Site icon இன்மதி

தோல் நிறத்தோடு சம்பந்தப்பட்டதா திராவிடன் என்கிற வார்த்தை?

Photo Credit : TouchdownMadurai - Palamedu. Flickr

Read in : English

திராவிடன் யார் என்பது தமிழ் வெளியில் காலங்காலமாக சுழன்றடிக்கும் நிரந்தரமான ஒரு பிரச்சினை. இளையராஜா சர்ச்சைகூட அந்தப் பிரச்சினையை நோக்கி மடைமாறிப் போயிருக்கிறது. இளையராஜா சர்ச்சையும் ஊடகவியலாளர்கள் ஆராய்ந்து எழுதும் அளவுக்கு இயல்பாய் நிகந்த ஒருநிகழ்வு அல்ல. அது திட்டமிட்டு மேடையேறிய ஒரு நாடகம்; அதிர்வுகளை ஏற்படுத்தி, பொதுஜனக் கருத்தின்மீது தாக்கம் உண்டாக்கி மக்களைச் சிந்திக்க வைக்க, பேசவைக்கக் கட்டமைக்கப்பட்ட ஒரு போலி நாடகம்.

ஆனால் ஆழமான உள்ளர்த்தம் கொண்ட இந்தச் சர்ச்சையின் பக்கவாட்டு விளைவுதான் அவரது மகன் யுவன் சங்கரின் கருத்து: தான் ஒரு கறுப்புத்தோல் திராவிடன் என்றும், பெருமித உணர்வுகொண்ட தமிழன் என்றும், அந்த இளைய இசையமைப்பாளர் சொன்ன தன்னிலைக் கருத்து தனது தந்தையின் நிலைப்பாட்டிற்கான எதிர்வினை என்பது நிதர்சனம்.

இந்த நிலையில், பாஜக தலைவர் கே. அண்ணாமலை, நகைச்சுவைப் பஞ்சத்தைத் தீர்த்து வைத்திருக்கிறார். ”நானும் ஒரு கறுப்புத்தோல் திராவிடன்தான்; எனக்கும் ஹிந்தி தெரியாது,” என்று சொல்லிச் சூழலைக் கலகலப்பாக்கி அதகளப்படுத்தி இருக்கிறார் அண்ணாமலை. தமிழ்நாட்டில் செல்வாக்கைப் பெறுவதற்கு பாஜக என்ன வேண்டுமானாலும் செய்யும் போல தெரிகிறது.

திராவிடன், தமிழன் என்று தற்காலத்தில் இனம்பிரித்துப் பார்க்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கறுப்புத்தோல் மட்டுமே ஒருவனைத் திராவிடன் ஆக்காது என்கிறார்.

திராவிடன், தமிழன் என்று தற்காலத்தில் இனம் பிரித்துப் பார்க்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கறுப்புத்தோல் மட்டுமே ஒருவனைத் திராவிடன் ஆக்காது என்கிறார். எருமைக்குக் கூட கறுப்புத்தோல் உண்டு என்று வேறு சொல்லிவிட்டார். அதனால் எரிச்சல் அடைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயகுமார், திராவிடர்களை எருமைகளோடு ஒப்பிடுகிறார் சீமான் என்று கண்டனம் தெரிவித்தார். பிரச்சினை இதனுடன் முடியவில்லை. இந்தச் சர்ச்சையில் தங்கள் கருத்தை ஆணித்தரமாகச் சொல்பவர்களுக்கு ஊடகங்களின், சமூக ஊடகங்களின் கவனம் கிடைக்கிறது.

சரி. யார்தான் திராவிடன்? பெரியார் தொடங்கி அண்ணா மற்றும் பலபேர் வரை, ஏராளமான பேர் இது சம்பந்தமாகத் தங்களின் கருத்துக்களை விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.

’திராவிடர்’ என்பது ஆரியர்கள் அல்லது பிராமணர்கள் அல்லாதவர்களைக் குறித்த வார்த்தை என்று சொல்லப்பட்டது. இதனால், சாதி சார்ந்த குறுகிய வட்டத்துக்குள் பார்க்கும் போக்கு உருவாகி விட்டது.

ஆரம்பத்தில் ’திராவிடன்’ தென்னிந்தியர்களைக் குறித்த பொதுவான ஒரு பெயராகத்தான் இருந்தது. ஏனென்றால் அப்போது சென்னை ராஜதானி என்பது தெற்கில் இருந்த பகுதிகளில் நான்கு மொழிகளைப் பேசுபவர்களை உள்ளடக்கி இருந்தது. திராவிட இயக்கத்தைத் தொடங்கியவர்கள் ஒரு தமிழர், ஒரு தெலுங்கர் மற்றும் ஒரு மலையாளி. பெரியாரின் தாய்மொழி கன்னடம். இன்று திராவிடன் என்றால் தமிழனை மட்டுமே குறிக்கிறது. ஆதிஅசல் வார்த்தை ‘திராவிட’ என்பதே ‘தமிழ்’ என்பதின் மரூஉ.

