Read in : English
1950-களில் கல்கி இதழில் மூன்றரை ஆண்டுகள் தொடராக வெளிவந்த எழுத்தாளர் கல்கியின் வரலாற்றுப் புனைவு பொன்னியின் செல்வன் இன்றும் தமிழகத்தில் எண்ணற்ற வாசகர்களைக் கவர்ந்து வருகிறது.
9ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் 13ஆம் நூற்றாண்டு வரையிலான சோழர் ஆட்சியின் வரலாற்றுக் குறிப்புகளை பெரிதும் அடிப்படையாகக் கொண்ட இந்நாவல், சுந்தரசோழனின் இறுதி நாட்களில், சுமார் கி.பி 960-க்குப் பிந்தைய குறுகிய காலத்தை உள்ளடக்கிய பரபரப்பான நிகழ்வுகளை மையமாகக் கொண்டுள்ளது.
இந்த நாவலின் ஐந்து பாகங்களில் இரண்டு பாகங்கள் பொன்னியின் செல்வன்-I என்ற பெயரில் படமாக்கப்பட்டு கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பையும், வருவாயையும் ஈட்டியது.
பொன்னியின் செல்வன் நாவலின் மீதமுள்ள மூன்று பாகங்கள் படமாக்கப்பட்டிருக்கும் பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் விரைவில் வெளிவரத் தயாராக உள்ளது.
நாவலின் மிகவும் சுவாரசியமான பகுதி சுந்தரசோழனின் மூத்த மகனான ஆதித்த கரிகாலன் புகழ்பெற்ற கடம்பூர் அரண்மனையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதுதான்
நாவலின் மிகவும் சுவாரசியமான பகுதி சுந்தரசோழனின் மூத்த மகனான ஆதித்த கரிகாலன் புகழ்பெற்ற கடம்பூர் அரண்மனையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதுதான்.
நாவலை அடியொற்றி இரண்டு முக்கியப் பகுதிகள் பொன்னியின் செல்வனின் 2 திரைப்படத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக்கொள்ளும்:
1. ஆதித்த கரிகாலனின் கொலைக்கு வழிவகுத்த சூழ்நிலைகள்.
2. சுந்தர சோழ மன்னனின் வாரிசுரிமை பற்றிய திருப்பங்கள்.
முதல் கதைக்களத்தைப் பொருத்தவரை, நாவல் முடிந்த பிறகும் கல்கி கொலை குறித்த மர்மத்தை அவிழ்க்காமலே விட்டுவிட்டார். மர்மக் கதைக்கே உரிய சம்பிரதாயத்தை மீறி, உண்மையான குற்றவாளி யார் என்பதை மக்களே ஊகித்துக் கொள்ளட்டும் என்பது போல சில கதாபாத்திரங்களையும், சில துப்புக்களை மட்டுமே விட்டுப் போயிருக்கிறார் அவர்.
மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் பாகம் 1 வியப்பு!
நாவலின் ஐந்தாவதும் இறுதியுமான பகுதியில் உள்ள 39-வது அத்தியாயம், சிற்றரசன் சம்புவராயருக்குச் சொந்தமான கடம்பூர் அரண்மனையில் ஓர் அறையில் நடந்த கொலைக்காட்சியை நேரடியாக அல்லாமல் இலைமறைவாக வர்ணிக்கிறது. இக்காட்சியில் முக்கியக் கதாபாத்திரங்களான வந்தியத்தேவன், நந்தினி, ஆதித்த கரிகாலன், சம்புவராயரின் மகள் மணிமேகலை, காளமுகச் சைவர் வேடத்தில் பெரிய பழுவேட்டரையர் ஆகியோரும், புலி வேடத்தில் வரும் பாண்டிய நாட்டு ஆபத்துதவியான ரவிதாசனும் தோன்றுகிறார்கள்.
ஆதித்த கரிகாலன் கொலைக்காட்சிக்குப் பதிலாக கொலைக்குப் பிந்திய திகிலான இரவு நேரச்சூழலையும் கதாபாத்திரங்கள் உணர்ச்சிகரமாக எதிர்வினையாற்றும் சூழலையும் காட்டுகிறார் கல்கி. தனது முக்கியக் கதாபாத்திரங்களை நிழல் உருவங்களாக உலாவவிட்டு, துண்டுத்துண்டாக காட்சிகளைக் காட்டிவிட்டு சாமர்த்தியமாக சஸ்பென்ஸை மேலும் சுவாரஸ்யமாக வைத்திருந்தார் கல்கி.
இவர்தான் உண்மையான கொலையாளி என்று அவர் சுட்டிக்காட்டவில்லை. வந்தியத்தேவன் கொலைக்குற்றம்சாட்டப்படுகிறது; மனஉளைச்சலில்தான், தான்இளவரசரைக் கொலை செய்ததாக மணிமேகலை உரக்கக் கத்தி அழுகிறாள்.
ஆதித்த கரிகாலனே நந்தினியுடனான அந்தரங்க உரையாடலில் அவள் தன்னைக்கொல்ல சதி செய்வதாகவும், நாவலின் கதாநாயகனும் தனது சொந்த சகோதரனுமான அருள்மொழிவர்மனையும், சொந்த சகோதரி குந்தவையையும்தான் சந்தேகிப்பதாகவும் அவர் சொல்கிறார்.
