Site icon இன்மதி

தலைவர்களைப் பற்றிய உண்மைகளை சொல்லும் படங்களுக்கு நேரம் வந்துவிட்டது: தலைவி எழுத்தாளர்

Read in : English

தலைவி புத்தகத்தின் எழுத்தாளர் அஜயன் பாலா தன்னுடைய புத்தகத்தின் தழுவலில் வெளிவந்துள்ள திரைப்பட்த்தின் எல்லா அம்சங்களும் திருப்தி அளிப்பதாக கூருகிறார். பாலா சென்ற ஆண்டு படம் வெளிவரும் முன்பு திரைக்கதையின் அமைப்பு சரியாக இல்லை என்று ஒரு கட்டத்தில் விமர்சனம் செய்தார். அஜயன் பாலாவின் பேட்டி கீழே:

Q: உங்கள் புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள தலைவி திரைப்படம் மகிழ்ச்சி அளிக்கிறதா? நாடகத்தன்மையை மிகைப்படுத்த சில நேரங்களில் கதை உண்மையிலிருந்து விலகியிருக்கிறதே?

A: நூறு சதவீதம் திருப்தி. நான் தலைவி என்ற நூலின் எழுத்தாளராக மட்டும் அல்லாமல் அடிப்படையில் ஒரு திரைக்கதை எழுத்தாளனும் கூட . மதராசபட்டினம் தொடங்கி இயக்குனர் ஏ .எல். விஜய் அவர்களின் பல படங்களில் திரைக்கதையில் அவரோடு சேர்ந்து எழுதியிருக்கிறேன். இந்த் ப்டத்தின் திரைக்கதை உருவாக்கத்திலும் பங்களித்திருக்கிறேன். . ஒரு புத்தகத்தை திரைப்படமாக மாற்றும் போது நாடக அம்சம் சற்று தேவைப்படும். அந்த நாடகத்தன்மை அளவோடு இருக்க வேண்டும், மேலும் அதே சமயம் அடிப்படை உண்மை மீது நாடகம் கட்டமைக்கப்பட வேண்டும் . நானே புத்தக ஆசிரியராக இருந்ததால் திரைக்கதையில் மசாலாத்த்ன்மை அதிகமாகிவிடாமல் இருக்க மிகுந்த கவனம் செலுத்தினேன் .
அடிப்படையில் சில விஷயங்களில் உறுதியாக இருந்தேன். உதாரணத்துக்கு படத்தின் இரண்டாம் பகுதியில் அரசியல் நடவடிக்கைகள் எப்படி நடந்ததோ அப்படியே இருக்க வேண்டும் என்று கருதினேன். ஜெயல்லைதாவின் அரசியல் வாழ்வை உருவககிய நிகழ்வுகளே சுவாரஸ்யமான திரைக்கதைக்கு ஈடான திருப்பங்களுடன் அதிரடியனா காட்சிகளுமாக இருந்ததால கூடுமனாவரை நாடகத்தனமை தவிர்த்தோம். இதில் இயக்குனர் ஏ எல் விஜய் அவர்களும் உறுதியாக இருந்தார் . அதே சமயம்
இது இந்தியா முழுமைக்குமான (pan-India) திரைப்படம. , அதன் வீச்சு அதிகம். ஆகவே நாடகத்தன்மைகள் தவிர்க்க முடியாதவை. தலைவி திரைப்படக்குழு கதை கலந்தாலோசனை செய்யும் பொழுது இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத்தின் திறமை மற்றும் அவர்களின் அசாதாரண படைப்பாற்றல் இந்த இரண்டையும் நான் புரிந்து கொண்டேன். அவர்கள் சொன்ன விஷயங்கள் எப்படி திரைப்படத்தின் வெற்றிக்கு வழி சேர்த்தது என்பதை ஒரு சினிமா மாணவனாக உணர்ந்தேன்.

Q: சில இடங்களில் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் முழுமையான ஆற்றல் குறைவாக இருக்கிறதே?

