Arockiaraj
கல்வி

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளை எந்த அரசியல்வாதிகள் நடத்துகிறார்கள்?

தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளை அரசியல்வாதிகள் நடத்தி வருகிறார்கள். அரசியல்வாதிகள் நீட் தேர்வை எதிர்ப்பதற்கு சமூகநீதி மட்டும்தான் காரணமாக என்ற கேள்வியை எழுப்புகிறார் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி.

Read More

கல்வி

நீட் தேர்வை கட்டாயமாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு: கட்டாய நன்கொடையைத் தடுக்க முடியாத அவலம்!

நீட் தேர்வை கட்டாயமாக்கிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இரண்டு முக்கியக் காரணங்களை முன்வைத்தது. மருத்துவப்படிப்பு பணம்காய்ச்சி மரமாகி போனதை எண்ணி வருத்தம் தெரிவித்த நீதிமன்றம், படிப்பு என்பது சேவையாக இருக்கவேண்டும் என்றும் நன்கொடை, கேபிடேஷன் ஃபீ என்று மாணவர்களிடமிருந்து வாங்கப்படும் பணம் ஊழலின்...

Read More

குற்றங்கள்

மீண்டும் நகரத்துக்கு வெளியே மாற்றப்படும் மதுரை மத்திய சிறைச்சாலை!

பல நூற்றாண்டுகளாக மக்கள் தொடர்ந்து வாழும் நகரங்களில் மதுரையும் ஒன்று. 1840களில் மதுரை கோட்டையை தாண்டி அமைந்த எல்லாமே மதுரை மக்களுக்கு புறநகர்தான். 1859ஆம் ஆண்டு மதுரை ரயில் நிலையம் அமைந்தபோது, நகரத்துக்கு வெகுதொலைவில் அமைத்ததற்காக மக்கள் போராட்டம் நடத்திய கதை எல்லாம் இங்கு உண்டு.

Read More

சுற்றுச்சூழல்

தமிழ்நாட்டில் வலசை வரும் பறவைகளில் மாற்றம்: சதுப்பு நிலங்களின் சுற்றுச்சூழல் மாறிவருவதை அடையாளம் காட்டுகிறதா?

வேனிற்காலம் ஏறக்குறைய தொடங்கிவிட்டது. வலசை போகும் பறவைகள் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல தொடங்கிவிட்டன. பறவை ஆர்வலர்களும் சூழல் வல்லுனர்களும் பறவைகள் கணக்கெடுப்பை தமிழ் நாட்டின் நீர்நிலைகளில் பல இடங்களில் முடித்து விட்டார்கள். இந்த கணக்கெடுப்புகள் நமக்கு சொல்வதென்ன?

Read More

அரிவாள் மூக்கன்களின் எண்ணிக்கை பெருகிவருவது நமது நீர்நிலைகள் மாசுபடுவதின் அறிகுறி
வணிகம்

105 ஆண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில்வே பாலத்துக்கு இந்த ஆண்டு குட்பை!

ராமேஸ்வரம் என்றாலே நினைவு வருவது பாம்பன் ரயில் பாலம். இரண்டு கிலோமீட்டர்கள் நீளம் உள்ள இந்த பாலத்தின் மீது செல்லும் ரயில் ஒரு அழகியல் என்றே சொல்லலாம். உலகத்தின் மிக ஆபத்தான ரயில் பாதைகளில் ஒன்றாக அறியப்படும் இந்தப் பாலத்தை ரயிலில் சென்று அனுபவிப்பது ஒரு சுகம் என்றால் அருகிலுள்ள சாலை பாலத்தின் மீது நின்று அதை பார்த்து அனுபவிப்பது மற்றொரு சுகம். நாம் நின்று பார்க்கும் போது பாலம் உயர்த்தப்பட்டு படகுகள் கடந்தால் நமக்கு ஒரு குழந்தையின் குதூகலம் கிடைப்பதை உணரலாம்.

Read More

சுகாதாரம்

சாவின் விளிம்பில் கைவிடப்பட்டவர்களுக்கு மதுரை டாக்டர்களின் மனித நேய சேவை!

