Site icon இன்மதி

எரிபொருள் சிக்கனத்துக்கா, சென்னை ஆட்டோக்களில் இவ்வளவு சத்தம்?

சென்னையில் பல ஆட்டோக்களில் இவ்வளவு சத்தம் இருப்பதற்கு, எரிபொருள் சிக்கனத்துக்காக சைலன்சர்களை அகற்றுவதுதான் காரணம்.

Read in : English

டட், டட், ட்ர்ர்ர்ர்ர்…சில சமயங்களில் இதற்கு ஒரு பெயரையும் அவர்கள் வைத்திருக்கிறார்கள்: பர் பீட். இது ஹிப்-ஹாப் போன்ற தூண்டும் இசை. அது சென்னை ஆட்டோவின் சத்தம்.

சென்னையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. மாநிலம் முழுவதும் 3 லட்சம் ஆட்டோக்கள் உள்ளன. சென்னையின் ஆட்டோ ஓட்டுநர்கள் கடுமையாகப் பேரம் பேசுவது போல், இந்த ஆட்டோக்கள் எழுப்பும் ஒலியும் நகரத்தின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக உள்ளது.

ஆட்டோ ரிக்‌ஷா தயாரிப்பாளர்கள், ஆட்டோவின் ஒலி, இயல்பானதாகவும், கட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருப்பதை உறுதிசெய்கின்றனர். ஆனால் பல ஆட்டோ டிரைவர்கள், வாகனத்தை டெலிவரி எடுத்தவுடன், சிந்தாதிரிப்பேட்டைக்கு விரைகின்றனர்.

சென்னையின் ஆட்டோ ஓட்டுநர்கள் கடுமையாகப் பேரம் பேசுவது போல்இந்த ஆட்டோக்கள் எழுப்பும் ஒலியும் நகரத்தின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக உள்ளது.

சிந்தாதிரிப்பேட்டையின் குறுகிய சந்துகளில் உள்ள மெக்கானிக்குகள், புகழ்பெற்ற அசல் உபகரண உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் சிறந்த பொறியாளர்கள் செய்யாத எதைச் செய்கின்றனர்? “கார்புரேட்டர் மற்றும் சைலன்சர் டியூன் செய்யப்பட வேண்டும்’‘ என்கிறார் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆட்டோ டிரைவர் மூர்த்தி., தனது புதிய ஆட்டோ லிட்டருக்கு குறைந்தது 28 கி.மீ. கொடுப்பதற்கு சிந்தாதிரிப்பேட்டை மெக்கானிக்கையே நம்புகிறார் மூர்த்தி. மேலும் சைலன்சரை ட்யூன் செய்வது என்பது பெரும்பாலும் உபகரணங்களின் உட்புறத்தை அகற்றுவதை உள்ளடக்கியதாகும்.

மூர்த்தியின் நம்பிக்கையானது, சிறந்த பொறியியல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. எஞ்சின், எரிபொருளை எரித்து, ஆட்டோ ஓடுவதற்குத் தேவையான துடிப்பை உண்டாக்குகிறது. எரிபொருள் எரிந்த பிறகு, எரிக்கப்படாத வாயு ஒரு குழாய் வழியாக வெளியேற்றப்படுகிறது. அதன் பாதையில் வளைவுகள் அல்லது மூலைகள் இல்லாமல் இருப்பதை வடிவமைப்பாளர்கள் உறுதி செய்கிறார்கள்.  வாயு வெளியேறும் பாதையில் தடங்கல் இருந்தால், அல்லது பாதை சீராக இல்லாவிட்டால், வாயுவை வெளியேற்ற எஞ்சின் கடினமாக உழைக்க வேண்டும். அதாவது அதிக எரிபொருள் எரிக்கப்படும்.

