவு செய்யப்படும் வெப்பநிலை வெட் பல்ப் வெப்பநிலை என்று கூறப்படுகிறது. உலர் பல்ப் வெப்பநிலைக்கும் ஈர பல்ப் வெப்பநிலைக்கும் இடையிலான வேறுபாடு அதிகமாக இருந்தால் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். ஈரப்பதம் அதிகரிக்கும் போதும், அதைப்போல சுற்றுப்புற வெப்பநிலை அதிகரிக்கும்போதும், இந்த வேறுபாடு சுருங்குகிறது.

சில நேரங்களில் ஆபத்தான அளவை எட்டுகிறது. அறிவியல் குறிப்புகளின்படி, 31 பாகை செல்சியஸ் அளவிலான ஈர பல்ப் வெப்பநிலை வெளிப்பாடு மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது; மூளை, இதயம் மற்றும் சிறுநீரக செயல்பாட்டைப் பாதிக்கிறது. 35 பாகை செல்சியஸ் அளவிலான ஈர பல்ப் வெப்பநிலையில் மனிதர்களின் மரணம் உறுதி. ஏனென்றால் அதிக ஈரப்பதம் ஆவியாவதைக் குறைக்கிறது அல்லது தடுக்கிறது என்பதால், உடல் வியர்வை மூலம் வெப்பத்தை சரிசெய்ய உடலால் முடியாது.

மற்ற மாநிலங்களை விட வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னேறியிருந்தாலும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் முறையான அணுகுமுறையைக் கொண்டிருந்தாலும், வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இன்னமும் மெத்தனமாக உள்ளது

மனித செயல்பாடுகள் மூலம் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு (கரியமில வாயு) வெளியிடப்படுவதால் ஏற்படும் பருவநிலை மாற்றம் காரணமாக, இந்திய துணைக்கண்டம், குறிப்பாக இந்தோ-கங்கை சமவெளி, காலப்போக்கில் அதிகமாக வெப்பமடையப் போகிறது என்பது கவலைக்குரிய ஒரு விசயம். 2022-ஆம் ஆண்டிலும் வட இந்தியாவில் கடுமையான வெப்ப அழுத்தம் ஏற்பட்டிருந்தாலும், நடப்பு ஆண்டில் வெப்பநிலை ஆகப்பெரும் சவாலை ஏற்படுத்துகிறது. மேலும் வரவிருக்கும் க்எல் நினோக்வினால் வெப்பநிலை மிகவும் ஆபத்தானதாக மாறும்.

அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் ஹான்சன் மற்றும் அவரது சகாக்களின் கூற்றுப்படி, இதுவரை மனிதகுலம் அறிந்திருந்த வெப்ப ஆண்டுகளிலே 2024-தான் ஆகப்பெரும் வெப்ப ஆண்டாக மாறும்; பல நாடுகளில் பேரழிவு விளைவுகள் ஏற்படலாம். மற்ற மாநிலங்களை விட வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னேறியிருந்தாலும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் முறையான அணுகுமுறையைக் கொண்டிருந்தாலும், வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இன்னமும் மெத்தனமாக உள்ளது.

மேலும் படிக்க: எச்சரிக்கை: ஈரக்குமிழ் வெப்பநிலையின் விளைவுகள் என்ன

தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டிலிருந்தே வெப்ப அலை  செயல்திட்டம் உள்ளது. மேலும் திமுக அரசு சென்னைக்கு நீருறிஞ்சிப் பூங்காக்கள் மற்றும் பசுமைப் பொதுவெளிகள் போன்ற திட்டங்களை அறிவித்திருக்கிறது. ஆனால் இந்தத் திட்டங்கள் மந்தகதியில்தான் நடைபெற்று வருகின்றன.  உதாரணமாக, தகவல் தொழில்நுட்ப வழித்தடத்தில் ரியல் எஸ்டேட்டை மையமாகக் கொண்ட புறநகரான சோழிங்கநல்லூரில் இரண்டு நீருறிஞ்சிப் பூங்காக்கள் மற்றும் ஏழு குளங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏன் அந்தத் திட்டங்கள் என்பதை, இப்பகுதியில் இருந்த பெரிய சதுப்பு நிலங்கள் மற்றும் நாணல் படுகைகளை ரியல் எஸ்டேட்காரர்கள் ஆக்கிரமித்த வரலாறு ஓரளவு விளக்குகிறது. மற்றொரு பெரிய சதுப்பு நிலமான பள்ளிக்கரணை காலப்போக்கில் 90 சதவீதம் சுருங்கிவிட்டது.