A: இல்லை. அந்த ஆற்றல் முழுமையாக இருந்தது. கங்கணாவை பொருத்தவரையில் அவர்கள் ஹிமாச்சல மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஜெயலலிதாவோ தமிழ் நாட்டை சேர்ந்தவர். கலாச்சார வேறுபாடுகள் நிறைய உண்டு. கங்கணாவிற்க்கு prosthetic make-up செய்து ஜெயலலிதாவின் உருவத்தை போல் ஆக்கியிருக்க முடியும். ஆனால் அப்படி இல்லாமல், ஒரு பெண் என்ற அடிப்படையில் இதய ரீதியாக அவர்கள் ஜெயலலிதாவை சித்தரித்து இருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு ஜெயலலிதாவின் ஆளுமையை சித்தரிக்கும் பொழுது இரண்டு இடங்களில் அவர்களின் empowered walk மூலம் கொண்டு வருவார்கள். கட்சி அலுவலகத்திற்குள் அவர்கள் கட்சி புடவை அணிந்து கொண்டு வரும் பொழுது, பிறகு எம்ஜிஆர் உடல் நிலை குன்றி இருக்கும் பொழுது, தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் பொழுது அந்த walk அவர்களின் ஆளுமையை, வெற்றி நடையை கொண்டு வரும்.

அதே போல் அரவிந்த்சாமி, எம்ஜிரை அப்படியே replica பண்ணுவதோ, அவருடைய slapstick movements கொண்டு வருவதோ எளிது. ஆனால் அப்படி செய்யாமல எம்ஜிஆராக வாழ்ந்து இருப்பார் அரவிந்த்சாமி.

Q: ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றவுடன் தலைவி முடிகிறது. தலைவி- 2 சாத்தியமா?

A: தலைவியின் தொடர்ச்சி (sequel) கண்டிப்பாக எடுக்கலாம். ஆனால் . திரைப்படத்தை திரைப்படமாக, சரித்திரத்தை சரித்திரமாக பார்க்ககூடிய audience இருந்தால் தலைவி தொடர்ச்சியை உருவாக்க முடியும். ஜெயலலிதாவிடம் இருந்த நல்ல கெட்ட விஷயங்களை மூன்றாம் நபராக நின்று பார்க்க கூடிய பக்குவம் திரைப்படம் பார்ப்பவர்களுக்கு இருந்தால் பிரமாதமான தலைவி 2 திரைப்படம் பண்ணலாம்.

Q: தமிழ் பார்வையாளர்கள் தங்கள் தலைவர்களை புற நிலையாக பார்க்கத் தயாராக இருக்கிறார்களா, அல்லது தெய்வங்களாக போற்றுகிறார்களா?

A: கண்டிப்பாக. இந்த படத்திலேயே நாங்கள் ஜெயலலிதாவிற்க்கு divine image கொடுக்கவில்லை. ஜெயலலிதாவிடம் இருந்த இருண்ட நிழல்களை சித்தரித்து இருக்கிறோம். என்னவென்றால், ஒரு super heroவாகத்தான் நிஜ வாழ்க்கையில் அவர்கள் இருந்தார்கள். அதைத்தான் தலைவி படம் சொல்கிறது. அவரின் பிடிவாத குணம் மற்றும் அவரிடம் இருந்த சில இருண்ட அம்சங்களையும் கலந்துதான் தந்திருக்கிறோம்.

இப்படி பல கதைகள் இருக்கின்றன. தமிழ் நாட்டில். எல்லா நபர்களிடமும் நல்லது, கெட்டது இருக்கும். அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மக்களிடம் இருந்தால் அற்புத திரைப்படங்கள் தயாரிக்கலாம்.

Q: இதுவரை தலைவி படத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?

A: படம் இப்பத்தானே வெளியாகி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு கண்ணோட்டம் இருக்கும், விமர்சனம் இருக்கும். எல்லாவற்றையும் சந்திக்கும் பக்குவம் இருக்கிறது எங்களுக்கு.

Share the Article

Read in : English

Exit mobile version