Site icon இன்மதி

ஃபார்மாலின் கலப்பு: மீனவர்கள் கருத்து சொல்கிறார்கள்

Credit: Pinakpani (Wikimedia Commons)

Read in : English

கடந்த சில நாள்களாகவே மீன் உணவுப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பார்மலின் கலக்கப்பட்ட மீன்கள் என்ற செய்திகள்பரவலாக வந்த வண்ணம் உள்ளன. கேரளாவில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் வாகனங்களில் விற்பனைக்காககொண்டுவரப்பட்ட மீன்களில் இந்த வேதிப் பொருள் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்திருந்தது.

பொதுவாக,  பார்மலின்  என்ற வேதிப்பொருள் இறந்த மனித உடல்களை  நாள்கணக்கில் கெட்டுப் போகாமல் பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது.இதனை, உணவாக உட்கொள்ளும் மீன்களில் கலப்பதன் மூலம், அதனை தொடர்ந்து உண்பவர்களுக்கு கேன்சர் உள்ளிட்ட கொடும் நோய்கள் வரக்காரணமாக இருப்பதாக மத்திய மீன்வளப் பல்கலைகழக பேராசிரியர் அசோக் குமார் கூறுகிறார். ஆனால், பார்மாலின் மற்றும் அமோனியா மட்டுமல்லாது, கடல் உணவுகள் கெட்டு போகாமல் பாதுகாக்க சோடியம் பென்சொனேட் எனும் வேதிப் பொருட்களும் கலக்கப்படுவதாக கூறுகிறார்தேசிய மீனவர் பேரவை தலைவரும், புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏவுமான இளங்கோ. இந்த வேதிப் பொருட்களானது பரவலாக பாட்டில்களில்அடைக்கப்பட்ட ஊறுகாய், குளிர்பானங்கள் ஆகியவற்றில் குறைந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றன. “ சோடியம் பென்சொனேட்டும் நாம் தினசரிஉண்ணும் மீன்களில் சேர்க்கப்பட்டிருந்தால், ஆரம்பத்தில் அலர்ஜி உள்ளிட்ட நோய்களை உருவாக்கி, புற்று நோய் வரை உருவாக்க வல்லது” எனக்கூறுகிறார் பேராசிரியர் அசோக் குமார்.

கேரளாவில் பார்மாலின் மற்றும் வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட மீன்கள் பிடிபட்ட  நிலையில், அவை தமிழகம் மற்றும் ஆந்திராவிலிருந்துகொண்டுவரப்பட்டவை என  ஆங்காங்கே பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், கேரள அரசின் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இதனைமறுக்கின்றனர். “நாங்கள் மாநிலத்தின் பல பகுதிகளிலும் சோதனைகள் செய்து வருகிறோம். பல இடங்களில் பார்மாலின், அமோனியா மற்றும்சோடியம் பென்சோனெட் வேதிப் பொருட்கள் கலந்த மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை குறிப்பிட்ட மாநிலங்களைச் சார்ந்தவியாபாரிகளால் கொண்டுவரப்பட்டவை எனக் கூற இயலாது. பரவலாக, வட மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களிலிருந்தும் மீன்கள் கேரளத்திற்குவிற்பனைக்காக வருகின்றன. அவற்றில் சிலவற்றில் இத்தகைய வேதிப்பொருட்கள் கலந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம்.” எனக் கூறுகிறார், கேரளஅரசின் உணவுப் பாதுகாப்புத்துறை ஆய்வு அதிகாரி விஜித். மேலும், அவர் இந்த வேதிப்பொருட்கள் குறித்த அபாயத்தைப் பற்றிய விழிப்புணர்வைஅனைத்து தரப்பினருக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகிறார்.