தமிழ்நாட்டின் வெப்ப அலை செயல்திட்டம் (2019) பின்பற்ற வேண்டிய சில அடிப்படை நெறிமுறைகளைப் பரிந்துரைக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சி, தமிழகத்தின் பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் தங்கள் பகுதிகளில் பசுமைப் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்று அந்தத் திட்டம் சொல்கிறது. தனியார் நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் இதைச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

2010-ஆம் ஆண்டில் 46.8 பாகை செல்சியஸ் அளவிலான பேரழிவு வெப்ப அலை காரணமாக ஒரே வாரத்தில் 1340-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்து போனார்கள். இதையடுத்து வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான செயல் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அகமதாபாத். வெப்பநிலையை 3 பாகை செல்சியஸ் வரை குறைக்கும் குளிர்ந்த கூரைகள் (ஸ்பெயினின் மாட்ரிட்டில் 7 பாகை செல்சியஸ் வரை கூட குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது) அந்தத் திட்டத்தின் கூறுகளில் ஒன்றாகும். இந்தத் திட்டம் பலதடவை மாற்றப்பட்டுள்ளது.

இந்த 2023 ஆண்டில் எல் நினோ இன்னும் உருவாகவில்லை. ஆண்டின் பிற்பகுதியில் எல் நினோ உருவாகி 2024-ஆம்ஆண்டில் தொடர் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது

கடுமையான வெப்பத்தைத் தடுக்க தற்போதுள்ள கட்டடங்கள் மற்றும் நடைபாதைகளை புதிதாகப் பூசி மாற்றியமைக்க வேண்டும் என்று தமிழக வெப்ப அலைத் திட்டம் சொல்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் இருந்தபோதிலும், கான்கிரீட் கட்டமைப்புகளால் வெளிப்படும் வெப்பம் தீவிரமாக உள்ளது, இது குளிர்சாதனத்திற்கான தேவையை அதிகரித்து, மின்சாரம் வழங்கலில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

கடுமையான வெப்ப அழுத்தத்தை எதிர்கொள்ளும் பகுதிகளில் கட்டடங்களுக்கு வெள்ளை வர்ணம் பூசுவதன் மூலம் அவை குளிரூட்டப்படலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது, இது மத்திய தரைக்கடல் நாடுகளில் பயன்படுத்தப்பட்ட உத்திதான்.

குளிர்ச்சியாக இருந்துகொண்டு வெப்பத்தை பிரதிபலிக்கும் க்நானோக் பொருட்களைப் பயன்படுத்தும் புதிய அமைதியான குளிரூட்டும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது பற்றியும் தமிழகம் யோசிக்கலாம். கர்நாடகத்தில் காய்கறி விற்பனையாளர்கள் சோதனை முயற்சியாகப இந்த மாதிரியான குளிரூட்டல் பொருட்களை ப் பயன்படுத்துகிறார்கள்.

மேலும் படிக்க: மின்கட்டணம் உயர்வு: சூரிய ஆற்றல் மின்சாரமே இப்போதைய தேவை!

2015-ஆம் ஆண்டு முதல் கடந்த சில ஆண்டுகளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சூழ்நிலையில், நீர் தேக்கங்கள் இருக்கும் சென்னையில் உள்ள பெரிய கோயில் குளங்கள் புறக்கணிக்கப்பட்டன. வெப்ப அலையும், வறட்சியும் சென்னையைப் பெரிதும் பாதிக்கும். ஒரு வருடத்திற்குள் ஒரு பெரிய வடிகால் உள்கட்டமைப்பை உருவாக்க முடிந்தால், வெப்ப செயல் திட்டம் வெகுவிரைவில் முன்னேற்றம் அடையும். அத்துடன், அந்த வடிகால் உள்கட்டமைப்பைப் பராமரிப்பதில் போதுமான கவனம் செலுத்தப்படாமல் போய்விடலாம்.

பெயரளவுக்குக் கட்டமைக்கப்பட்ட மாநகரங்கள் மற்றும் நகரங்களில் இருக்கும் அனைத்து உயர் அழுத்தப் பகுதிகளிலும் காலவரையறையுடன் கூடிய வெப்பஅலை செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பருவநிலை மாற்றத் துறையிடம் ஒப்படைக்கலாம். திட்டத்தின் முன்னேற்றம் குறித்த ஆண்டறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இந்த 2023 ஆண்டில் எல் நினோ இன்னும் உருவாகவில்லை. ஆண்டின் பிற்பகுதியில் எல் நினோ உருவாகி 2024-ஆம்ஆண்டில் தொடர் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக எதிர்கால பேரழிவு பாதிப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல், நிகழ்காலத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் அரசியல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வானிலை விஞ்ஞானிகள் கொடுக்கக்கூடிய தெளிவான எச்சரிக்கை இது.

Share the Article

Read in : English

Exit mobile version