Read in : English
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். ஆனால் பற்றாக்குறைகளைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டு செலவினங்களுக்குத் தேவையான வரி வருமான உயர்வைப் பற்றியும், பொருளாதார அபிவிருத்தியைப் பற்றியும் அவர் முன்வைத்த கணிப்புகளுக்கு ஆதரவாக பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை.
மாநிலத்தில் மேற்கொண்டு பொருளாதாரம் சார்ந்த, நிறுவனப்படுத்திய உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி அதன்மூலம் உருவாகும் பொருளாதார முன்னேற்றத்தை பட்ஜெட் ஓர் இலக்காகக் கொண்டிருக்கவில்லை. பல்வேறு பெரிய தொழில் திட்டங்கள் தாமதமாகின்றன; அல்லது குறித்த நேரத்திற்குள் நிறைவேற்றப்படுவதில்லை.
பட்ஜெட்டில் பெருங்கவனம் பெற்ற விஷயங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவானதாக இல்லை. ஆயினும் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2022-23-ல் 14 சதவீதமாகவும், 2023-24-ல் 14 சதவீதமாகவும் இருக்கும் என்று பட்ஜெட் கணித்திருக்கிறது. 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் (சுமார் 75 லட்சம் கோடி ரூபாய்) பொருளாதாரத்தை எட்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பற்றாக்குறைகளைக் கட்டுக்குள் வைக்கவும், சமூகநலத் திட்டங்களுக்கு ஆகும் செலவுகளுக்கு நிதி வழங்கவும் வரி வருவாய் 25 சதவீதம் வளர்ச்சியை அடையும் என்று பட்ஜெட் கணித்திருக்கிறது. நினைத்துப் பார்க்கமுடியாத ஆகப்பெரிய பொருளாதார வளர்ச்சியால் மட்டுமே இது சாத்தியமாகும்.
செலவுகளுக்கு நிதி வழங்கவும் வரி வருவாய் 25 சதவீதம் வளர்ச்சியை அடையும் என்று பட்ஜெட் கணித்திருக்கிறது. நினைத்துப் பார்க்கமுடியாத ஆகப்பெரிய பொருளாதார வளர்ச்சியால் மட்டுமே இது சாத்தியமாகும்.
ஆனால் பட்ஜெட் கொடுத்த வளர்ச்சிக்கணிப்புகள் குறித்த ஆசைகள், கள யதார்த்தங்களோடு ஒத்துப்போகவில்லை. துரிதமான, அதிரடியான பொருளாதார வளர்ச்சிக்கு இன்றைய சூழல் இணக்கமானதாக இல்லை. தமிழ்நாட்டில் ஐம்பது இலட்சம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் இயங்குகின்றன. தேச அளவில் 8 சதவீதப் பங்களிப்பை இவை செய்கின்றன. நாட்டில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றன. இந்தத் துறையில் 70 லட்சம் ஆண்கள், 30 லட்சம் பெண்கள் என்று மொத்தம் ஒரு கோடிபேர் பணிசெய்கின்றார்கள். ஒன்றிய அரசின் குறு, சிறு, மற்றும் நடுத்தர நிறுவன அமைச்சகம் சொன்னதுபோல, 2021-ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி நிலவரப்படி, உதயம் பதிவு இணைய தளத்தில் தமிழ்நாட்டிலிருந்து 6.23 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
பொருளாதார வளர்ச்சி பெரும்பாலும் உற்பத்தி, மற்றும் சேவைத் துறைகளிலிருந்தே உருவாகிறது. ஆனால் குறு, சிறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு வெறும் 911.5 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டு கால கொரோனா தொற்றுப்பரவலால், இந்தத் துறை வேலைவாய்ப்பு இழப்பு, வருமான இழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறது. மாநில பட்ஜெட் இந்தத் துறையின் நிதிக்கஷ்டங்களை, வலிகளை கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டது. குறு, சிறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கான தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டத்திற்கு பட்ஜெட் ஒதுக்கியிருக்கும் 100 கோடி ரூபாய் நிச்சயமாகப் போதாது. இந்த ஆண்டு மார்ச் 31-க்குள் 100 கோடி ரூபாயை வழங்க உத்தேசித்திருக்கும் இந்தப் பரிசோதனைக் கடன் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்திருக்கிறதா என்பதைப் பற்றிய குறிப்பு ஏதும் பட்ஜெட்டில் இல்லை.
