Read in : English
இன்மதி.காம் ஒரு புதிய கருத்துக் களத்தை இன்று உருவாக்கி உள்ளது. சென்னை சேத்துப்பட்டு வெங்கட சுப்பாராவ் கச்சேரி அரங்கத்தில் இன்று மாலை திரைப்பட இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம், பிரத்யேகமாக கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். ’கிளாஸ் ஆஃப் கிளாஸ்’ எனும் இந்த நிகழ்ச்சியில் 30 முன்னணி கர்நாடக இசையமைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஒரு திரைப்பட இசையமைப்பாளர் முழு நேர கர்நாடக சங்கீத இசை கச்சேரியை நடத்துவது இதுவே முதல்முறை. அதுவும் இதில் அவரின் சொந்த இசை கலைஞர்களும் இதில் கலந்து கொள்கின்றனர். திரைப்பட பாடல்களில் கர்நாடக இசை கலைஞர்கள் கலந்து கொள்வார்கள். திரைப்படம் சம்மந்தப்பட்ட இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று கொள்வார்கள். ஆனால் இந்த கதாப்பாத்திரங்களை மாற்றும் வகையில், திரைப்பட இசையமைப்பாளர் முழு நேர கர்நாடக சங்கீத இன்னிசை கச்சேரியை நடத்துகிறார். இவருடன் பல்வேறு சென்னையில் உள்ள மற்ற இசைக் கலைஞர்களும் அவருடன் இணைந்து இன்னிசையை ஜூலை மாதம் 28ந் தேதி வழங்க உள்ளனர்.
அருணா சாய்ராம், நித்யஸ்ரீ மகாதேவன், பி. உன்னிகிருஷ்ணன், ஸ்ரீராம் பரசுராம், அனுராதா ஸ்ரீராம், திருச்சூர் சகோதரர்கள் (பிரதர்ஸ்), காயத்ரி வெங்கட்ராகவன், சிக்கில் குருசரண், அபிஷேக் ரகுராம் மற்றும் ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பாரம்பரிய இசை கலைஞர்களுடன் திரைப்பட இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இதுகுறித்த ஒரு பிரத்யேக உரையாடலில், ரமேஷ் விநாயகம் தனது சிந்தனை மற்றும் செயல்பாடுகள் குறித்து விவரித்தார். அதில், இசையால் தாம் வளர்ந்த விதத்தையும் குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ‘‘பாரம்பரிய இசை மற்றும் திரைப்பட இசை வெவ்வேறு தளங்களில் இருப்பதாக நான் உணர்ந்ததில்லை. இந்த இரண்டும் ஒரு ஆரோக்கியமான நீரோடையில் இணையக் கூடியது.
திரைப்பட பாடல்களை பொறுத்தவரை, கர்நாடக ராகங்களை அடிப்படையாக கொண்டவை. கர்நாடக சங்கீத ராகம் இல்லாத திரைப்பட பாடல் அபூர்வமாகவே இருக்கும். இல்லை எதுவும் இருக்காது’’ என்றார். ஆரம்ப காலத்தில் தமிழ் இசை, ராகம், கர்நாடக இசை ஒரே கருத்தில் இருந்தது. ‘‘ராகம் என்பது இசையின் ஒரு பகுதியாகும். கர்நாடக சங்கீதத்தில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், அது மரபுவழியிலான பாரம்பரிய இசையோடு ஓட்டிக் கொண்டிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் சினிமா பாரம்பரியத்ைதயும் தாண்டி சில சுதந்திரங்களை வழங்குகிறது.’’
திரைப்பட இசையில் தன்னை இணைத்துக் கொண்ட கர்நாடக இசை கலைஞர்கள் நாட்டின் மூலை முடுக்கெங்கிலும், ஏழை எளிய வறியவர் என அனைத்து தரப்பு மக்களாலும் அறியப்படுகின்றனர். கர்நாடக இசையில் தொடர்புள்ளவர்களான எம்.எஸ்., ஜி.என்.பி. (GNB), எம்.எம். தண்டபாணி தேசிகர், பாலமுரளி கிருஷ்ணா படங்களில் தோன்றியதன் மூலம் பாமர மக்கள் அவர்களை அடையாளம் காண முடிந்தது.முந்தைய நாட்களில் திரைப்பட இசையில் கூட, சுத்தமான கர்நாடக ராகங்கள் ஆதிக்கம் செலுத்தியது. இது மக்களை ெவகுவாக கவர்ந்தது.
சிறு வயதிலேயே தாம் கர்நாடக இசை மற்றும் பாடல்கள் மற்றும் இலக்கிய மதிப்புகளால் ஈர்க்கப்பட்டதாக ரமேஷ் விநாயகம் கூறுகிறார். மேலும் ரமேஷ், ‘‘என் தந்தை விநாயகத்துக்கு ஒரு வலுவான செல்வாக்கு இருந்தது. ஏனெனில் அவர் இசையமைப்பாளர் மட்டும்மல்ல, மிகச்சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். எனவே நானும் இசையமைக்க தொடங்கினேன். முதன் முதலில் என்னுடைய 12ம் வயதில், நானே பாடல் எழுதி அதற்கு இசையும் அமைத்தேன்.’’ என நினைவுக் கூர்ந்தார்.
மேலும், ‘‘கர்நாடக இசைக்கு கீர்த்தனைகளை தொகுக்க என்னால் இயற்கையாகவே முடிகிறது. ஆதலால், முழு நேர சினிமா இசைக்குள் இருந்தாலும், சென்னையில் ஜூலை 28ந் தேதி தாயார் ஆண்டாள் அரங்கத்தில் கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சியை வழங்குகிறேன்.’’ என்றார்.
தியாகராஜரும், பாபநாசம் சிவன் போன்ற இசை சக்ரவர்த்திகளும் என்னுள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர் என்றும் ரமேஷ் தெரிவித்தார். பாடலை எழுதி அதற்கு நானே இசையமைக்க வேண்டும் என்ற தாக்கத்தினை, அவர்களுடைய கீர்த்தனைகள் என்னுள் ஏற்ப்படுத்தின. கர்நாடக இசையில், ஒரு பாடலை எழுதி அதற்கு தானே இசையமைத்தால் அவர்களை வாக்கையகாரர் என்று அழைப்பார்கள். மக்கள் என்னையும் ஒரு வாக்கையகாரராக கருத வேண்டுமென விரும்புகிறேன். அதற்கான முயற்ச்சியில் செயல்பட தொடங்கிவிட்டேன். ’கிளாஸ் ஆஃப் கிளாஸ்’ எனும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக, என்னுடைய முயற்ச்சிகள் தொடரும், என்று ரமேஷ் தெரிவித்தார்.
Read in : English