Read in : English
எட்டு விநாடிக்குள் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும் அளவுக்கு அதிக ஆற்றல் வாய்ந்தது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடைய கார். சாலையிலும், சாலையை விட்டு விலகி புழுதித் தடங்கள், கருங்கல் சாலைகளில் செல்லும் வகையிலும், மண் மீதும் கூழாங்கற்கள் மீதுமாக மலைப் பகுதிகளில் சிரமமின்றி ஏறும் விதத்திலும் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனினும், சக்தி வாய்ந்ததாகவும், கரடு முரடான பாதைகளில் செல்லக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் இந்தக் காரில் பாதுகாப்புக்கே அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, எதிர் திசையில் வரும் வாகன டிரைவரின் கண்களை கூச வைத்து மூடச் செய்யாமல் இருக்கும் வகையில் இந்த காரின் பிளாஷ் லைட்டுகள் தானாகவே ஒளி மங்கிவிடும்.
மேலும் முன்னே செல்லும் வாகனம் திடீரென நிற்கும்போது, இந்தக் காரில் வேகம் தானாகவே குறையும். டிரைவரோடு, மேலும் ஆறு பேர் கால்களை நன்கு நீட்டி உட்கார முடியும். காருக்குள் இருக்கும் காற்று தொடர்ந்து தூய்மை செய்யப்பட்டு அலர்ஜி ஏற்படுத்தாத வகையில் பராமரிக்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயன்படுத்தும், `லேண்ட் ரோவர் டிபண்டர்’ காரின் விலை மதிப்பு ரூ.1.27 கோடி. எல்லா விதமான சாலைகளிலும் செல்லும் வகையிலும் வலுவாகக் கட்டமைப்புடன், பெருமளவு தொழில்நுட்பத்துடன் கூடிய, பன்முக ஆற்றல் கொண்ட SUV வகை கார் இது.
செயல்திறன்
இந்தக் காரில் நகரத்தைச் சுற்றி வரும்போது, காருக்கு உள்ளேயும் வெளியேயும் எவருக்கும் மெல்லிய ரீங்கார ஒலி மட்டுமே கேட்கும். நெடுஞ்சாலைகளைத் தொடும்போதுதான் , `லேண்ட் ரோவர் டிபண்டர்’ காரின் ஆற்றல் வெளிப்படும். `லேண்ட் ரோவர்’-காரில் V என்ஜின்களுக்கு பதிலாக இன்லைன் என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்டாலின் போன்றவர்களுக்கு காரின் செயல்திறன்தான் மிகவும் முக்கியமானது.
இந்தக் காரில் நகரத்தைச் சுற்றி வரும்போது, காருக்கு உள்ளேயும் வெளியேயும் எவருக்கும் மெல்லிய ரீங்கார ஒலி மட்டுமே கேட்கும். நெடுஞ்சாலைகளைத் தொடும்போதுதான் , `லேண்ட் ரோவர் டிபண்டர்’ காரின் ஆற்றல் வெளிப்படும்
எனினும் 295 BHP திறன் கொண்ட இந்தக் காரின் என்ஜின் செடான் வகை கார் என்ஜினைப் போல இரு மடங்கு சக்திவாய்ந்தது.வசதிகள் காருக்கு உள்ளே பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தாலும், சொகுசு வசதிகளுக்கு குறைவில்லை. முன் வரிசை இருக்கைப் பகுதியில் டிரைவருக்கும் இன்னொருவருக்கும் இடம் உள்ளது.
பின்னுள்ள இரண்டு வரிசைகளில் ஐந்து பயணிகள் கால்களை நீட்டியவாறு வசதியாக அமரலாம். சூடான கதகதப்பான வெப்பம் தரும் இருக்கை வசதிகளும் உண்டும். ஆனால் தமிழ்நாட்டில் பயணம் செய்யும் போது இந்தக் கூடுதல் வெப்பம் தேவைப்படாது.
தொழில்நுட்பம் நேராக முன்பக்க விண்ட்ஷீல்டு கண்ணாடிப் பகுதியிலேயே வேகம், வழிகாட்டல் போன்ற தகவல்களைத் தரும் டிஸ்பிளே அமைந்திருப்பதால், தகவல்களை பார்ப்பதற்காக கண்களைத் திருப்பாமல் சாலையை பார்த்தே கார் ஓட்டிக் கொண்டிருக்கலாம். ‘Pivi’ என அழைக்கப்படும் தொடுதிரை இன்போடெய்ன்மென்ட் டிஸ்பிளே எல்லாவற்றையும் காட்சிப்படுத்துகிறது.
ஒளிக்கற்றையை தகவமைத்துக் கொள்ளும் வகையிலான மேட்ரிக்ஸ் எல்இடி முகப்பு விளக்குகள் லேண்ட் ரோவர் டிபண்டரில் கூடுதல் சிறப்பாகும். எதிர் திசையில் வரும் வாகனங்களைக் கண்டறிந்து குறிப்பிட்ட பகுதிகளில் ஹெட் லைட்டுகளின் ஒளியை இது தானாகவே மங்க வைக்கிறது.
அப்போதுதான் எதிரில் வரும் கார் டிரைவரின் பார்வைக்கு இந்த விளக்குகள் இடையூறாக இருக்காது. ‘Cabin Air Ionization’ இன்னொரு சிறப்பு. இது ஒவ்வாமை ஏற்படுத்தும் ஊக்கிகளையும் காற்றில் உள்ள பாக்டீரியாக்களையும் பில்டர் செய்து காருக்குள் காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது.
