Site icon இன்மதி

வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் இருக்கும் எல்லா இந்திய கலைப்பொருட்களும் திரும்பக் கிடைக்குமா?

திருடப்பட்ட நடராஜர் சிலை மற்றும் பிரத்யங்கிரா தேவி சிலை(Picture credit: National Gallery of Australia)

Read in : English

தமிழ்நாட்டு அருங்காட்சியகங்களில் கோயில் சிலைகள் உட்பட இருக்கும் இந்திய கலைப்பொருள்கள் எத்தனை திருடப்பட்டிருக்கின்றன என்பது கலைப்பொருள் திருடன் சுபாஷ் கபூர் வழக்குதான் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது. திருடப்பட்ட கலைப்பொருட்கள் சிலவற்றில்  ஆஸ்ட்ரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பாவின் மற்ற நாடுகள், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் அருங்காட்சியகங்களில் இருக்கும் கலைப்பொருட்களும் அடக்கம்.

இந்திய கலைப்பொருட்கள், குறிப்பாக தமிழ்நாட்டுக் கோயில் சிலைகள் எல்லாவற்றையும் வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலிருந்து திரும்பக் கொண்டுவர வேண்டும் என்று அப்போதிருந்தே பலர் விவாதம் செய்கின்றனர். கலைபொருள் மீட்டெடுப்பு என்றழைக்கப்படும் இந்த விசயம் மிகவும் சிக்கலான ஒன்று. அருங்காட்சியகயியல், குற்றம், கலைச்சந்தை, காவல்துறை புலன்விசாரணை என்று ஏகப்பட்ட சமாச்சாரங்கள் பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு விசயம் இது.

வினோத் டேனியல், சேர்மன், ஆஸ்ஹெரிடேஜ் மற்றும் ஐக்காம் குழு உறுப்பினர்.

அருங்காட்சியகக் கலைப்பொருட்கள் கலாச்சார, கல்வி முக்கியத்துவம் வாய்ந்தவை. உலகத்தைப் பார்ப்பதற்கு உள்ளூர் மக்களுக்கான சாளரமாக அவை செயல்படுகின்றன. முன்பு இன்மதியில் வெளியான ஒரு கட்டுரையில், வினோத் டேனியல், சேர்மன், ஆஸ்ஹெரிடேஜ் மற்றும் ஐக்காம் குழு உறுப்பினர், மக்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தவும், அவர்களுக்குக் கற்றுத்தரவும் ஏதுவான வகையில் அருங்காட்சியகங்களில் கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட வேண்டும்  என்று வலியுறுத்தினார்.அருங்காட்சியகக் கலைப்பொருட்கள் மீட்டெடுப்பு சம்பந்தமான கொள்கைகள் பற்றி இப்போது பேசுகிறார் அவர்.

அருங்காட்சியகங்கள் கலைப்பொருட்களை எப்படி பெற்றுக் கொள்கின்றன? திருட்டு என்பதும் அதில் ஓர் அம்சமா?

எந்த அருங்காட்சியகத்திலும் உள்ளூர் கலைப்பொருட்கள், தேசிய கலைப்பொருட்கள், அகில உலகக் கலைப்பொருட்கள் என்று ஏராளமான சேகரிப்புகள் இருக்கும். லோவர் முதல் மாடர்ன் ஆர்ட் மியூசியம், மற்றும் விக்டோரியா மியூசியம் வரை எல்லா அருங்காட்சியகங்களிலும் எல்லாவிதமான கலைப்பொருட்களும் இருக்கின்றன. இதுபோக உலகம் முழுக்க யாத்திரை செல்லும் அருங்காட்சியகங்களும் உண்டு. இதனால் உள்நாட்டு மக்களுக்குப் பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றன.

அருங்காட்சியகங்களுக்கு சில கலைப்பொருட்கள் நன்கொடை கொடுக்கப்பட்டிருக்கின்றன. சுதந்திரம் அடைவதற்கு முன்பே சில வெளியேறியிருக்கின்றன. மூத்த அரசு அதிகாரிகள் சிலர் இங்கிலாந்திற்குத் திரும்பிப் போகும்போது, இந்தியாவில் தாங்கள் சேகரித்து வைத்திருந்த சில அருங்காட்சியகக் கலைப்பொருட்களையும் கொண்டு சென்றுவிட்டார்கள்.

கலைபொருள் மீட்டெடுப்பு என்றழைக்கப்படும் இந்த விசயம் மிகவும் சிக்கலான ஒன்று. அருங்காட்சியகயியல், குற்றம், கலைச்சந்தை, காவல்துறை புலன்விசாரணை என்று ஏகப்பட்ட சமாச்சாரங்கள் பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு விசயம் இது

குறிப்பிட்ட காலம் சென்றபின்பு ஒரு கலைப்பொருள் பதிவு செய்யப்பட வேண்டும். அதன் தோற்றம், வயது, உரிமை போன்ற விவரங்களை ஆவணப்படுத்த வேண்டும். நம் வீட்டில் இருக்கும் பொருட்களுக்கும் இது பொருந்தும்.

