Site icon இன்மதி

எழுத்தாளர் சா. கந்தசாமியின் சொந்த நூல்சேகரிப்பை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கு மகன் தானமளித்தார்

1200 தொகுப்பின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட புத்தகங்களில் சில.

Read in : English

ஓர் எழுத்தாளர் காலமானவுடன் அவரது சொந்தப் புத்தகச் சேகரிப்பு என்னவாகும்? பெரும்பாலும், உடனடியாக இல்லாவிட்டாலும் இறுதியில் அந்தப் புத்தகங்கள் பழைய புத்தகக்கடைகளிலே போய்ச்சேர்ந்துவிடும். எழுத்தாளரின் குடும்ப வாரிசுகளுக்கு அந்தப் புத்தகங்களைப் பேணிக் காப்பதில் ஆர்வம் இருப்பதில்லை; அவை வீட்டில் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கின்றன என்றுதான் அவர்கள் எண்ணுவார்கள். விதிவிலக்குகள் இருக்கின்றன; ஆனால் புத்தகங்களைப் பேணிக்காப்பது எளிதல்ல.

சில நாட்களுக்கு முன்பு, புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் அமரர் சா. கந்தசாமியின் மகன் க. சரவணன், தன்தகப்பனார் காலமான 2020-ஆம் ஆண்டு வரைக்கும் பாதுகாத்து வைத்திருந்த 1,200 புத்தகங்களைச் சென்னையில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்குத் தானமாகக் கொடுத்தார்.

எழுத்தாளர் சா.கந்தசாமியின் மகன் கே.சரவணன், மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் மற்றும் ரோஜா முத்தையா ஆய்வு நூலக இயக்குநர் ஜி.சுந்தர்

இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அந்தப் புத்தகங்கள் வாசகர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்பது. இரண்டாவது, இலக்கிய உலகத்திற்கு இந்தப் புத்தகச்சேகரிப்பு கந்தசாமியின் பெரும் பங்களிப்பாக இருக்கும்.

தந்தையார் இறந்தபின்பு புத்தகங்களைப் பேணிக்காப்பது பெரும் சவாலாக இருந்தது சரவணனுக்கு. “என்தந்தை உயிரோடு இருந்தபோது, அடுக்கிலிருந்து ஒவ்வொரு புத்தகத்தையும் கவனமாகச் சுத்தப்படுத்துவோம். எனது குழந்தைப்பருவத்திலிருந்தே எங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவரும் கடைப்பிடித்த வழக்கம் இது. புத்தகங்களைச் சரியாகப் பாதுகாக்காவிட்டால் அவை கெட்டுப்போயிடும். என் தந்தை இறந்ததிலிருந்து என் தாயார்தான் அதைப் பார்த்துக் கொண்டார். ஆனால் இப்போது அவர் பெங்களூரூக்கு இடம்பெயர்ந்துவிட்டார். அதனால் புத்தகங்களை நூலகத்திற்குத் தானம் கொடுத்துவிட்டோம்,” என்றார் சரவணன்.

கந்தசாமி உயிரோடு இருந்தபோதே புத்தகங்களை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்குத் தானம்செய்ய விரும்பினார். ”நூலகத்திலிருந்து ஒரு வேன் கூட எங்கள் வீட்டுக்கு வந்தது. 2018-ல் என்று நினைக்கிறேன். புத்தகங்களை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்குத் தானம்செய்ய முதலில் விரும்பிய என்தந்தை பின்பு என்ன நினைத்தாரோ முடிவை மாற்றிக்கொண்டார். ஏனென்று தெரியவில்லை. அடிக்கடி மாறுகின்ற மனம் எழுத்தாளர் மனம். என்தந்தையும் அதற்கு விதிவிலக்கல்ல. தேவைப்படுகிறவர்களுக்கு உபயோகமாக இருக்கும்வண்ணம் தன் புத்தகங்கள் பெரியதொரு நூலகத்தில் அங்கம்வகிக்க வேண்டும் என்று அவர் விரும்பியதை நான் அறிவேன்,” என்றார் சரவணன். புத்தகங்களை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்குத் தானம் செய்ததற்கான இன்னொரு காரணத்தை இதன்மூலம் அவர் தெரிவித்தார்.

இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அந்தப் புத்தகங்கள் வாசகர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்பது. இரண்டாவது, இலக்கிய உலகத்திற்கு இந்தப் புத்தகச்சேகரிப்பு கந்தசாமியின் பெரும் பங்களிப்பாக இருக்கும்.  

மற்ற எழுத்தாளர்களைப் போலவே கந்தசாமி 1,800-க்கும் மேலான புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்தார். ’அகநானூறு’, ‘புறநானூறு’ போன்ற அப்போது அச்சில் இல்லாத சங்க இலக்கியச் செவ்வியல் படைப்புகளின் பிரதிகள் போக, அவரது விருப்பத்திற்குரிய ஜெயகாந்தன், அசோகமித்திரன் உட்பட பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் புத்தகங்களையும் அவர் தனது திரட்டில் வைத்திருந்தார். நூலகத்திற்குக் கொடுக்கப்பட்ட 1,200 புத்தகங்கள் தவிர்த்து, மிச்சம் 500 புத்தகங்களும், சில நாளேட்டுத் துண்டுகளும் அவரது குடும்பத்திடமே இருக்கின்றன. தாயார் தனது கணவர் எழுதிய புத்தகங்கள் உட்பட மிச்சமிருக்கும் அந்தப் புத்தகங்களை தானே வைத்துக்கொள்ள விரும்பினார் என்றார் சரவணன். “ஏராளமான நாளேட்டுத் துண்டுகளையும் எனது தந்தை பாதுகாத்து வைத்திருந்தார். அவற்றை என்ன செய்வதென்று நாங்கள் இன்னும் முடிவெடுக்க வில்லை என்றார் தொலைக்காட்சித் தொடர்களின் முன்னணி தயாரிப்பாளரான சரவணன்.

