Site icon இன்மதி

இராஜமெளலி படத்தில் ஓரினச்சேர்க்கை உறவா?

Read in : English

இராஜமெளலி இயக்கிய தமிழ்த் திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’ அமெரிக்காவில் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியிருக்கிறது; எந்தக் காரணங்களுக்காக நம்மைச் சந்தோசப்படுத்தியதோ அந்தக் காரணங்களுக்காக அல்ல. “இதயம் தொட்ட ஓரினச்சேர்க்கைத் தன்மைக்காக.” படத்தின் இரண்டு கதாநாயகர்களுக்கு இடையிலான அந்த இணக்கமான ‘கெமிஸ்ட்ரி’ எங்கிருந்துதான் உருவாகிறது?

என்னைப் பொறுத்தவரை அப்படி இருப்பதாகத் தோன்றவில்லை. குறைந்தப்பட்சம் படத்திலே அப்படியில்லை.

எது எப்படியோ! முதலில் இருந்தே ஆரம்பிப்போம்.

ஓரினச்சேர்க்கையாளர்களும் திருநங்கைகளும் (எல்ஜிபிடிக்யூ) தங்கள் உரிமைகளை முரசறைந்து அறிவிக்கும் அவர்களின் பெருமைமிகு மாதமான ஜூன் மாதத்தில் அமெரிக்கப் பார்வையாளர்களை ’ஆர்ஆர்ஆர்’ வசீகரித்திருக்கிறது; அதுவும் ஜுனுக்குரிய அதே ‘பெருமை’ உணர்வைத் தூண்டும் விதத்தில். கதாநாயகர்களான ஜூனியர் என்டிஆரும், ராம்சரணும் அவர்களுக்கு ஓரினச் சேர்க்கையாளர்களாகத் தோன்றி அவர்களின் இதயங்களை ஈர்த்திருக்கிறார்கள்.

இந்தியர்களாகிய நமக்கு, அதுவும் பெண்களுக்கு, எல்லாச் சாலைகளிலும் அனுதினமும் அடிக்கடிக் காணக்கூடிய விசயம்தான் இது.

ஓரினச்சேர்க்கையாளர்களும் திருநங்கைகளும் (எல்ஜிபிடிக்யூ) தங்கள் உரிமைகளை முரசறைந்து அறிவிக்கும் அவர்களின் பெருமைமிகு மாதமான ஜூன் மாதத்தில் அமெரிக்கப் பார்வையாளர்களை ’ஆர்ஆர்ஆர்’ வசீகரித்திருக்கிறது.

கையோடு கைசேர்த்து, தோளோடு தோள் உரசி, சிலநேரங்களில் கைகளைப் பின்பாக்கெட்டுகளுக்குள் வைத்துக்கொண்டு நடக்கும் ஆண்கள் தெருக்களில் நிரம்பி வழிகிறார்கள். அதுவொன்றும் நமக்குப் புதிய காட்சி அல்ல. இந்தியாவில் ஆண்கள் ஆண்நண்பர்களோடு பொதுவெளியில் எப்படி ஊடாடுகிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் ஒருபோதும் வெளிப்படையான பிரக்ஞையுடன் இருந்ததில்லை. அந்த உறவு அவர்களுக்கு இயல்பான ஒன்று. வழமையான இந்திய பாணியில் ‘விசித்திரமாக’ வெறுக்கும் விதத்தில் நடந்து செல்வது!

வாஸ்தவத்தில் சில நேரங்களில் பெண்கள் விசயங்களை வேறுமாதிரியும் பார்க்கிறார்கள். சூழல்களை ஆழமாக ஆராய வேண்டும் என்று பேச்சுவந்தால், அதற்குச் சரியான ஆட்களே பெண்களாகிய நாங்கள்தான். தெருவில் இரண்டு ஆண்கள் ஒருவரை ஒருவர் விளையாட்டாக இடித்துக் கொண்டும் தலைமுடியைப் பிடித்து கலைத்துக் கொண்டும் நடந்து போகிறார்களா? அப்படியென்றால் அவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள்தான்! இரண்டு ஆண்கள் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக் கொண்டு சாலையைக் கடக்கிறார்களா? ஓரினச்சேர்க்கையாளர்கள்தான்!

இதில் வேடிக்கையான விசயம் என்னவென்றால், இந்த ஓரினச்சேர்க்கையாளர் மற்றும் மாற்றுப்பாலினத்தவர்கள் கூட்டம் (எல்ஜிபிடிக்யூஐஏ+) நாட்டில் தெரிந்துப் பரபரப்பாவதற்கு முன்னமே அந்தக் கருத்தாக்கமும், கண்ணோட்டமும் ஏற்கனவே நம்மிடம் இருந்திருக்கிறது என்பதுதான். என்கண் முன்னே இரண்டு ஆண்கள் கைகோர்த்து நடந்து செல்வதை நான் இளம்பெண்ணாக இருந்தபோது கேலி செய்திருக்கிறேன் என்று சொல்வது தோழமை உணர்வு கொண்ட எனக்குச் சரியாக இருக்காது. இந்தியர்களாகிய நாம் எப்போதும் இதயங்களை முகத்தில் அணிந்து கொண்டேதான் போகிறோம்; நம்மால் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருக்க முடியாது என்ற விசயத்தை நான் அப்போது மறந்திருக்கிறேன்.

