Site icon இன்மதி

1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் நிறைந்த வேளச்சேரியின் வரலாறு

வேளச்சேரி செல்லியம்மன் கோயில்

Read in : English

இன்று வேளச்சேரி பரப்பரப்பான நகரமாக உள்ளது.வேளச்சேரியிலிருந்து பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் சென்னையின் பல பகுதிகளுக்கு இணைப்பு சாலைகள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் வேளச்சேரியில் நவீன தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் மிக உயர்ந்த கட்டடங்களும் உள்ளன. இருந்தபோதும் வேளச்சேரி ஒரு பழமையான நகரம். 1,100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள்  வேளச்சேரியில் இருக்கின்றன, அவை குறிப்பாக வேளச்சேறியை பற்றி பல கதைகள் தெரிவிக்கின்ற நிலையில்,  2000 வருடங்கள் தொன்மையான புலியூர்கோட்டத்தின் ஒரு பழமையான பகுதியாக வேளச்சேரி இருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

வேளச்சேரி, கிண்டியிலிருந்து கிழக்குப்புறமாக சில கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு சோழர் காலத்தைச் சேர்ந்த இரு புராதான கோயில்கள் தண்டீஸ்வரம் கோயில் மற்றும் செல்லியம்மன் கோயில் உள்ளன.  அதில் தண்டீஸ்வரம் கோயில் பாழடைந்த நிலையில் உள்ளது. இக்கோயிலின் விமானம்   6.72 மீட்டர்  உயரத்தில் நடுத்தர அளவில் உள்ளது.  விமானம் கன செவ்வக வடிவத்தில் அமைந்திருப்பதால் ஒவ்வொரு பகுதியிலும் நன்கு வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த விமானத்தில் திருமுல்லைவாயில் கோயிலில் அமைக்கப்பட்டது போல் திருவுருவங்கள் இல்லையெனினும் அதன் எளிமையின் காரணமாக அழகாக உள்ளது.

வேளச்சேரி

கருவறையின் பெரும்பாலான சுவர்களில் சோழர்கால கல்வெட்டுகள் உள்ளன. அக்கல்வெட்டுகளில் முதன்மையானது முதலாம் பராந்தகச் சோழனின் மகன் கங்காராதித்யா(10ஆம் நூற்றாண்டு) ( 1911-ல் 306, தெற்கு சுவற்றில் 1911-ல் 315) மத்திய கருவறையின்  மேற்கு சுவரில்  கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கும். மற்ற கல்வெட்டுகள் முதலாம் ராஜராஜன் காலத்தைச் சேர்ந்தவை.(வடக்கு சுவர்) முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளும் உள்ளன.(மேற்கு மற்றும் வடக்கு சுவர்கள்) குலோத்துங்க சோழன் காலத்து கல்வெட்டுகளும் உள்ளன.( வடக்கு மற்றும் தெற்கு சுவர்கள்) மற்றவை கடட்டத்தின் தொன்மையை விளக்குவதாக  உள்ளன.(302-305 மற்றும் 1911-ல் 307-314) சோழ அரசர் முதலாம் ராஜராஜனை பற்றிய கல்வெட்டுகள் வேளச்சேரி மட்டுமில்லாது சாந்தோம்(மைலாப்பூர்) திருவொற்றியூர், பாடி, புலியூர்,  பூந்தமல்லி மற்றும் பல்லாவரத்திலும் காணப்படுகிறது.

வேளச்சேரியில் காணப்படும் சில கல்வெட்டுகளிலில்  வேளச்சேரி என்பது வெளச்சேரி என்றும் வெளிச்சேரி என்றும் ஜினா சிந்தாமணி சதுர்வேதிமங்கலம் என்றும் பதியப்பட்டுள்ள்ளது. இங்குள்ள கடவுள் திரு தண்டீஸ்வர தேவா, திரு தண்டீஸ்வரம் உடையார், திரு தண்டீஸ்வரம் உடைய நாயனார் மற்றும் திரு தண்டீஸ்வரம் உடைய மகாதேவா என பல பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளார். கல்வெட்டில், இந்த ஊரின் நிர்வாகப் பெயர் சபா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை பகுதிகளில்  முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திர சோழர்(1012 – 1044) பற்றி 25 கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்குறிப்புகள் சாந்தோம்( மயிலாப்பூர்), திருவொற்றியூர், திருவான்மியூர், பூந்தமல்லி, திருமுல்லைவாயில், வேளச்சேரி ஆகிய இடங்களில் உள்ளன.