சட்டம் தெளிவாகவே இருக்கிறது. குறிப்பிட்ட வருடத்திற்குப் பின்பு ஒரு கலைப்பொருள் திருடப்பட்டு இந்தியாவை விட்டு வெளியே சென்றால், அதை மீட்டுக் கொணர வேண்டும்.

ஆதிப் பழங்குடி மக்களின் எச்சப் படிமங்கள் சம்பந்தமாக எக்மோர் அருங்காட்சியகத்திற்கும் ஆஸ்ட்ரேலியா அதிகாரிகளுக்கும் இடையில் ஒரு தகவல் தொடர்பு இருந்தது

சரியான ஆவணங்கள் இல்லாமல் கலைப்பொருட்கள் இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டு, பின்பு அந்தத் திருட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் அருங்காட்சியகங்கள் அந்தப் பொருட்களை வாங்காது. அது சிரியா அல்லது ஆஃப்கானிஸ்தானாக இருந்தால், கலைப்பொருட்கள் திருடப்பட்ட பொருட்களாக இருக்கலாம் என்று பன்னாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதனால் பத்துமடங்கு கவனமான உழைப்பு தேவைப்படுகிறது.

மனித எச்ச படிமங்களைக் கூட அருங்காட்சியகங்கள் கையாள்கின்றன. விஞ்ஞானத்தின் மீது ஏற்பட்டிருக்கும் ஆர்வமே இதற்குக் காரணம். ஆதிப் பழங்குடி மக்களின் எச்சப் படிமங்களைக் கேட்டு எக்மோர் அருங்காட்சியகம் ஆஸ்ட்ரேலியாவுக்கு கடிதம் எழுதிக் கேட்டதை நான் சமீபத்தில் கண்டறிந்தேன்.

மேலும் படிக்க:
சென்னையில் பாவேந்தர் பாரதிதாசன் வாழ்ந்த வீட்டை நாட்டுடைமையாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

தமிழ்நாட்டில் சிதிலமடைந்து கிடக்கும் புத்த, சமண ஸ்தலங்கள்

அருங்காட்சியகங்களில் மனித எச்சங்களுக்கு இடமில்லை என்பது போன்ற ஒரு சிந்தனை நிலவுகிறது. மனித எச்சங்களை நாம் மதித்தாக வேண்டும். மனித எச்சங்கள் அருங்காட்சியகங்களிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி உலகளாவிய ஓர் இயக்கம் செயல்படுகிறது. அருங்காட்சியகங்களில் இருக்கும் தங்கள் முன்னோர்களின் மிச்சங்கள் கெளரவமாக புதைக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவாழ் இந்தியர்கள் எழுப்பிய கோரிக்கையிலிருந்து இந்த இயக்கம் உருவானது.

இன்னொரு அருங்காட்சியகக் கலைப்பொருள் பிரிவு என்பதில் காலனி ஆதிக்க காலத்தில் எடுத்துச் செல்லப்பட்டவை அடங்கும். இந்தப் பொருட்களை திருப்பிக் கேட்கும் வேண்டுகோள் மீது ஒரு சுவாரஸ்யமான விவாதம் போய்க் கொண்டிருக்கிறது. திரும்பக் கேட்கும் உரிமை என்றழைக்கப்படும் இந்த விசயத்திற்கு ஆகச்சிறந்ததோர் உதாரணம் பெனீன் (மேற்கு ஆஃப்ரிக்காவில் ஒரு நாடு) கலைப்பொருட்கள்.

 மூத்த அரசு அதிகாரிகள் சிலர் இங்கிலாந்திற்குத் திரும்பிப் போகும்போது, இந்தியாவில் தாங்கள் சேகரித்து வைத்திருந்த சில அருங்காட்சியகக் கலைப்பொருட்களையும் கொண்டு சென்றுவிட்டார்கள்

கலைப்பொருட்களை திரும்பக் கொடுப்பதில் வித்தியாசப்படும் அருங்காட்சியகங்கள்

கலைப்பொருட்களைத் திருப்பிக் கொடுக்கும் விசயத்தில் சில அருங்காட்சியகங்கள் நல்ல கொள்கையைப் பின்பற்றுகின்றன. பலமான கலாச்சார, மத முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பொருட்களைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்ற கொள்கையை சில அருங்காட்சியகங்கள் வைத்திருக்கின்றன. அதாவது அந்தப் பொருட்கள் வழிபாட்டுக்குரியவையாக இருக்கும்.

பெரும்பான்மையான அருங்காட்சியகக் கலைப்பொருட்கள் நிரந்தரமான சேகரிப்புகள். உள்நாட்டு மக்களுக்குப் போதிப்பதற்கு உதவக்கூடியவை அவை. பொதுமக்கள் திட்டங்களின் ஒரு பகுதியாக அவை செயல்படுபவை. அவற்றில் சில குறுகிய கால அல்லது நீண்டகால கடன்களாக வந்திருப்பவை.

