Site icon இன்மதி

காலா: ரஜினியின் வெற்றிப் படகை பின்னிழுக்கும் நான்கு அதிர்ச்சிகள்!

ரஜினிகாந்த் (காலா)

Read in : English

காலா திரைப்படத்தின் நடிகர் ரஜினிகாந்த், அவருடைய மருமகனும் நடிகருமான தனுஷ்(ஒண்டர்பார் ஃபிலிம்ஸ்), தயாரிப்பு நிறுவனமான லைகா, இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும்   பட விநியோகஸ்தர்களை  நான்கு அதிர்ச்சிகள் இறுகப் பற்றியிருக்கின்றன. காலா  திரைப்படம் ஜூன் 7ஆம் தேதி ரிலீஸ்ஆக உள்ளது. முதல் அதிர்ச்சியாக, காலா திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு மிகவும்  மந்தமாக உள்ளது.

பெயர் வெளியிட விரும்பாத தியேட்டர் அதிபர்கள் கூறுகையில், வழக்கமாக ரஜினிகாந்த் படங்களுக்கு, படங்கள் திரையிடப்படும் முதல்நாளே ஒருவாரத்துக்கான டிக்கெட்களும் விற்றுவிடும். இம்முறை முதல் இரண்டு நாட்களுக்கான முன்பதிவில், படம் வெளியாகும் முதல் நாளான ஜூன் 7ஆம்தேதிக்கு மட்டுமே டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பட விநியோகஸ்தர்களும் வெளியிடுபவர்களும் இப்படத்துக்கு வெள்ளிக்கிழமையே  சனி, ஞாயிறு  ஆகிய இருதினங்களுக்கும் டிக்கெட் விற்றுவிடும் என்று நம்பியிருந்த நிலையில்,  வார இறுதிக்கான முன்பதிவு  மந்தமாக உள்ளது. மேலும் பலபட விநியோகஸ்தர்கள் டிக்கெட் விறபனை மந்தமாக உள்ளது என்பதை உறுதி செய்கிறார்கள்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கும் ரஜினி காந்த்

இரண்டாவது அதிர்ச்சியாக, காலா திரைப்படம் சிங்கப்பூரில் புதன் கிழமை இரவு வெளியிடப்பட்டபோது, அதன் காட்சிகளை 45 நிமிடங்கள் முகநூலில்நேரலையாக ஒளிபரப்பியதாக தகவல்கள் கிடைக்கின்றன. வெளிநாடுகளில் பல தியேட்டர்களில் ஜூன் 6ஆம் தேதியே படம் வெளியாகியுள்ளது. முகநூலில் திரைப்படம் காணக் கிடைப்பது விநியோகஸ்தர்களையும்  வெளியீட்டாளார்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மூன்றாவது அதிர்ச்சியாக,  வெளியீட்டாளர்களில் ஒரு பகுதியினரிடமிருந்த வந்த தகவலின்படி, கடந்த காலங்களில் ரஜினியின் படங்களைவெளியிடுபவர்கள் தயாரிப்பாளர் அல்லது  விநியோகஸ்தர்கள் சொல்லும் நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொள்வர். ஆனால், இம்முறை பல தியேட்டர்அதிபர்கள் விநியோகஸ்தர்கள் சொன்னது போல ஒருவாரத்துக்கு டிக்கெட்டின் விலையை உயர்த்துவதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால் கடந்தஏப்ரல் மாதம் சினிமா துறையினர் நடத்திய  வேலை நிறுத்தத்தால், தமிழக அரசு கட்டண நிர்ணயம் செய்தது. அதில் பெரிய பட்ஜெட் படங்களுக்குஅதிக பட்சம் 150 ரூபாய் டிக்கெட் விலையாகவும் வரியும் சேர்த்து வசூலிக்க உத்தரவிட்டது. அதன்படி தியேட்டர் அதிபர்கள் முன்னதாக 165 ரூபாய்க்குவிற்கப்பட்ட டிக்கெட்டை, தற்போது 207 ரூபாய்க்குத்தான் விற்க இயலும்.

பல தியேட்டர்அதிபர்கள் விநியோகஸ்தர்கள் சொன்னது போல ஒருவாரத்துக்கு டிக்கெட்டின் விலையை உயர்த்துவதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