இதனிடையே,  மீனவர்கள் தான் மீன்களில் வேதிப்பொருள்கள் கலந்து விற்கின்றனர் என்பது போல் பரப்பப்படும் செய்திகளை  திட்டவட்டமாக மறுக்கிறார் தேசிய மீனவர் பேரவையின் தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ இளங்கோ, அவர் கூறுகையில் “மீனவர்கள் மாதக் கணக்கில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றாலும் கூட, ஐஸ் கட்டிகள் மற்றும் ப்ரீசர் உள்ளிட்ட வசதிகளுடனேயே செல்கின்றனர். அவர்கள், ஒரு கிலோ மீனுக்கு கிட்டதட்ட அதற்கு இணையான எடையுள்ள பனிக்கட்டிகளை பயன்படுத்துகின்றனர். அவர்கள், கரைக்கு கொண்டு வந்ததும் அவர்களிடமிருந்து மொத்த வியாபாரிகள் மீன்களை விலைக்கு வாங்குகின்றனர். பின்னர் அதனை வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இந்த வேதிப் பொருட்கள், அதிக லாபம் பெற வேண்டும் என்ற சிந்தனை கொண்ட சில பேராசைமிக்க வியாபாரிகளால் கலக்கப்படுகிறது “ எனக் கூறுகிறார். அவரது இந்த கருத்தையே, குளச்சலை சேர்ந்த படகு உரிமையாளரும், மீனவர் ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகியுமான ஆன்றோ லெனினும் ஆமோதிக்கிறார். ஆன்றோ கூறுகையில், “ கடலில் மீனவர்களால் பிடித்து வரப்படும் அதே மீன்களைத் தான் மீனவர் குடும்பங்களும் உண்ணுகின்றனர். பொதுவாக, ஐஸ்கட்டிளின் மேற்பகுதி கரையாதிருக்க, அதன் மேல் உப்பினை போடுவது வழக்கம். மற்றபடி , இயற்கையில் கேடற்ற சத்துக்கள் கொண்ட அசைவ உணவான மீனில் வேதிப்பொருட்கள் சேர்க்கிறார்கள் எனக் கூறுவதன் பின்னில் மறைமுக உள்நோக்கங்கள் எதுவும் இருக்கலாம்.” எனக் கூறுகிறார் அவர்.

கன்னியாகுமரி மாவட்டம் மேல்மிடாலம் மீனவர்  சி. பெர்க்மான்ஸ் – சின்னமுட்டம், தூத்துக்குடி போன்ற சில துறைமுகங்களில் அன்றன்று பிடிக்கப்படும் மீன்கள் அன்றைக்கே சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. பல நாள்கள் தங்கி நின்று மீன் பிடிப்பது பெரிய அளவில் இல்லை. அது போன்றே, பல நாள்கள் தங்கி மீன் பிடிக்கும் படகுகளிலும் அவற்றை பாதுகாக்கும் வசதிகள்  உள்ளன.

நீண்ட நாள்கள் கடலில் தங்கி மீன் பிடிக்க செல்லும் மீனவரான இருதய தாஸ் கூறுகையில், பொதுவாக, நாங்கள் செல்லும் படகுகளின் விலை ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம். அவற்றில் ப்ரீசர் வசதிகள் பெரிய அளவில் செய்யப்பட்டிருக்கும். எங்களிடமிருந்து மீன் வாங்கும் வியாபாரிகள் அவற்றை பதப்படுத்தி, மீன் குறைவான காலங்களில் விற்கும் நடைமுறையை சிலர் பின்பற்றுவது வழக்கம். அவர்கள் எத்தகைய முறைகளை பின்பற்றுகிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாது.

பட்டினப்பாக்கம் மீனவரான பி.ஏழுமலை கூறுகையில், நீங்கள் சொல்லும் வேதிப்பொருட்கள் குறித்து எங்களது எந்தவித அறிவும் கிடையாது. ஐஸ் கட்டிகளை வாங்குகிறோம். அவற்றை வைத்து நாள்தோறும் பிடித்து வரும் மீன்களை விற்கிறோம் என்றார்

கடலூர் மீனவரான மோகன் தாஸ் கூறுகையில், பொதுவாக ஐஸ் கட்டிகள் தான் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்துகிறோம். மற்றபடி நாங்கள் வாங்கும் ஐஸில் எதுவும் சேர்க்கிறார்களா எனத் தெரியாது

அபடியிருந்தால் கூட எங்களுக்கு அதனை கண்டுபிடிக்கும் திறமை எல்லாம் இல்லை. இனி, இது போன்ற புரளிகள் மீன் விற்பனை குறைந்து கோழி விற்பனையைக் கூட்டும் திட்டமாகக் கூட இருக்கலாம்.

Share the Article

Read in : English

Exit mobile version