Site icon இன்மதி

தனுஷ் நடித்த மாறன்: தயவுசெய்து இந்த மாதிரி பத்திரிகையாளர் திரைப்படங்களை எடுக்காதீர்கள்!

புலனாய்வுப் பத்திரிகயாளர் கதாபாத்திரமேற்று தனுஷ் நடித்து வெளிவந்துள்ள மாறன் திரைப்படத்தின் போஸ்டர்.

Read in : English

நல்ல போலீஸ் திரைப்படங்கள் வந்திருக்கின்றன; மோசமான போலீஸ் படங்களும் வந்திருக்கின்றன. திருடன் படங்கள்; கிராமத்துப் படங்கள், என்று விதவிதமான படங்களும் வந்திருக்கின்றன. அதைப்போலவே இந்திய சினிமாவில் பத்திரிகையாளர்களை ஒரு கதாபாத்திரமாக்கி வெளிவந்த திரைப்படங்களும் உண்டு.

போலீஸ் படங்கள் காவல்துறையினரை பரிகாசத்துக்குரிய ஊழல்வாதிகளாகவும், படுபயங்கரமான கொடூரமானவர்களாகவும் அல்லது அதிக திறமையுடையவர்களாகவும் உழைப்பில் நேர்மையானவர்களாகவும் சித்தரித்திருக்கின்றன. அதுமாதிரி பத்திரிக்கையாளர் திரைப்படங்கள் பத்திரிகையாளர்களை நேர்மையானவர்களாகவும், லட்சியத்திற்காகச் சோதனைகளை அனுபவிப்பவர்களாகவும் காட்டுகின்றன. வில்லத்தனமான நிருபர் பாத்திரம் என்பது சினிமாவில் மிகமிக அபூர்வம். வேண்டுமானால் வில்லத்தனமான ஊடக முதலாளிகள் இருக்கலாம்.

மாறன் படத்தில் காண்பிப்பது போல, ஒரே ஆள் பிரமாதமான புலனாய்வு நிருபராகவும், புத்திசாலித்தனமான நிருபராகவும் நிஜத்தில் இருப்பதில்லை.

புலனாய்வு இதழியல் என்று தனியாக ஒன்று நிஜமாகவே கிடையாது. பகிர்ந்துகொள்ள அவசியம் இல்லாதவர்களிடம் இருந்து தகவலைப் பெறுவதுதான் ஒரு பத்திரிகையாளரின் பணி. ஆதலால் அவர்களின் பணியில் புலனாய்வு என்பது எப்போதுமே நிகழ்வதுதான். சில நேரங்களில் ஒரு நிருபர் அவரது பணியின் நிமித்தம், கவனத்துக்குக் கொண்டுவரப்படாத ஏதாவது ஒரு குற்றநிகழ்வை வெளிக்கொண்டுவரப் போகலாம். ஆனால் அவரது பணியின் போக்கில் இது இயல்பாக நடப்பதுதான். குற்றநிகழ்வுகளைப் பற்றி எழுதும் நிருபர்கள் புலனாய்வு வேலையைச் செய்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் பெரும்பாலும் பிரமாதமாக எழுதக்கூடியவர்கள் இல்லை. அதனால் மாறன் படத்தில் காண்பிப்பது போல, ஒரே ஆள் பிரமாதமான புலனாய்வு நிருபராகவும், புத்திசாலித்தனமான நிருபராகவும் நிஜத்தில் இருப்பதில்லை.

நமது அன்றாட பணிச்சுமையே நம்சக்தியை உறிஞ்சிவிடுகிறது. பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு புலனாய்வு வேலையைச் செய்ய நேரமிருப்பதில்லை. இன்றைக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்களும், அரசுசாராத் தொண்டு நிறுவன செயற்பாட்டாளர்களும் பத்திரிகையாளர்களை விடவும் சிறப்பாகவே புலனாய்வு செய்கிறார்கள். அவர்களுக்குத்தான் அதிகாரம் அதிகம்.