சில கலைப்பொருட்கள் அதீத முக்கியத்துவம் கொண்டவை. அவற்றை அருங்காட்சியகங்கள் வைத்திருப்பது அறமன்று, சொந்த உரிமை இருந்த போதிலும். அவை திரும்பச் செல்ல வேண்டும்.  இதுவோர் சர்ச்சையான விசயம். பல நாடுகளுக்குள்ளே சண்டைகள் நிகழ்கின்றன.

சுபாஷ் கபூர் வழக்கில் நிறைய பேருக்கு பங்குண்டு. நிறைய வழிகள் இருக்கின்றன. சில சிலைகள் வீடுகளுக்குக் கடத்தப்பட்டு பின்பு கப்பலேற்றப் பட்டன

இங்கிருந்து திருடப்பட்ட சிலைகளைப் பற்றிப் பேசலாம். கோயில்களில் தங்களுக்கு இருக்கும் சிறப்பு நுழைவு அதிகாரத்தைப் பலர் துஷ்பிரயோகம் செய்து நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள். முதலில் முக்கியமான காலரிகளுக்கு அவர்கள் கலைப்பொருட்களை நன்கொடையாகத் தந்து அருங்காட்சியகங்களைத் தந்திரமாக ஏமாற்றுகிறார்கள். தாங்கள் ஆடும் ஆட்டத்தில் அவர்கள் பலரின் நம்பிக்கையைப் பெற்றுவிடுகிறார்கள். நிறைய ஆவணங்களோடு அவர்கள் வருகிறார்கள். அவர்களிடமிருந்து கலைப்பொருட்களை வாங்க சில அருங்காட்சியகங்கள் விரிவாக்கப் பணிக்காக வேகமாக செயல்படுகின்றன.

அருங்காட்சியகங்கள் வாங்கிய திருட்டுச் சிலைகள் காவல் துறையின் தரவுக் கட்டமைப்பிலோ அல்லது இண்டர்போலிலோ பட்டியலிடப் பட்டதில்லை. திருடப்பட்டதை நிரூபிக்க வேண்டும்; அதற்கு சாட்சியங்கள் வேண்டும். அப்போதுதான் அருங்காட்சியகங்கள் திருடப்பட்டுக் கொண்டுவரப்பட்ட கலைப்பொருட்களைத் திருப்பிக் கொடுக்கும். சுபாஷ் கபூரிடமிருந்து வாங்கிய கலைப்பொருட்களில் கிட்டத்தட்ட பெரும்பாலானவற்றை ஆஸ்ட்ரேலியா தேசிய காலரி திருப்பிக் கொடுத்துவிட்டது.

இந்திய கலைப்பொருட்களை, குறிப்பாக தமிழ்நாட்டுச் சிலைகளை வாங்கும் விசயத்தில் அருங்காட்சியகங்கள் என்ன கற்றுக்கொண்டன?

போதுமான கவனமும் முழுமையான விசாரணையும் இல்லாமல கலைப்பொருட்களை வாங்கக்கூடாது என்பதை அருங்காட்சியகங்கள் கற்றுக் கொண்டிருக்கின்றன. வாங்குவதற்கும், விற்பனைப் பத்திரங்களை பதிவு செய்தற்கும் போதுமான அளவுக்கு நேரம் செலவழிக்கப்படுகிறது. கலைப்பொருட்களின் ஆதிமூல நாடுகளின் அதிகாரிகளுடன் அவர்கள் கலந்தாய்வு செய்ய வேண்டும்.

கலைப்பொருள் திருட்டு வழக்குகளினால், மீட்டெடுப்பு வழக்குகளினால், இந்திய கலைப்பொருட்களை வாங்குவதில் ஒரு மந்தம் நிலவுகிறது. மீண்டும் அவர்கள் வாங்க ஆரம்பிப்பார்கள்; ஆனால் நிறைய கட்டுப்பாடுகளும், வழிகாட்டு நெறிமுறைகளும் அப்போது இருக்கும்.

சுபாஷ் கபூர் வழக்கில் நிறைய பேருக்கு பங்குண்டு. நிறைய வழிகள் இருக்கின்றன. சில சிலைகள் வீடுகளுக்குக் கடத்தப்பட்டு பின்பு கப்பலேற்றப் பட்டன. திருடப்பட்ட கலைப்பொருள் என்று தெரிந்தால் எந்த அருங்காட்சியகமும் அதை வைத்திருக்காது. அது சட்டத்திற்குப் புறம்பாகக் கொண்டுவரப்பட்டது என்பதை நாம் நிரூபித்தாக வேண்டும்.

இந்தியாவிலிருக்கும் நாம் நமது கலைப்பொருட்களையும் சிலைகளையும் திருட்டுப் போகாதவாறு காக்க வேண்டும் என்பதுதான் நாம் கற்றுக் கொண்ட பாடம். நாமும் கண்காணிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

Share the Article

Read in : English

Exit mobile version