நேரடியான அல்லது மறைமுகமான வேலைவாய்ப்புகளைக் கொடுக்கும் தொழில்துறைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை வெறும் 3,267.91 கோடி ரூபாய் மட்டுமே.
2030ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் இலக்கை ஏற்றுமதித்துறை அடையவேண்டும் என்பதற்காக, பொது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது பற்றிய பேச்சு இருக்கிறது. ஆனால் பட்ஜெட் இதைப் பெரிதும் கண்டுகொள்ளவில்லை. சேவைத்துறையும்கூட கருத்தில் கொள்ளப்படவில்லை.
கோயம்புத்தூர், பெரம்பலூர், மதுரை, வேலூர், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்களை உருவாக்க எண்ணும் பட்ஜெட் அறிவிப்பில் துறைதோறுமான விசேஷ விவரங்களோ அல்லது பெரிய தொழில் நிறுவனங்களோடு கொள்ளும் கூட்டணி பற்றிய தரவுகளோ இல்லை. பெரம்பலூர் தவிர, குறிப்பிட்ட மற்ற மாவட்டங்களில் ஏற்கனவே தொழில்கள் இருக்கின்றன. தொழில் பூங்காக்களுக்காக நிதியேதும் ஒதுக்கப்படவில்லை. கடந்த காலத்திலும் இந்தமாதிரி அறிவிப்புகள் நிதி ஒதுக்கீடுகள் இல்லாமல் செய்யப்பட்டன. ஆனால் தொழில் முனைவோர்களும், அமைப்புகளும் பல ஆண்டுகளாகக் கோரிக்கைகள் விடுத்தும் எதுவும் இதுவரை நடக்கவில்லை.
மேலும், மாநிலத்து மக்கள்தொகையில் 54 சதவீதத்தினருக்கு மேலான மக்களுக்குச் சேவைசெய்யும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 20,400.24 கோடி ரூபாய் போதுமானதாக இல்லை. தரமான நகர்ப்புற உள்கட்டமைப்புக்கும், சேவைகளுக்கும் இருக்கும் கடுமையான பற்றாக்குறையைக் கணக்கில் எடுத்தால் இந்தத் தொகை போதாது.
தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் போன்ற புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகளில் ஒவ்வொன்றுக்கும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கும் 10 கோடி ரூபாயால் எந்தப் பலனும் இல்லை. நகர்ப்புறங்களுக்கான பின்வரும் பட்ஜெட் அறிவிப்புகள் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டால், நீண்டநாள் நிலுவையில் இருக்கும் அமைப்பியல் பிரச்சினைகள் தீர்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.
· ஒன்றிய அரசின் ஸ்வச் பாரத் மிஷன் 2.0 திட்டத்தின்கீழ் தூய்மைத் திட்டத்தை மேம்படுத்த நகராட்சி திடக்கழிவு மேலாண்மைக்காக மாநிலத்தின் பங்காக ரூபாய் 2,169 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
· ஒன்றிய அரசின் அம்ருத் திட்டத்தின்கீழ் குடிநீர்வழங்கல் மற்றும் கழிவுநீர் மேலாண்மைத் திட்டங்களுக்காக ரூபாய் 2,130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், இந்தப் பட்ஜெட் திமுகவின் வாக்குவங்கியை உருவாக்குவதற்காக சமூக நலனையை அதிகம் குறிவைக்கிறது. ஒட்டுமொத்த மாநில வளர்ச்சி புறந்தள்ளப்பட்டிருக்கிறது.