மாறன் படத்தில் தனுஷும், மாளவிகாவும் தொலைபேசி அழைப்புகளை இடைமறித்து வேறுமனிதர்கள் போல பாவனை செய்கிறார்கள், ஒரு செய்தியைப் பெறுவதற்கு. பெரும்பாலான நாடகப்பாங்கான புலனாய்வுக் கட்டுரைகள் யாரோ ஒருவர் தகவலைக் கசிய தீர்மானிப்பதால் நிகழ்கின்றன. மணல் அகழ்வு பெரும்புள்ளி வைகுண்டராஜன் முதல் போஃபர்ஸ் வரையிலான புலனாய்வுக் கட்டுரைகளுக்கு மூலாதாரம் யாரோ ஒருவர் சம்பந்தப்பட்ட நிருபர்களுக்குக் கசியவிட்ட தகவல்தான். போஃபர்ஸ் ஊழல் வழக்கைத் தொடர இந்தியாவுக்கு விருப்பம் இல்லை என்பதால் ஸ்டாக்ஹோமில் இருந்த அரசு வழக்குரைஞர் எரிச்சல் அடைந்தார். பின்பு அந்த ஊழல் இந்திய நாளேடுகளில் பெரிய செய்தியாக வெடித்தது.

திரைப்படங்கள் தங்களைச் சித்தரிக்கும் விதத்தைப் பார்த்து போலீஸ்காரர்களே அடிக்கடி சிரிப்பதுண்டு. பத்திரிகையாளர் திரைப்படங்களைப் பார்த்து பத்திரிகையாளர்களும் அடிக்கடி சிரிப்பதுண்டு. தொலைபேசியில் பணிவாக பேசுவதிலே நமது நேரத்தின் பெரும்பகுதி கழிந்துவிடுகிறது. கடுமையான வார்த்தைகளில் பேசுவதிலோ அல்லது அறிவுரை சொல்வதிலோ நேரம் கழிவதில்லை. மாறனைப் போல எந்த நிருபரும் மற்றவர்களுக்கு ஆணையிடுவதில்லை. அவர்களுக்குப் பதற்றமும் படபடப்பும் இருப்பதில்லை. கவனி, அவதானி, மறைவாகவே இரு என்பதுதான் பத்திரிகையாளர்களுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஓர் லட்சிய நிருபர் என்பவர் மறைவாக இருந்து அவதானிப்பவர். அப்படியும் அவர் கவனிக்கப்பட்டாலும் ஏதாவது ஒருசாக்கு சொல்லிவிடுவார். தனது பணியிடத்தில் அவர் ஒருபோதும் கதாநாயகன் அல்ல; நம்மில் யாரும் தனுஷ் இல்லையே.

மாறன்

மாறனைப் போல எந்த நிருபரும் மற்றவர்களுக்கு உத்தரவு போட முடியாது. ஒரு லட்சிய நிருபர் என்பவர் மறைவாக இருந்து அவதானிப்பவர். அப்படியும் அவர் கவனிக்கப்பட்டாலும் ஏதாவது ஒரு சாக்கு சொல்லிவிடுவார். ஒரு நிருபர் தனது பணியிடத்தில் அவர் ஒருபோதும் கதாநாயகன் அல்ல; நம்மில் யாரும் தனுஷ் இல்லை.

பத்திரிகையாளர் சந்திப்புகளில் அபூர்வமாக ஒரு நிருபர் எதிரிபோல கேள்வி ஒன்றைக் கேட்கக்கூடும். ஆனால் அது வெறும் பகட்டுக்கானது அன்றி விஷயத்திற்காக அல்ல. அது டிவி காமிராக்களுக்கானது. காமிரா படம்பிடிக்கும்போது, ஒரு பெண்நிருபர் எரிச்சலூட்டும் கேள்வியைக் கேட்கிறார் என்றால், அவர் பணிசெய்யும் தொலைக்காட்சி அவரை அப்படிக் கேட்கச் சொல்லியிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஏனென்றால் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி அந்த நிகழ்வை ’லைவ்’வாக காண்பிப்பதால், தங்கள் வேலையைத் தாங்கள் சரியாகச் செய்வதாகக் காட்டிக்கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அச்சு ஊடகத்தினர் தேவைப்பட்டால் தங்களுக்கான செய்தியை ரகசியவழியில் பெற்றுக்கொள்வார்கள். அதைக் காமிராவில் பகட்டாகக் காட்டுவதில்லை.