புதிய விலை மாற்றம் தற்போது அதிமுக்கிய விஷயமாக மாறியுள்ளது. விநியோகஸ்தர்கள் அனைத்து தியேட்டர்களும் ரூ. 207.26 வசூலிக்க வேண்டும்என விரும்புகிறார்கள். ஆனால், தியேட்டர் அதிபர்கள் இக்கட்டணம் மிக அதிகம் என நினைக்கிறார்கள். இக்கட்டணத்துக்கு  ரஜினியின் தீவிர ரசிகர்கள்தான் வருவார்களே ஒழிய, சினிமா பார்க்க விரும்பும் ரசிகர்கள் இரண்டு வாரங்கள் கழித்து டிக்கெட் விலை குறைந்ததும்  தியேட்டருக்குச் செல்லலாம்என நினைப்பார்கள். இது  முதல் நாள் ரிலிஸுல் சரிவை ஏற்படுத்தும் என வெளியீட்டார்ளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தொடர்ந்து வரும் எதிர்ப்பால், வெளியீட்டாளர்களிடம் ஏற்பட்ட அதிருப்தியில், சென்னையில் உள்ள கமலா தியேட்டர் மற்றும் சென்னை வடபழனியில்  உள்ள முக்கிய தியேட்டர்கள்  காலா திரைப்படத்தை வெளியிட மறுத்து, அதற்கு பதிலாக ஜூராஸிக் வேர்ல்டு திரைப்படத்தை திரையிட உள்ளதாகத்தெரிவித்துள்ளார்கள். இது காலா குரூப்புக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் முக்கிய பகுதியில் யாரும் எதிர்பார்க்காத ஒன்றுநடந்துள்ளது. தயாரிப்பாளர்களுடன் நடத்தப்பட்ட வியாபார பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத காரணத்தில் தான் படத்தை வெளியிடவில்லை என்றுகமலா தியேட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரஜினி ரசிகர்கள் சிலரிடம் பேசியதில், அவர்கள் சோர்வுற்ற மனநிலையில் உள்ளார்கள் என தெரிகிறது. இருந்தாலும் தங்கள் தலைவர் ரஜினியின் படம்வெளியாவதில் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர். ஆனால், படத்தின் பாடல்கள் சரியில்லை என்பதாலும்  இயக்குநர் பா. ரஞ்சித் தன் கருத்தியலைஇப்படத்தில் முன் வைத்ததாலும் ரசிகர்கள் சந்தோஷமாக இல்லை. ரஜினி ரசிகர்கள் பொழுதுபோக்கு அம்சம்கொண்ட ரஜினியின் வழக்கமான  படங்களை விரும்புவர். ரஜினி,  இயக்குநர் பா.ரஞ்சித்தின் வலைக்குள் மாட்டிக்கொண்டதாகவும் அடுத்த முறை அவர் வேறு இயக்குநரை நாடவேண்டும் எனவும் அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். கபாலி திரைப்படம் வசூலைத் தந்தாலும், ரஜினியின் தீவிர ரசிகர்கள் அப்படத்தைஒருமுறையே பார்த்தனர். ஆனால் அதற்கு முன்பு வெளியான     சிவாஜி உள்ளிட்ட படங்களை ரசிகர்கள் பலமுறை விரும்பிப் பார்த்தனர். ஒருபடத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் ரசிகர்களாலே அப்படம் பெரிய வெற்றியை பெறும். ஆனால் காலா திரும்பத் திரும்ப பார்க்கும் ஆடியன்ஸைகொண்டு வராது என்று அச்சமடைகிறார்கள்.

 

திரைப்படங்கள் நூறு நாட்கள், 25 வாரங்கள் ஓடிய காலம் ஓடிவிட்டது. இப்போது ஒரு திரைப்படம் கூட்டத்துடன் ஒரு மாதம்  ஓடினாலேசந்தோஷமடைகிறார்கள். கபாலி ரஜினியின் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையாவிட்டாலும் உலகம் முழுவதிலும் இருந்து 650 கோடியை வசூல்செய்து தந்தது. அதில் பாதி பணம் வெளிநாடுகளில் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காலா திரைப்படத்தின் தியேட்டர் உரிமை மற்றும் இசை உரிமை மற்றும் தெலுங்கு, ஹிந்தி டப்பிங் உரிமை என அனைத்தும் சேர்த்து 230 கோடிரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இதில்  தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், ஏன் ரஜினிக்கே கூட இருக்கும் பிரச்சனை என்னவென்றால் படம் இரண்டுவாரங்களில் ஹிட் ஆகவில்லை என்றால் மேற்சொன்ன உரிமைகளுக்காக வாங்கிய முன்பணத்தை திரும்பத் தர வேண்டும் என்பதே. கார்ப்பரேட்நிறுவனங்களுக்காக காட்டப்படும் காட்சிகள் தியேட்டர்களில் கொஞ்சம் டிமாண்டை அதிகரிக்கும் என்பதுதான் தயாரிப்பாளர்களின் நம்பிக்கை.

தயாரிப்பாளர்களுக்கு நான்காவது அதிர்ச்சி…   ரசிகர்கள் அனைவரும் மீண்டும் அதிருப்தி அடைவார்களா? மீண்டும் மீண்டும் தியேட்டருக்கு வரும்ரசிகர்கள் கிடைக்கமாட்டார்களா? காலா திரைப்படம் தன் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு படிக்கல்லாக அமையும் என ரஜினி எதிர்பார்த்தார். அவருடையஅரசியல் அவதாரத்துக்கு பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால் மகா வெற்றியைத் தவிர அவர் வேறெதையும் விரும்ப மாட்டார். ஜூன் 7ஆம்  தேதிஇதற்கான தீர்ப்பு  தெரிய வரும். ஆனால் ஜூன் 10ஆம் தேதிக்கு பிறகு ரஜினி ரசிகர்கள் அல்ல, பொது ரசிகர்கள் தியேட்டரை எட்டி பார்ப்பார்களா? தமிழ்நாடு முழுவதும் ஜூன் 7ஆம் தேதி, 700 தியேட்டர்களில் காலா ரிலிஸ் ஆக உள்ளது. என்ன நடக்கும்?

Share the Article

Read in : English

Exit mobile version