அடிப்படையில் இந்திய சமூகம் இரட்டைமுகம் கொண்டது. “நாலு பேர் பார்த்தா என்ன சொல்வாங்க?” என்று சொல்லியே பெண்களை அடக்கி வைக்கும் சமூகம் ஆண்களை அவர்களின் இஷ்டபடியே விட்டுவிடுகிறது. (”ஆம்பளை கெட்டா வெறும் அத்தியாம்தான்; அதுவே பொம்பள கெட்டா புஸ்தகமே போடுவா” என்று ஒரு தமிழ்ப்படத்தில் பெண்ணொருத்தி வசனம் பேசுவாள்). மாற்றுக் கருத்துக்களைப் பற்றிக் கவலையில்லை!

’பையன்கள் பையன்கள்தான்” என்ற மொத்தக் கண்ணோட்டமும் ஆட்சி செய்யும் இந்தியச் சமூகத்தில் ‘பையன்கள்’ செய்யும் எந்தத் தவறும் மூடி மறைக்கப்பட்டுவிடும். ஆனால் வேடிக்கை என்னவென்றால் ஆண்கள் பொதுவெளியில் ஒருவர்மீது ஒருவர் காட்டும் பிரியம் என்று வரும்போது, வழமையான சமூகக் கண்ணோட்டம் மாறிவிடுகிறது என்பதுதான்!

 இந்தியாவில் ஆண்கள் ஆண்நண்பர்களோடு பொதுவெளியில் எப்படி ஊடாடுகிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் ஒருபோதும் வெளிப்படையான பிரக்ஞையுடன் இருந்ததில்லை. அந்த உறவு அவர்களுக்கு இயல்பான ஒன்று

ஓரினச்சேர்க்கையாளர் மற்றும் மாற்றுப்பாலினத்தவர் பற்றிய சமூகப் பிரக்ஞை அதிகமான சூழலில், இந்திய தெருக்களில் கைகோர்த்துச் செல்லும் ஆண்களை ‘கே’ (ஓரினச்சேர்க்கையாளர்) என்று அழைப்பது பொதுவிதியாகி விட்டது. இதில் யாருக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல லேபிள்கள் குத்தப்படுகின்றன. காதல் ரகம் என்றழைக்க முடியாத அன்பையும், பிரியத்தையும் ஓர் ஆண் மற்றொரு ஆணின் மீது தெருக்களில் காட்டும் போது அது பொதுமக்களை முகஞ்சுழிக்க வைப்பது போலத் தெரிகிறது!

ஓரினச்சேர்க்கை அடையாளங்கள் எல்லாம் நடப்பில் இல்லை என்று செயல்படுபர்கள் நாளை என்பது வருவதில்லை என்பது போல இன்றே அனுபவித்துக் கொள்கிறார்கள். ஓரினச்சேர்க்கை போலத் தோன்றும் பிரியத்தை வெளிப்படுத்தும் எந்தவொரு செயலையும் ‘கே’ என்றழக்கும் மேற்கத்திய போக்கு தற்போது இந்தியாவிலும் உலா வந்துகொண்டிருக்கிறது. என்றாலும் இந்திய பெண்கள் காலமாற்றத்திற்கு ஏற்ப அனுசரித்துப் போகக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இயல்பாகவே உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் மக்கள் நாம். அதனால்தான், இப்போது (பெரும்பாலான) இந்திய பெண்கள் யாரோ இரண்டு ஆண்கள் கைகோர்த்து பொதுவெளியில் நடப்பதை வெறும் வேடிக்கையாக மட்டுமே பார்க்கிறார்கள். பெண்கள் ‘கே’ (ஓரினச்சேர்க்கை) லேபிளைத் தூக்கி எறிந்துவிட்டார்கள் என்று தோன்றுகிறது. அநேகமாக அதனால்தான் இராஜமெளலியின் படத்தில் வரும் ஜூனியர் என்டிஆருக்கும், ராம் சரணுக்கும் இடையிலான அந்த அழகிய கெமிஸ்ட்ரியை நம்மில் பெரும்பாலோனர் ரசிக்கிறார்கள் போலும்!

இப்போதெல்லாம் ஓரினச்சேர்க்கை ஈரினச்சேர்க்கை என்ற அடையாளங்கள் இல்லை; குறைந்தபட்சம் என்னைப் பொறுத்தவரை!

Share the Article

Read in : English

Exit mobile version