மாறன் ஒரு கிரைம் திரில்லர். அதில் தனுஷ் செய்யும் பாத்திரத்திற்கு சாகச கதாநாயக அம்சத்தைக் கொடுப்பதற்கு பத்திரிக்கைத் தொழில் பயன்படுத்தப் படுகிறது. பெயர்பெற விரும்பும் பத்திரிகையாளர்களைத் தேடி தகவல்தரும் மறைமுக ஆட்கள் எப்படியெல்லாம் வருகிறார்கள் என்பதைப் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது போலத் தெரிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மாறன் ஒரு வழக்கமான தமிழ்படம். திரைப்பட போலீஸ்காரர்கள் செய்வதை நிஜபோலீஸ்காரர்கள் செய்வதில்லை என்றால், தனுஷ் செய்வதைப் போல பத்திரிகையாளர்கள் ரவுடிகளை எப்படித் துவம்சம் செய்ய முடியும்?

சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறோம்; அநேகமாக நன்மையைச் செய்கிறோம் என்பதால் தாங்களும் ஏதோவொரு முக்கியத்துவம் கொண்டவர்கள் என்ற மயக்கம் அவர்களை உற்சாகமாகப் பணிசெய்ய வைக்கிறது.

எது எப்படியோ, இதழியல் என்பது தொழில் என்று சொல்லமுடியாத ஏதோவொரு தொழில்; அவ்வளவுதான்; அதுவும் குறைந்த சம்பளம்வரும் தொழில். இந்தத் துறையில் ஒருவரின் தொழில்வாழ்க்கையும், ஜீவனமும் சம்பந்தபட்ட ஊடகநிறுவன உரிமையாளரின், எடிட்டரின் விருப்பங்களால், நிலையற்ற மனநிலைகளால், உருவாக்கப்படலாம் அல்லது அழிக்கப்படலாம். பல தசாப்தங்களாக உழைத்தும், குறிப்பிட்ட ஒரு மாதம் சம்பளம் வரவில்லை என்றால் ஒரு பத்திரிகையாளர் நடுத்தெருவுக்குத்தான் வரவேண்டிதுவரும். எனினும் பத்திரிகையாளர்களைச் செயல்பட தூண்டுவது அவர்களின் தானெனும் உணர்வு; மேலும் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறோம்; அநேகமாக நன்மையைச் செய்கிறோம் என்பதால் தாங்களும் ஏதோவொரு முக்கியத்துவம் கொண்டவர்கள் என்ற மயக்கம் அவர்களை உற்சாகமாகப் பணிசெய்ய வைக்கிறது.

சிலர் இந்தத் துறைக்குள் வருவதற்குக் காரணம் காமிராவில் தெரிந்து பிரபல்யம் ஆகிவிடலாம் என்று எண்ணமே. பெரிய ஆள் ஒருவரை நேர்காணல் செய்யும்போது அவர் சொல்லும் சுவாரஸ்யமற்ற கருத்துக்குக்கூட தொலைக்காட்சித் தொகுப்பாளர் பலமாக தலையாட்டுவதை நீங்கள் அடுத்த தடவை பார்க்க நேரிட்டால், அந்தத் தொகுப்பாளர் தன்காதில் பொருத்திய மின்கருவியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளரிடமிருந்து திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதை நீங்கள் கேட்க வாய்ப்பில்லை. ஒரு பத்திரிகையாளரின் மிகக்குறைவான குடும்ப வாழ்க்கைக்கும், குறைவான சம்பளத்திற்கும், நீண்டநேர உழைப்புக்கும் பிரபல்யம் என்பது ஈடாகாது.

மாறனில் பழைய பாணியிலான சகோதரபாசம் இந்தப் படத்தில் இருக்கிறது; புதுயுகத்து கதாநாயகி இருக்கிறார். அந்தப் புதியபாணி கதாநாயகி பயங்கரமாகக் குடிக்கிறார்; கெட்ட கெட்ட வார்த்தைகள் பேசுகிறார். அண்ணன், தங்கை பாசம் படத்தின் உந்துசக்தி. தனது சகோதரிக்காக தனுஷ் பழிவாங்குவதைச் சுற்றியே கதை வருகிறது. கதை அதிலே சஞ்சாரம் செய்யும்போது, மொத்த படமும் பத்திரிகையாளர் படமாக இல்லாமல் போய்விடுகிறது. அப்பாடா! இத்துடன் விட்டதற்கு நன்றி!

Share the Article

Read in : English

Exit mobile version