Site icon இன்மதி

பாமர மக்களுக்கும் கர்நாடக இசையை கொண்டு சென்றவர் அருணா சாயிராம்

Read in : English

பதம் மற்றும் ஜாவளிகளை தனக்கே உரிய அரிய பாணியில் வழங்கி தனது பெயரை நிலை நாட்டியுள்ள மதிப்பிற்குரிய ப்ருந்தாம்மாவின் வழியில் வந்த திருமதி அருணா சாய்ராம், இந்த முறையை முழுவதுமாகப் பின்பற்றாமல் இசை பாமரர்களுக்காக வேண்டி, மாடு மேய்க்கும் கண்ணா மற்றும் காளிங்க நர்த்தன தில்லானா போன்ற உருப்படிகளின் மீது அதிக கவனம் செலுத்தியதாக பரம்பரை கர்நாடக சங்கீத ரசிகர்கள் இவர் மீது பழியைப் போடுவர்.

இந்த வருடத்தின் சங்கீத கலானிதி அருணா சாயிராம் கச்சேரிகளில் அபங்க் எனும் மகராஷ்ட்ரிய முறை பாடல்களும் தவறாமல் இடம் பெறும். இந்த செய்கைகள் யாவுமே கர்நாடக சங்கீதத்தைப் பரவலாக்கும் தன்மை கொண்டிருந்தது என்பதை அனவரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதில் அருணாஆற்றிய பங்கை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அபங்க் பாடல்கள் ரசிகர்களைபுளகாங்கிதம் அடையச் செய்து ஆட வைத்தது என்பதற்கு இவர் கச்சேரிகள் ஒவ்வொன்றும் நிரூமணமாக நிற்கின்றன.

ஆனந்தபைரவி போன்ற ஒரு ரக்தி ராகத்தை இவர் கையாளும் விதம் இவரது ஆழ்ந்த வித்வத்தை வெளிக்கொணரும். இது போன்ற ராகங்களுக்கு இவர் அளிக்கும் மரியாதை இவற்றின் தனித்தன்மையச் சார்ந்திருக்கும். இங்கு மேம்போக்கிற்குச் சற்றும் இடமில்லை. இது போன்ற இடங்களில் தேர்ந்த ரசிகர்கள் தங்களது பாராட்டை அளிக்க நிறைய வாய்ப்புகளை இவர் ஏற்படுத்துவார்.

இவர் நடத்தும் கச்சேரிகளுக்குக் குவியும் கூட்டம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கொண்டிருக்கும். அவர்களின் பிரத்யேக தேவைகள் – தமிழ் பாடல்கள், உயர்ந்த பயிற்சி முறை, பதம் மற்றும் ஜாவளிகளின் சுவை. – இவற்றை எல்லாம் மனதில் கொண்டு ஒவ்வொரு வகை ரசிகர்களையும் திருப்திப் படுத்தமாறு இவரது கச்சேர்களின் உருப்படிகள் அமைந்தே தீரும். பிரெஞ்ச் மற்றும் ஜர்மானிய மேற்கத்திய சங்கீத வல்லுநர்களுடன் இணைந்து இவர் வழங்கிய நிகழ்ச்சிகள் அனவைரையும் பூரிப்படையச் செய்துள்ளது. நமது சங்கீதத்தில் எல்லாம் செவி வழிக்கல்வி; மேற்கத்திய சங்கீதம் எழுதிப் படித்து வழங்கும் தன்மை பெற்றிருக்கும்.

இவற்றின் நுணுக்கங்களைக் கற்றறிந்து அருணா ஆற்றிய நிகழ்ச்சிகளால், நமது சங்கீதத்தை வெளிநாடு வரை கொண்டு சென்று பரப்பிய புகழ்மிக்க பண்டிட் ரவிசங்கர், ராம்நாட் க்ருஷ்ணன், டி விஸ்வா ஆகியோரின் அருகில் இவரும் இடம் பிடித்துள்ளார்.

நமது சங்கீதத்தை முழுமையாகக் கற்றவர்கள் எந்த சங்கீதத்தையும் எடுத்தாள இயலும் என்பது உண்மையே. அருணாவிற்கு இந்த பாக்கியம் உண்டு. ஆம் நமது சங்கீதம் அவருள் ஆழப் பதிந்துள்ளது, அதுவும் சரியான வயதில். மற்றொன்று. இவர் ஊத்துக்காடு வெங்கடகவியின் பாடல்களை நீடாமங்கலம் பாகவதரின் முறைப்படி, அவரால் ஈர்க்கப்பட்டு உருக்கத்துடன் பாடியவர். வெங்கடகவியின் பாடல்கள் ஆரம்பத்தில் ஒரு விளம்பத் தன்மையும் முடிவில் ஒரு துரிதத் தன்மையையும் ஒரு சேரப் பெற்றிருப்பவை. இந்த இரண்டு இடங்களிலுமே அவற்றிற்குரிய பிரயோகங்களால் அருணா தனது சங்கீதத்தை மிகவும் சிறப்புடன் விளங்கச் செய்தவர்.

 

Share the Article
WhatsappTelegramPinterestFacebookTwitter

Read in : English

Exit mobile version