Site icon இன்மதி

மிருதங்கம் வாசிப்பதில் கொடிகட்டிப் பறந்த புதுக்கோட்டை பாணி!

Read in : English

மிருதங்கம் வாசிப்பதில் கொடிகட்டிப் பறந்த பழனி சுப்பிரமணிய பிள்ளை புதுக்கோட்டை பாணி மரபின் பிரதிநிதி. மிருதங்கம் வாசிப்பு, புதுக்கோட்டை பாணி இசை மரபின் வரலாறு போன்ற பல்வேறு அம்சங்கள் விரிவாக ஆராய்ந்து துருவ நட்சத்திரம் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார் எழுத்தாளர் லலிதா ராம்.

இங்கே முன்பு எழுதப்பட்ட கட்டுரை பழனி சுப்ரமணிய பிள்ளையை அறிமுகப்படுத்தியது; பாலக்காடு மணி ஐயருடன் அடிக்கடி ஒன்றாய் இணைந்திருந்த செம்பை வைத்தியநாத பாகவதர் எப்படி சுப்புடுவின் (சுப்ரமணிய பிள்ளையின்) முன்னேற்றப் பாதைக்கு வழிவகுத்தார் என்பதையும் அந்தக் கட்டுரை விவரித்திருந்தது.

இசைவிற்பன்னர் பழனி சுப்ரமணிய பிள்ளை மிருதங்கம் வாசிப்பதில் ஒரு மேதை. பம்பாயில் நடந்த ஒரு கச்சேரியில் செம்பை பாகவதர் அவரின் மேதாவிலாசம் முழுமையாக வெளிப்படுவதற்கு வாய்ப்பு நல்கினார் என்று துருவ நட்சத்திரம் புத்தகம் சொல்கிறது.

மிருதங்கம் வாசிப்பதில் கொடிகட்டிப் பறந்த பழனி சுப்பிரமணிய பிள்ளை புதுக்கோட்டை பாணி மரபின் பிரதிநிதி. மிருதங்கம் வாசிப்பு, புதுக்கோட்டை பாணி இசை மரபின் வரலாறு போன்ற பல்வேறு அம்சங்கள் விரிவாக ஆராய்ந்து துருவ நட்சத்திரம் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார் எழுத்தாளர் லலிதா ராம்

தமிழ்நாட்டுக் கலாச்சார வாழ்க்கையில் தோல்வாத்தியங்கள் பின்னிப் பிணைந்திருந்ததைப் பற்றி துருவ நட்சத்திரம் விளக்குகிறது. சங்க காலத்திலிருந்து, வெவ்வேறு வகையான தாளக் கருவிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. மரத்தாலும் தோலாலும் ஆன அந்த இசைக்கருவிகள் மிகவும் மேம்பட்ட நிலையிலிருந்தன. அதனால் மராட்டியர்கள் மிருதங்கத்தைக் கொண்டுவந்து அறிமுகப்படுத்தியபோது, தமிழர்கள் ஆர்வமுடன் அதை வரவேற்று தங்களுக்குச் சொந்தமாக சுவீகரித்துக் கொண்டனர்.

மிருதங்கம் என்கிற வாத்தியத்தின் தனித்துவம் என்னவென்றால் தவிலைப் போலன்றி சுருதியைக் கொண்டுவரும் அதன் திறன்தான். தவில் வாத்தியம் ஓசைநயம் கொண்டதில்லை; காதுக்கு இனிமையானதும் இல்லை. ஆனால் கலைஞர்கள் தங்கள் வித்தை நுட்பத்தால் இனிய இசையை உருவாக்குகிறார்கள்.

மேலும் படிக்க: புல்லாங்குழல் தந்த பிரமிப்பு: பொன்னுசாமியின் அனுபவம்!

தவில் வாசிப்பில் மிகவும் நுண்மையான, ஆழமான அம்சங்களைப் புகுத்தி அவர்கள் ஈடுகட்டுகிறார்கள். ஆனால் மிருதங்கத்தின் இயல்பான ஓசையே தாளலயம் மிக்கது; மேலும் சுருதியோடு இணைந்து சுகமான இசையைத் தருகிறது என்று லலிதாராம் விளக்குகிறார்.

பழனி சுப்பிரமணிய பிள்ளை யின் வித்தை நுண்மைகளுக்குக் காரணம் பழைய தவில் வித்வான்கள் கடைப்பிடித்த புதுக்கோட்டை பாணிதான் என்று லலிதாராம் சொல்கிறார். தஞ்சாவூரில் கலைகளுக்குப் புரவலர்களாக மராட்டிய அரசர்கள் விளங்கினார்கள். அவர்கள் காலத்தில்தான் மிருதங்க வாசிப்புக் கலையில் தஞ்சாவூர் பாணி மரபு உருவானது.