வாயு வெளியேறுவது மெதுவாகவும், ஆற்றலைச் சிதறடித்து, சத்தத்தைக் குறைப்பதாக இருக்க வேண்டும் என்கின்றன ஒலி மாசுபாட்டு விதிமுறைகள். ஆனால், இதன் பொருள், எஞ்சினின் வழியில் ஒரு தடையை வைப்பது, தான் சைலன்சர். எரிபொருள் திறனைக் குறைக்கும். இது நாம் ஏற்றுக்கொள்ளும் ஒரு சமசரம்.  எரிபொருளை சற்று அதிகமாக எரிக்கவும், ஆனால், சத்தத்தைக் குறைக்கவும். சைலன்சரை அகற்றினால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எரிபொருள் சேமிக்கப்படும். அவர்கள் சேமிக்கும் சில ரூபாய்கள் அவர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.

சென்னையில் உள்ள மற்றொரு ஆட்டோ உரிமையாளரான ரமேஷ், ஒரு கணக்கை முன்வைக்கிறார்: ரூ.300க்கு பெட்ரோல் போட்டால் ஆட்டோ சுமார் 80 கி.மீ வரை ஓடும்.  வருமானமுள்ள நாளில் அது ஓட்டுநருக்கு ரூ.1,000 கொடுக்கிறது. எந்த ஒரு ஆட்டோவுக்கும் இதுதான் அதிகபட்ச வருமானம் என்கிறார் அவர். சைலன்சரை கழற்றினால் அவருக்கு கூடுதலாக 50 ரூபாய் கிடைக்கும். கடைநிலையில் வசிக்கும் ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு அது மிக முக்கியமான பணம். அது அவருக்கு மூன்று வேளை உணவு கொடுக்கலாம்.

ஆனால், மூர்த்தி உள்ளிட்ட பிறருக்கு அது ஒரு ஊக்கத்தொகை மட்டுமே. உண்மையான பலன் ஒலி. ஒரு சராசரி இயந்திரத்தில் சவாரி செய்கிறோம் என்ற உணர்வை அது அவர்களுக்கு அளிக்கிறது. பிக்-அப் அதிகரிப்பது மட்டுமின்றி, சவாரியும் சீராக இருக்கும் என்கிறார் மூர்த்தி. சைலன்சர் இல்லாத ஆட்டோ  தனக்கு முதுகுவலியோ அல்லது மூட்டு வலியோ ஏற்படுத்தாதது போன்று உணர்கிறார். “சைலன்சரை அகற்றுவதால் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. சைலன்சர் இல்லாம ஆட்டோ ஓட்டலாம். அது ஒரு மகிழ்ச்சியான அனுபவம்” என்றும் கூறுகிறார்.

வழக்கமான உலோகஉரத்த ஒலி ஒரு விஷயம். பர் பீட் வேறு. இது மிகவும் நுட்பமானது என்று அவர் நம்புகிறார். இருப்பினும்தற்போது சைலன்சரை அகற்றுவதற்குக் குறைவான ஆட்டோ ஓட்டுநர்களே செல்கின்றனர்


.

நமக்கென பிரத்யேக ஒலி உருவாக்கப்படுவதாகக் கூறும் மூர்த்தி, சிந்தாதிரிப்பேட்டை மெக்கானிக்குகள் தனக்கு பல்வேறு ஆப்ஷன்களை வழங்குவதாகவும் மூர்த்தி கூறுகிறார். வழக்கமான உலோக, உரத்த ஒலி ஒரு விஷயம். பர் பீட் வேறு. இது மிகவும் நுட்பமானது மற்றும் சுத்த இசை என்று அவர் நம்புகிறார். இருப்பினும், தற்போது சைலன்சரை அகற்றுவதற்குக் குறைவான ஆட்டோ ஓட்டுநர்களே செல்கின்றனர் என்கிறார் ரமேஷ்.

ரமேஷுக்கு அலுவலகப் பணிக்குச் செல்லும் நிரந்தர வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர் தினமும் சிலருக்கு மட்டுமே ஆட்டோ ஓட்டுகிறார். அவரது ஆட்டோவில் பயணிப்பவர்கள் உரத்த சத்தத்தை விரும்ப மாட்டார்கள். அவரும் அதை விரும்பவில்லை.

Share the Article

Read in : English

Exit mobile version