-மீஞ்சூரிலிருந்து வண்டலூர் வரை 62 கிமீ தூரத்திற்கு புறவட்டச்சாலை ஒரு வளர்ச்சி நீள்பாதையாக உருவாக்கப்படும். அதன் தொழில்வளர்ச்சிக்காக மிகப்பெரிய அளவில் குடியிருப்புப் பகுதிகளும், சிப்காட் தொழில் பூங்காக்களும், பொழுதுபோக்கு வசதிகளும், பண்டகசாலைகளும், தோட்டக்கலைப் பூங்காக்களும், இயற்கை உணவுப் பதனமிடும் மண்டலங்களும், செருகியவுடன் இயங்கும் கணினி வசதிகள் கொண்ட நிலையங்களும் அங்கே கட்டமைக்கப்படும்.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூபாய் 1,000 கோடியும் சிங்காரச் சென்னை 2.0- திட்டத்துக்கு ரூபாய் 500 கோடியும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் அதிதிறன் மாநகர் (ஸ்மார்ட் சிட்டி) திட்டங்களிலிருந்து எப்படி வேறுபடுகின்றன என்பது பற்றிய தெளிவு இல்லை. பட்ஜெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூபாய் 1,875 கோடியை ஒதுக்கியிருந்தபோதிலும், ஆளுங்கட்சி தனது சொந்தத் திட்டத்தையும் கொண்டுவர விரும்பியிருக்கலாம்.
மின்சாரத்துறையில் நிலவும் பிரச்சினைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும்போது, சூரிய ஒளி, காற்று போன்ற மாற்று எரிசக்தி மூலங்களை வளர்த்தெடுப்பதைப் பற்றி இந்தப் பட்ஜெட் பேசவே இல்லை. “தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் (டான்ஜெட்கோ) ஒவ்வொரு ஆண்டும் பலமாக நஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது கடுமையான கவலைக்குரிய விஷயம்,” என்று சொல்லியிருக்கிறார் மாநில நிதியமைச்சர். ஆனால் டான்ஜெட்கோவின் நடப்பாண்டு நஷ்டங்களில் 100 சதவீதத்தையும் ஏற்றுக்கொண்டதோடு, அரசு தரும் கட்டண மானியங்களுக்காக ஈடாக ரூபாய் 9,379 கோடியையும் பட்ஜெட் கொடுத்திருக்கிறது.
நேரடியான பலன் திட்டத்தின்மூலம் அரசு மானியங்களை சீர்திருத்தாவிட்டால், இந்த நஷ்டங்களைத் தடுத்து நிறுத்தமுடியாது. மேலும் 4,131 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி, ஒழுங்காகக் கடனை அடைக்கும் கடமை உணர்வு கொண்ட மக்களுக்கான கடன்வசதியையும், நிறுவன ரீதியிலான அறவுணர்வையும் அழித்துவிடும். கடன் தள்ளுபடி தவறான கருத்துகளையே விதைத்துவிடும்.
சுருக்கமாகச் சொன்னால், இந்தப் பட்ஜெட் திமுகவின் வாக்குவங்கியை உருவாக்குவதற்காக சமூக நலனையை அதிகம் குறிவைக்கிறது. ஒட்டுமொத்த மாநில வளர்ச்சி புறந்தள்ளப்பட்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின், புதுமைகள், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, விஷேசமான மறுசுழற்சி மையங்கள், சுற்றுப்புறச்சூழலுக்கு இணக்கமான பதப்படுத்தும் அமைப்புகள் மற்றும் ஆழமான தொழில்நுட்பங்கள் ஆகியவை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.
(கட்டுரையாளர் பொருளாதார மற்றும் பொதுக்கொள்கை நிபுணர்).
Read in : English