தங்களை மருத்துவர்களாக்கிய சமூகத்துக்கு நாம் ஏதும் செய்யவில்லையோ என்ற எண்ணம் டாக்டர் பாலகுருசாமிக்கு வந்தபோது தான் தனியே இல்லை என்பது அவருக்கு தெரிய வருகிறது. 2008ஆம் ஆண்டு மருத்துவ படிப்பு முடித்த பாலகுருசாமி மதுரையின் ஒரு பெரிய மருத்துவமனையில் 2009 ஆண்டு பணியில் சேர்கிறார். அங்கிருந்த டாக்டர்கள் அமுதநிலவன், வெங்கடேஷ், ஸ்ரீவித்யா மஞ்சுநாத், பிரபுராம் நிரஞ்சன், சபரிமணிகண்டன் மற்றும் சதீஷ் நண்பர்களாகிறார்கள். சாமானியக் குடும்பங்களிருந்து படித்து மருத்துவர்களான தங்களுடைய மருத்துவ அறிவு ஏழை மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்று தீர்மானித்த நண்பர்கள் மதுரை மகாத்மா காந்தி நகரில் ஒரு சிறிய கிளினிக் ஆரம்பிக்கிறார்கள். பெரும்பாலும் இலவச வைத்தியம் அல்லது நோயாளிகளால் கொடுக்க முடிந்ததை வாங்கிக்கொள்வது. விடுமுறை நாட்களில் மதுரையை சுற்றிய கிராமங்களில் முகாம்கள் நடத்துவது.

Read More

வணிகம்

3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில்கள்: பட்ஜெட் அறிவிப்பு நடைமுறையில் சாத்தியமா?

மைய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 400 வந்தே பாரத் இரயில்கள் வரும் மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியா முழுதும் இயக்கப்படும் என்று தன்னுடைய பட்ஜெட் உரையில் தெரிவித்தார். இந்தியா முழுதுமே இரண்டே இரண்டு வந்தே பாரத் இரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை போன்ற 400 இரயில்கள் உருவாக்குவது சாத்தியம்தானா?

Read More

Vande Bharat
சுற்றுச்சூழல்வணிகம்

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் துவங்கினால் விரிவாக்கத்துக்கு இடமிருக்குமா?

ஸ்டெர்லைட் ஆலை திரும்ப துவங்கிவிடுமோ என்ற பேச்சும் அதை குறித்த அச்சமும் திரும்ப தூத்துக்குடியில் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. தாமிர உருக்காலை இரண்டாம் கட்ட விரிவாக்கம் என்ற தகவல் பரவிய பின்பு வேதாந்தா குழுமத்தால் நடத்தப்படும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் இறந்து போனார்கள். அதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.

Read More

பண்பாடு

ரூ.80 ஆயிரம் செலவில் மதுரை மாணவரின் 200 நாள் பயணம்!

இருநூறு நாட்கள் இந்தியாவின் வடக்கு பகுதியை சுற்றிய பின் சொந்த மாநிலம் திரும்பியிருக்கிறார் 23 வயதான மதுரையை சேர்ந்த ஜி.ஜி. சிவப்ரகாஷ். நாடு 73வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்த நாளில் சிவப்ரகாஷின் அனுபவம் நாம் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

Read More

Wagah Border
பண்பாடு

குடியரசு தின அணிவகுப்பு: 21 ஆண்டுகளில் 9 முறை மட்டுமே தமிழக அலங்கார ஊர்திகளுக்கு இடம்!

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ் நாட்டின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது மிகப்பெரிய பேசுபொருளாக உருவெடுத்துள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்த வருடத்துக்கான தலைப்பாக கொடுத்த ஒன்றான இந்திய விடுதலை போராட்டம் @75 தழுவியே ஊர்தியில் தமிழக விடுதலை போராட்ட வீரர்களான சுப்பிரமணிய பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளை, வீரமங்கை வேலு நாச்சியார் மற்றும் மருது சகோதரர்கள் உருவங்கள் அமைக்கப்பட்டன. எனினும் பாதுகாப்பு அமைச்சகம் அலங்கார ஊர்தியை நிராகரித்திருக்கும் நிலையில் தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் இந்த ஊர்தி கலந்துகொள்ளும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

Read More

Tamil Nadu tableau-2017-karakkatam
கல்வி
45வது சென்னைப் புத்தகக்காட்சி தொடங்கியது!: எந்தப் புத்தகங்களுக்கு வாசகர்களிடம் வரவேற்பு?

45வது சென்னைப் புத்தகக்காட்சி தொடங்கியது!: எந்தப் புத்தகங்களுக்கு வாசகர்களிடம் வரவேற்பு?

கல்வி
நீட் தேர்வை கட்டாயமாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு: கட்டாய நன்கொடையைத் தடுக்க முடியாத அவலம்!

நீட் தேர்வை கட்டாயமாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு: கட்டாய நன்கொடையைத் தடுக்க முடியாத அவலம்!