Site icon இன்மதி

நீட் தேர்வு: தமிழக அரசின் உறுதி வெற்றி பெறுமா!

Read in : English

நீட் தேர்வை பொறுத்த வரை தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. அந்தந்த மாநில சூழலுக்கு ஏற்றவாறு மாநில அரசு தங்களுக்கான கொள்கையை வகுத்துக் கொள்வதற்கான உரிமையை நீட் குலைக்கிறது.

மருத்துவ மாணவ சேர்க்கை தமிழகத்தில் நன்றாகவே செயல்பட்டு வந்தது. புத்தகப் புழுக்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும், தரமான பள்ளியில் படிக்காத கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு இந்த சேர்க்கை முறை மூலம் பலித்தது.

மருத்துவ படிப்பிற்கு பின் இவர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பி சேவை ஆற்றுவர் எனவும் கூறப்பட்டது. இது தவிர, மருத்துவத் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ மருத்துவக் கல்வி முறையும் ஒரு காரணமாக அமைந்தது.

ஆனால், இதையெல்லாம் புரட்டிப் போட்டது நீட் தேர்வு முறை. மருத்துவ சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தனியார் பயிற்சி மையங்களில் படித்தால் மட்டுமே தேர்வாக முடியும், இதற்கான கட்டணமும் ஏழை மாணவர்களுக்கு எட்டாக் கனியாக ஆனது. நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் ஒரு முறைக்கு மேல் தேர்வு எழுதுவதை வைத்து பார்த்தாலே இது புரியும்.

நீட் செயலுக்கு வருவதிலும், தொடர்ந்து தேர்வு நட்த்தப்படுவதிலும் உச்ச நீதி மன்றதுக்கு பெரும் பங்கு இருக்கிறது.

தனியார் மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள் வசூலிக்கும் நன்கொடை கட்டணமே, நீட் தேர்வை நீதிமன்றம் பரிந்துரைக்க முக்கிய காரணம்.
தமிழகத்தில் இந்த கட்டண முறை வெகு காலமாக நடைமுறையில் உள்ளதை அனைவரும் அறிவோம்.

இந்த வசூல் வேட்டை பல வணிகத்திற்கு அச்சாரமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் பெரும் முதலாளிகளையும் அரசியல்வாதிகளையும் உருவாக்கியது. இது பொது வெளியில் பேசப்பட்டாலும், ஊடகங்கள் இதைப் பற்றி பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

தமிழகத்தில் இதற்கெதிராக சட்டம் இருந்தாலும், நடவடிக்கை எடுக்கப்பட வில்லை, மாணவர்கள் இது குறித்து புகார் அளிக்காதது காரணமாக கூறப்பட்டது. அரசியல்வாதிகள் அல்லது அவர்களது துணையுடன் இந்த கல்லூரிகள் நடத்தப்படுகிறது, வர்த்தகம், அரசியல், ஊடகம் என பல துறைகளிலும் இவர்கள் ஆதிக்கம் உள்ளது.

தி டைம்ஸ் ஆப் இந்தியா, டைம்ஸ் நவ் இந்த நன்கொடை வசூல் குறித்து பத்து வருடங்கள் முன், செய்தி வெளியிட்டது. இந்திய மருத்துவ கவுன்சில் நீட் தேர்விற்கான அடிப்படையை வகுத்து வந்த அதே வேளையில், 2013 ஆம் ஆண்டு இது சட்ட விரோதமானது என உச்சநீதி மன்றம் சாடியது.

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு எதிராக இது அமையும் எனஅளிக்கப்பட்ட மனு மீதான விசாரணையில் நீதிமன்றம் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது. ஆனால், தகுதியில்லாத மாணவர்கள் பணம் கொடுத்து மருத்துவ சீட் பெறுவதை நீட் தேர்வு தடுக்கும் என நீதிபதி தவே, தன் மாற்று கருத்தை தெரிவித்திருந்தார்.

2016 ஆம் ஆண்டு, அதே நீதிபதி தவே தலைமையிலான பெஞ்ச், நீட் தேர்வு மீதான முந்தைய தீர்ப்பை ரத்து செய்து மத்திய அரசின் கொள்கையை செயல்படுத்தியது.

நீட் தொடர்பான பல மனுக்களின் விசாரணைகள், கருத்துகள், ஆணைகள் என பிறப்பிக்கப்பட்ட அனைத்தும், தகுதியில்லாத மாணவர்கள் மருத்துவ படிப்பில் பணம் கொடுத்து சேர்வதை நீட் தேர்வு தடுக்கும் எனவே குறிப்பிட்டது.

இந்தியா முழுவதும் மருத்துவர்களின் திறனை பாதுகாக்கும் நோக்கிலேயே நீதிமன்றம் செயல்படுகிறது.

சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமை குறித்து தனது கருத்தை கடந்த ஆண்டு உச்சநீதி மன்றம் கூறுகையில், மருத்துவ சீட்களை விற்பது தகுதியான மாணவர்களுக்கு எதிரான செயலாகும் என குறிப்பிட்டது. தேசிய நலனை பாதுகாப்பதாகவே நீட் தேர்வை அணுகுவதாக இந்த தீர்ப்பு அமைந்தது.

“பணத்தை கொடுத்து சீட் வாங்குவதற்கு கல்வி வியாபாரம் அல்ல,” என தீர்ப்பின் செயல் பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. கல்வி வணிகமயமாவதை தடுக்க இந்த திருத்தத்தை மேற்கொள்ள இது முதல் படி, என்பதால் நீதிமன்றம் இதை திரும்பப்பெற முடியாது என குறிப்பிட்டது. நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினீத் மிஸ்ரா மற்றும் எம் ஆர் ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கல்வியை தொண்டு அமைப்பாக மீண்டும் உருவெடுக்க வேண்டும் என கூறியது.

இந்த ஆண்டு, சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கான நீட் கேள்விகள் குறித்த மனுவில், தனியார் கல்வி நிறுவனங்களின் வசூல் வேட்டைக்கு எதிராகவும், கல்வி வணிகமாவதை தடுக்கவும், நீட் தேர்வு உதவும் என மீண்டும் சுட்டிக்காட்டியது.
நீட் தேர்வு சம்பந்தமான முடிவுகள் இறுதியில் உச்ச நீதி மன்றம் தான் எடுக்கிறது.

கடந்த காலங்களில் தன் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் மாற்றியிருந்தாலும், தார்மீக மற்றும் தேசிய நலன் என்ற கோணத்தில் நீட் அணுகப்படுவதால், உச்சநீதி மன்றம் தன் நிலைப்பாட்டை மாற்றுமா என்பது கேள்விக்குறியே.

தனியார் கல்வி நிறுவனங்களின் வசூலை தவிர்க்க நீட் தேர்வு முக்கிய காரணம் என்பது தற்போது அரசு கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கும் எதிராக திரும்பியுள்ளது.
பல்கலைகழக சுயாட்சி, சட்டத்தில் உள்ள சில ஒட்டைகள் ஆகியவற்றை தவிர்த்து தமிழக அரசிற்கு உச்ச நீதிமன்றத்தில் முரையீடுவதற்கு பிற சட்ட வழிகள் குறைவாகவே உள்ளன.

Share the Article

Read in : English

Exit mobile version