பாதுகாப்பு அம்சங்கள் இந்தக் காரில் அமைந்துள்ள தகவமைத்துக் கொள்ளும் வேக கட்டுப்பாட்டு அமைப்பானது, முன்னே செல்லும் கார் திடீரென நின்றால், காரின் வேகத்தைக் குறைக்கும். சுற்றியுள்ள பார்வைபடாத பகுதிகளில் இருந்து வரும் கார்களை The Blind Spot Assist feature கண்டறிய உதவுகிறது. ரியர் வியூ மிர்ரரில் பார்க்க முடியாத பகுதியில் கடந்து செல்ல முயலும் கார்களைப் பற்றி இந்த அமைப்பு டிரைவரை எச்சரிக்கை செய்யும்.
பின்பக்கப் பகுதியைக் காட்டும் கேமரா ஒன்று காரின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இது மேலிருந்தபடி தெரியும் காட்சியை ரியர் வியூ மிர்ரரில் காண்பிக்கும். காரை பார்க் செய்வதற்கு உதவும் வகையில் சுற்றியுள்ள பகுதிகளை 3D கோணத்தில் பார்க்கும் வசதியும் கேமராவில் உள்ளது.
தோற்றம்
ஹெட்லைட்டுகளைச் சுற்றி வட்டமாக பகல் நேரத்திலும் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. செதுக்கப்பட்டது போல காரின் கட்டமைப்புத் தோற்றம் அமைந்துள்ளது.
இந்த டிபண்டர் 110 SE காரில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அமைந்துள்ளன. `எங்கு வேண்டுமானாலும் போகலாம், எதை வேண்டுமானாலும் செய்யலாம்’ என்பது போன்ற மனநிலையை டிரைவருக்கு இவை ஏற்படுத்தும். எலெக்ட்ரானிக் இழுவைக் கட்டுப்பாட்டு அமைப்பின் உதவியோடு கூடிய ஆல் வீல் டிரைவ் (All Wheel Drive -AWD), எத்தகைய சவாலான நிலைமைகளையும் சந்திக்கும் ஆற்றலைத் தருகிறது.
தெளிவான தரைப் பகுதிக் காட்சியைப் பார்ப்பதற்காக காருக்கு அடியிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கரடு முரடான பகுதிகளில் வழியறிந்து செல்வதற்கு டிரைவருக்கு இது உதவியாக இருக்கும். காரை விட்டு டிரைவர் வெளியில் இறங்க வேண்டிய அவசியமோ, பக்கவாட்டு கார் ஜன்னல் வழியாக தலையை வெளியில் நீட்டி பார்க்க வேண்டிய தேவையோ இல்லை.
தெளிவான தரைப் பகுதிக் காட்சியைப் பார்ப்பதற்காக காருக்கு அடியிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கரடு முரடான பகுதிகளில் வழியறிந்து செல்வதற்கு டிரைவருக்கு இது உதவியாக இருக்கும்
கரடு முரடான பகுதிகள் உள்பட எல்லாப் பகுதிகளிலும் கார் சக்கரங்கள் அதிகம் சறுக்காமல் இருக்கும் வகையில், நிலப் பகுதிகளுக்கு ஏற்ற இழுவை கட்டுப்பாட்டு அமைப்புகள் காரில் உள்ளன.
![](https://inmathi.com/wp-content/uploads/2021/12/M-K-Stalin-240x300.jpg)
கரடு முரடான அரசியல் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிற முதல்வர் ஸ்டாலினுக்கு, உண்மையிலேயே கரடு முரடான சாலைகளில் செல்வதற்கும் மலைப் பகுதிகளில் ஏறிச் செல்வதற்கும் இந்த டிபண்டர் கார் உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
தரையில் இருந்து காரின் அடிப்பகுதி உயரத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ Coil Spring Suspension அமைப்புடன் கூடிய Electronic Air Suspension அமைப்பு உதவுகிறது. வேகத் தடைகள் முறையாக அமைக்கப்படாத பகுதிகளில் காரின் அடிப்பகுதி உரசாமல், இடிக்காமல் இருப்பதற்கு இது வழிவகுக்கிறது.
தண்ணீரை பாதுகாப்பாக கடந்து செல்வதற்கு 3 அடி உயரமான காரின் அமைப்பு உதவும். கார் டயர்கள் அதிகம் சேதம் அடையாமலும், பங்க்சர் ஆகாமலும் இருப்பதற்காக டயர்களின் சைட் வால் டெப்த் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கரடு முரடான பகுதிகள் உள்பட எல்லாப் பகுதிகளிலும் கார் சக்கரங்கள் அதிகம் சறுக்காமல் இருக்கும் வகையில், நிலப் பகுதிகளுக்கு ஏற்ற இழுவை கட்டுப்பாட்டு அமைப்புகள் காரில் உள்ளன
கரடு முரடான அரசியல் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிற முதல்வர் ஸ்டாலினுக்கு, உண்மையிலேயே கரடு முரடான சாலைகளில் செல்வதற்கும் மலைப் பகுதிகளில் ஏறிச் செல்வதற்கும் இந்த டிபண்டர் கார் உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Read in : English