செல்லியம்மன் கோயில் மிகவும் சிறிய கோயில். அதன் விமானம் தண்டீஸ்வரம் கோயில் விமானத்தின் வடிவமைப்பில் இருந்து மாறுபட்டது என்றாலும்  உள்ளடக்கமானது. இக்கோயிலிலும் முந்தைய கால சோழர்  கல்வெட்டுகள் உள்ளன. அக்கல்வெட்டில் முதலாம் பராந்தகச் சோழர் மற்றும் பர்த்திவேந்தரவர்மன் பற்றிய குறிப்புகள் தெற்கு சுவரில் உள்ளது. இக்கோயில் சிறியதாக இருப்பதால் பேசும்படியான மண்டபங்களோ தூண்களோ இல்லை. வேளச்சேரியில் ஒருவரை கவர்ந்திழுக்கும் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த கற்களில் பொறிக்கப்பட்ட உருவங்கள் உள்ளன. அதில் விஷ்ணுவும் அவரது உபநயர்களும் கூரையற்ற வெட்டவெளியில் சாய்ந்திருப்பது  அனைவரையும் ஈர்ப்பதாக உள்ளது. அதில் உட்கார்ந்திருக்கும் நிலையில் உள்ள மூன்று உருவங்கள் கிட்டத்தட்ட   1.82 மீட்டர் உயரமுள்ளவை. இந்த உருவங்கள் வேளச்சேரியில் சிதைவுற்ற நிலையில் இருந்த ஒரு கோயிலில் இருந்து கொண்டுவரப்படட்வை என அவ்வூர் மக்கள் கூறியுள்ளனர்.

யோக நரசிம்மர் கோயிலில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள் உள்ளன. இங்கு அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் மூன்று அடி அளவுள்ள வேதநாரயணாரின் வெண்கல திருவுருவம். இவர் நின்ற நிலையில் நரசிம்மர் கோயிலில் வீற்றிருக்கிறார்.  பூமிக்கடியில் புதையுண்டிருந்த இவ்வுருவம்  ஒரு விபத்தாக 100-110 வருடங்களுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட்டது என கூறப்படுகிறது.

வேளச்சேரி, கோட்டூர் நாட்டின்(1911-ல் 305) ஒரு பகுதியான திருவான்மியூருடன் சேர்ந்தே உள்ளது. கோட்டூர் நாடு, பின்னர் கோட்டூர் என்றழைக்கப்பட்டது. இது கிண்டிக்கு அருகில் உள்ளது. வேளாச்சேரியின் மற்றொரு பெயர் தினச்சிந்தாமணி சதுர்வேதிமங்கலம்.

வேளச்சேரி பிடாரி கோயில்

இங்கு வசிக்கும் பெரும்பாலானோருக்கு இக்கோயில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள பழமையான சப்த மாதர்கள் அல்லது சப்த கன்னியர் கோயில்களில் ஒன்று என்பது தெரியாது. தண்டீஸ்வரம் கோயிலில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கோயில் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் உள்ளது.

சப்த கன்னியர்  வழிபாடு தமிழகத்தில் இருக்கும் தொன்மையான வழிபாடு.  இக்கோயில்கள் நூற்றுக்கணக்கில் பிடாரி அம்மன் அல்லது செல்லியம்மன் என்ற பெயரில் உள்ளன. வேளச்சேரியில் உள்ள சப்த மாதர்கோயில் மற்ற கோயில்களை விட சிறப்பு வாய்ந்தது. காரணம் இங்கு பர்த்திவேந்தர வர்மன் குறித்த கல்வெட்டு (966    சி.இ) உள்ளது.( இவர் பல்லவ பேரரசை சார்ந்தவர் என்றும் வீர பாண்டியர் தலையை வெட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)

மற்றொரு கல்வெட்டு 967 சி.இ,  காலத்தைய, ஆதித்ய கரிகாலன்  வாழ்ந்த காலகட்டத்தைச் சேர்ந்தது. இக்கோயிலிலுள்ள  அனைத்து உருவங்களும் சோழர் காலத்து சிற்பங்கள் எனக் கூறப்படுகிறது. கிராம தேவதை வழிபாட்டில் 7 கல் வழிபாடு என்பது சப்த மாதர் அல்லது சப்த கன்னியர் வழிபாட்டைக் குறிக்கும். இதனை பிரதிபலிப்பதாக இக்கோயில் உள்ளது. இதில் அதிர்ச்சியுறக்கூடிய விஷயம் என்னவெனில் இக்கோயில் புனரமைக்கப்பட்ட பின்பு அங்கிருந்த விலைமதிப்பில்லாத கல்வெட்டுகள் காணாமல் போய்விட்டன.

Share the Article

Read in : English

Exit mobile version