இப்போது பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் ரசிகர்களுக்கு விருந்து வைக்க விரைந்து வருகிறது. ஆதித்த கரிகாலனின் உண்மையான கொலையாளிகளைக் காட்டிக் கொடுக்க மணிரத்னமும் துணியமாட்டார் என்று நம்புவோம்
மன்னர் சுந்தரசோழனின் பெரியப்பா மகனான மதுராந்தகனை (பின்னர் உத்தமசோழன்) இந்தக் கொலை விவகாரத்தில் முக்கிய சதிகாரராக சுட்டிக்காட்டிய நீலகண்ட சாஸ்திரி போன்ற வரலாற்றாசிரியர்களும், மதுராந்தகனின் பங்கை மறுக்கும் டி.வி.சதாசிவபண்டாரத்தார் போன்ற வரலாற்றாசிரியர்கள்எ ழுதியதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள விரும்பாத, கல்கி இந்த விஷயத்தில் தனது நிலைப்பாட்டை உறுதியாகச் சொல்லாமல் வெறும்ஊகங்களை மட்டுமே விட்டுவைத்திருக்கிறார்.
இவ்வளவுக்கும் உடையார்குடிக் கல்வெட்டுகளும் திருவாலங்காடு செப்பேடுகளும் பாண்டிய ஆபத்துதவிகளான ரவிதாசன், பரமேஸ்வரன், சோமன், கிரமவித்தன் ஆகியோருக்குக் கொலையில் பங்குண்டு என்பதைக் காட்டுகின்றன.
ஆனால் கல்கியைப் போல் அல்லாமல், பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் படுகொலைக்குப் பழிதீர்க்க ஆதித்தகரிகாலனைக் கொல்ல ரவிதாசன் தலைமையிலான பிராமணர் குழு சதித்திட்டம் தீட்டியதாக எழுத்தாளர் பாலகுமாரன் தெளிவாக விவரித்தார் தனது கடிகை நாவலில், காந்தளூர் தற்காப்புக்கலை பயிற்சி மையத்தில் கொலைச்சபதமும் பயிற்சியும் எடுத்துக்கொண்ட பிராமண வீரர்கள் சோழ நாட்டிற்குள் ஊடுருவி கொலைத்திட்டத்தை நிறைவேற்றியதை வர்ணிக்கிறார்.
மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் ஒரு கதைப்படம்
கி.பி.985-இல்அரியணை ஏறிய அருள்மொழிவர்மன் (முதலாம் ராஜராஜ சோழன்) ஆட்சிக்கு வந்ததும் முதன்முதலாகக் கண்டலூர் மீது படையெடுத்தார் என்பது வரலாறு. .இவரது ஆட்சிக்காலத்தில் அவர் மேற்கொண்ட அந்தப்படையெடுப்பு குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன..கொலையாளிகள் (ரவிதாஸ், பரமேஸ்வரன், சோமன், கிரமவித்தன்) சோழ இளவரசனைக் கொல்வதற்கு முன்பு கண்டலூர் மையத்தில் நீண்ட காலம் போர்ப்பயிற்சி பெற்றார்கள் என்ற கருத்தை ஒட்டி பாலகுமாரன் கடிகை நாவலை எழுதினார். கல்வெட்டு ஒன்றில் முதலாம் ராஜராஜசோழனை விவரிக்கும் சொற்றொடர் ஒன்று இருக்கிறது: ‘காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி.” தமிழ்க் கவிஞர் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை உள்பட பல்வேறு அறிஞர்கள் இந்தச்சொற்றொடரை விளக்கியுள்ளனர்.
கல்கியின் நாவலுக்குத் திரும்புவோம். மதுராந்தகனின் கதாபாத்திரத்தில் தனது கற்பனையை சுதந்திரமாக ஓடவிட்டுவிட்டு, தனது காலத்தின் சினிமா மரபைக் கல்கி பின்பற்றியுள்ளார்.. பிறந்த குழந்தைகளை மாற்றிக்கொள்வது என்னும் மரபுதான்அது.
வாசகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் க்ளைமாக்ஸை நோக்கி நிகழ்வுகளை மெதுவாகவும் சீராகவும் கட்டமைத்துவிட்டு, திடீரென்று வாசகர்களை வியக்க வைக்கும் வண்ணம் ஆன்டி-க்ளைமாக்ஸுடன் முழுக்கதையையும் முடித்துக்கொண்டார் கல்கி.
கதையின் சுவாரஸ்யத்திற்காக நந்தினி, ஆழ்வார்க்கடியான், வேறு மாதிரியான இன்னொரு மதுராந்தகன் போன்ற புனைவுப் பாத்திரங்களைப் படைத்ததும், சரித்திரத்தில் வெறும் அடிக்குறிப்பாக மட்டுமே இடம்பெற்றிருக்கும் வந்தியத்தேவனை கதாநாயகன் அளவுக்கு தூக்கிப்பிடித்ததும், நாவல் முடிவில் போய்வருகிறோம் என்ற ரீதியில் அவனுக்கு வாழ்த்துச்சொன்னதும், கதையின் அழுத்தத்திற்காகவும், பரபரப்பிற்காகவும் கல்கி மேற்கொண்டஉத்திகள்.
அதனால்தான் எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் இந்த நாவலை திரைப்படமாக எடுக்க ஆசைப்பட்டதில் ஆச்சரியமில்லை. இப்போது பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் ரசிகர்களுக்கு விருந்து வைக்க விரைந்து வருகிறது. ஆதித்த கரிகாலனின் உண்மையான கொலையாளிகளைக் காட்டிக் கொடுக்க மணிரத்னமும் துணியமாட்டார் என்று நம்புவோம். கல்கியே துணியவில்லையே!
Read in : English