கந்தசாமி (1940-2020) 15-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதினார். புதினம், சிறுகதை, விமர்சனம் ஆகிய பிரிவுகளில் அவை அடங்கும்.

அவர் 1998-ல் எழுதிய ‘விசாரணைக் கமிஷன்’ அவருக்குச் சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றுத்தந்தது. தென்னிந்தியாவின் செம்பழுப்புநிறக் களிமண் சிலைகள் பற்றி தான்செய்த ஆய்வுகளின் அடிப்படையில் அவர்எடுத்த ‘காவல் தெய்வங்கள்’ ஆவணப்படம் சைப்ரஸில் 1989-ல் நடந்த ஆஞ்சினோ திரைப்பட விழாவில் முதல்பரிசு பெற்றது. மயிலாடுதுறையில் 1940-ல் பிறந்த கந்தசாமி இளமையிலே எழுத ஆரம்பித்துவிட்டார். அவரது ‘விசாரணைக் கமிஷன்’ சாகித்ய விருது பெற்றிருந்தாலும், ‘சாயாவனம்’ என்ற அவரது முதல் புதினம்தான் அவரது ஆகச்சிறந்த படைப்பு என்று பலர் நம்புகிறார்கள். அவரது மற்ற படைப்புகள்; ”ஆறுமுகச்சாமியின் ஆடுகள்”, ”பெருமழைக்கால நாட்கள்”. ”ரம்பையும் நாச்சியாரும்,” மற்றும் ”தக்கையின்மீது நான்கு கண்கள்”. 2020-ல் சென்னை தனியார் மருத்துவமனையில் இதயநோய்க்காக சிசிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் போது மாரடைப்பால் அவர் காலமானர்.

எழுத்தாளர்கள் சொந்தமாகப் பாதுகாத்த புத்தகங்கள் ரொம்ப முக்கியமானவை என்றார் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநர் ஜி. சுந்தர். கந்தசாமி சேகரித்து வைத்திருந்த புத்தகங்களை நூலகத்திற்குத் தானம்செய்த அவரது குடும்பத்திற்குச் சுந்தர் நன்றி சொன்னார். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒருகுணம் உண்டு. ஓர் எழுத்தாளர் திரட்டி வைத்திருக்கும் புத்தகங்கள் மூலமாகவே அவரது குணாதியத்தை அடையாளம் காணமுடியும் என்றார் சுந்தர். “வந்திருக்கும் புத்தகங்களை நான் இன்னும் பிரித்துப் பார்க்கவில்லை, பிரித்துப் பார்த்தபின்பு, அவற்றை ஒரு தனிபிரிவில் காட்சிக்கு வைப்போம். ஒவ்வொரு புத்தகமும் சா. கந்தசாமியின் உடமை என்றும் அவரது மகன் சரவணன் தானமளித்தது என்றும் பட்டியலில் குறித்து வைக்கப்படும்,” என்றார் சுந்தர்.

கந்தசாமி (1940-2020) 15-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதினார். புதினம், சிறுகதை, விமர்சனம் ஆகிய பிரிவுகளில் அவை அடங்கும்.  

தமிழ் எழுத்தாளர் அசோகமித்ரன் காலமாவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தான் சேகரித்து வைத்திருந்த நாளேட்டுத் துண்டுகளை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்குத் தானம்செய்தார். மு. அருணாச்சலம், ஐராவதம் மகாதேவன், செண்பகலக்‌ஷ்மி, தஞ்சைப்பிரகாஷ், மில்டன் சிங்கர் ஏ. கே. ராமானுஜன் மற்றும் டென்னிஸ் ஹட்சன் போன்ற எழுத்தாளர்களும், அறிஞர்களும் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் பேணிக்காக்கிறது. ஓராண்டுக்கு முன்பு தமிழ் அறிஞர் டிகேசி, கவிஞர் சுரதா ஆகியோரின் சொந்தச் சேகரிப்புகளை எப்படியோ ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் கையகப்படுத்திக் கொண்டது. ஒருவரின் சொந்தச் சேகரிப்புப் புத்தகங்களைக் கையகப்படுத்துவது சவாலான விசயம் என்றார் சுந்தர். மு. அருணாச்சலத்தின் சொந்தச் சேகரிப்புகளைக் கையகப்படுத்துவதுதான் தான்சந்தித்த பெரியதொரு சவால் என்றார் சுந்தர். அருணாச்சலம் “தமிழிலக்கிய வரலாற்றின் அறிமுகம்”, “தமிழ்நாட்டின் இசைமரபு” என்ற அற்புதமான நூல்களை எழுதியவர். ”ஆறாண்டுக்கு முன்பு, அருணாச்சலத்தின் அந்தரங்கச் சேகரிப்பிலிருந்து 10,000-க்கும்மேலான புத்தகங்களை நாங்கள் பெற்றுக் கொண்டோம். ஆனால் அவரது குடும்பத்தைச் சம்மதிக்கவைத்து அந்தத் தொகுப்பினைக் கையகப்படுத்த எங்களுக்குப் பத்தாண்டுக்கும் மேலானது. இன்று ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் இருக்கும் ஆகப்பெரிய அந்தரங்கச் சேகரிப்பு அதுதான்,” என்றார் சுந்தர்.

Share the Article

Read in : English

Exit mobile version