’திராவிடர்’ என்பது ஆரியர்கள் அல்லது பிராமணர்கள் அல்லாதவர்களைக் குறித்த வார்த்தை என்று சொல்லப்பட்டது. இதனால், சாதி சார்ந்த குறுகிய வட்டத்துக்குள் பார்க்கும் போக்கு உருவாகி விட்டது. அது ஓர் இனம் சார்ந்த, சாதி சார்ந்த பிரிவு. ஒருவர் அதுவாகப் பிறக்கிறார்; அதுவாக மாறுவதில்லை; என்றாலும் அதைவிட்டு விலகிப் போகலாம்.

எடுத்துக்காட்டாக, பிராமணரைத் தந்திரமான, சுயநலமான ஏமாற்றும் வித்தைகளில் கைதேர்ந்தவராக, தன்னை உயர்ந்தவனாகக் கற்பிதம் செய்துகொண்டு பிற சாதியினரைக் கீழானவர்களாக நடத்துபவராக ஏகப்பட்ட சொல்லாடல்கள் சித்தரித்தன. இந்த மாதிரி நிறைய சொல்லாடல்கள் உண்டு.

ஆனால் பெரியார், அண்ணா ஆகியோர்களின் ஆரம்பகால எழுத்துகள் ஒருபடி மேலே சென்று திராவிடம் என்றால் என்ன, திராவிடன் என்பவர் யார் என்பது பற்றி உலகளாவிய பார்வையில் வாழ்க்கை அணுகுமுறை குறித்தும் கலாச்சார வேறுபாடு குறித்தும் விரிவாக விளக்கம் கொடுத்தார்கள். தங்கள் கருத்துகளுக்குப் பலம் சேர்க்க அவர்கள் சங்க இலக்கியங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டினார்கள்.

ஆரிய உலகக் கண்ணோட்டத்தில் மீமெய்யியல் தன்மை கொண்டு மறுஉலகக் கோட்பாடுகளில் மூழ்கிக் கிடந்தது. அது நிஜ உலகை மறுத்தது; சடங்குகளை, சாஸ்திரங்களை, சம்பிரதாயங்களை தூக்கிப்பிடித்தது. கடுமையான விதிகளை ஆதரித்து தனிமனித செயற்பாடுகளுக்கும் சுதந்திரத்திற்கும் தடைகள் விதித்தது. ஆரிய உலக கண்ணோட்டத்திற்குச் சரியான உதாரணம் சாதியக் கட்டமைப்பு. ஆரிய வாழ்க்கைமுறை, வாழ்க்கைநெறி இரும்புத் திரையிடப்பட்ட ஓர் உலகத்தை சிருஷ்டித்தது. ஆனால் பிறழ்வான மனம் உருவாக வழி ஏற்படும். சுதந்திரத்தில் இருக்கும் ஆனந்தமும் குதூகலிப்பும் தடைபட்டு போகும். தடைகள் பல இருந்ததால் படைப்பாற்றல் சுருங்கிவிட்டது.

படைப்புத்திறன் மிகவும் சுருங்கிப்போய்க் கிடந்தது. ஆனால் ஆட்சி அதிகாரம், ராஜதந்திரம், ரகசிய உபாயங்கள் ஆகியவற்றிற்கு அந்தக் கண்ணோட்டத்தில் இடம் உண்டு.

திராவிட வாழ்க்கை முறை இதற்கு நேர்மாறானது. அது இயற்கையோடு இயைந்த ஒன்று. சங்கத் தமிழ்க் கவிதைகள் இயற்கையைப் பற்றி, இயற்கையின் வனப்பைப் பற்றி, வசீகரத்தைப் பற்றி, மனிதர்களின் நேர்த்தியைப் பற்றிப் பேசுகின்றன. அங்கே மீமெய்யியல் இல்லை. உலக நிஜத்தைக் கடந்த சிந்தனைகள், விவரணைகள், ஊகங்கள் எதுவும் இல்லை. திராவிட வாழ்க்கைமுறை இந்த உலகத்தில் மட்டுமே, அவ்வுலகத்தில் அல்ல. விவசாயம், பொறியியல், கப்பல்துறை, போர், காதல், அரசியல், வீரம்.- இவைதான் திராவிட வாழ்க்கை முறையைக் கட்டமைத்த கூறுகளாகக் கூறப்பட்டன.. மண்சார்ந்த, நிதர்சனமான, வெளிப்படையான, திராவிட ஆணும், திராவிடப் பெண்ணும் இயற்கையை, மனித வாழ்க்கையை அனுபவிக்கிற கண்ணோட்டம் அது.

இந்தக் கண்ணோடம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மனித வாழ்க்கை இரு துருவங்களில் சுழல்கிறது. எனவே, இந்த முரண்பாடு தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் இயங்குகிறது.

ஆரிய, திராவிடக் கண்ணோட்டம் பல தசாப்ங்களுக்கு முன் சாதி அடிப்படையில் இருந்திருக்கலாம். அதற்கு எடுத்துக்காட்டாக ராஜாஜியை, மு. கருணாநிதியைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். மற்றவர்களைவிட, கருணாநிதி முற்றிலும் ஒரு திராவிட வாழ்க்கையை வாழ்ந்தவர். அதனால் திராவிடன் என்பது தோல் நிறத்தோடு சம்பந்தப்பட்டதில்லை; எருமை மாட்டோடும் சம்பந்தப்பட்டதில்லை!

Share the Article

Read in : English

Exit mobile version