அதே ஆர்வத்துடனும் அளவில்லா பற்றுதலோடும் மற்ற அரசர்களும் கலைகளுக்கு ஆதரவளித்தார்கள்,அப்போது மிருதங்க வாசிப்புக் கலையில் சில பாணிகள் உருவாகின. அவற்றில் புதுக்கோட்டைப் பாணியும் ஒன்று.

தஞ்சாவூர்ப் பாணியிலான மிருதங்க வாசிப்பில் வித்தைத் திறனைவிட ஒழுங்கும், செளகரியமும், சுருதியும் அதிகம் ஆக்ரமித்திருக்கும். இந்தப் பாணியில் முன்பு விற்பன்னராக இருந்தவர் அனேகமாக நாராயணசாமி அப்பாப்பிள்ளையாக இருக்கலாம்.

புதுக்கோட்டை அரண்மனையில், குறிப்பாக கச்சேரிகளின் போது லாந்தர் சேவகம் செய்துகொண்டிருந்த மாமுண்டியா பிள்ளை என்பவரைப் பற்றி சுவாரஸ்யமாகப் பேசுகிறார் லலிதாராம். மாமுண்டி பிள்ளைக்கும் இசையின் மீதான காதல் ஏற்பட்டது. எழுச்சிமிக்க ஓர் கணத்தில், தவில் வித்வான் மாரியப்பனிடம் இசைகற்க முடிவெடுத்தார் அவர். மாரியப்பனும் அவரைச் சேர்த்து கொண்டு அவருக்கு இசை கற்பித்து அவரது திறமைகளை வளர்த்தெடுக்க உதவினார்.

துருவ நட்சத்திரம் புத்தகத்தின் அட்டைப்படம்

மரத்தாலும், தோலாலும் உருவான பல்வேறு தாள இசைக்கருவிகளை மாமுண்டியா பிள்ளை பரீட்சித்து பார்த்து இறுதியில் பல்லித் தோல்கருவியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். அதைக் கஞ்சிரா என்றழைத்து, அதை அவர் கச்சேரியின் பிற வாத்தியங்களோடு இணைத்தார். வெறும் தாள வாத்தியமாக இல்லாமல் இனிய இசைக்கருவியாகக் கஞ்சிரா மாறியது.

தவில் வித்வானிடம் பாடம் கற்றுக்கொண்ட மாமுண்டியா பிளை கஞ்சிராவைப் படைப்பாற்றலுடனும், வித்தை நுட்பங்களுடனும் வாசித்து அதுவரை முதிர்ச்சிமிக்க மிருதங்க வாசிப்புக்குப் பழக்கப்பட்ட இசைப் பிரியர்களை கஞ்சிராவையும் ரசிக்க வைத்தார். நாராயணசாமி அப்பாப்பிள்ளையும் மாமுண்டியா பிள்ளையை அங்கீகரித்து கஞ்சிராவை ஏற்றுக்கொண்டார்.

மாமுண்டியா பிள்ளையின் கீர்த்தி பெருக ஆரம்பித்தது. அப்போது அவரது தவில் குரு தாளவாத்திய ஆர்வலர்கள் பலரை அவரிடம் அனுப்பிவைத்து வித்தையைக் கற்கவைத்து புதுக்கோட்டைப் பாணிக்கு வித்திட்டார். வித்தை நுட்பமும், சிக்கலான தாளலய நேர்த்தி வடிவங்களும் புதுக்கோட்டைப் பாணியின் சிறப்பம்சங்களாகப் பரிமாணம் பெற்றன; பரிமளித்தன. கஞ்சிராவில் வெளிப்பட்ட இந்த வித்தை ஆழத்தையும், வீச்சையும் மிருதங்க வித்வான்களும் தங்கள் கலையில் ஈர்த்துக்கொண்டு வெளிப்படுத்தினர்.

புதுக்கோட்டைப் பாணிமரபில் மிளிர்ந்த பழனி சுப்புடுவைப் போன்ற மற்ற இசைவாணர்களைப் பற்றியும்அவருக்கு முந்தியவர்களைப் பற்றியும்துருவ நட்சத்திரம் விளக்கமாகப் பேசுகிறது

புதுக்கோட்டைப் பாணிமரபில் மிளிர்ந்த பழனி சுப்புடுவைப் போன்ற மற்ற இசைவாணர்களைப் பற்றியும், அவருக்கு முந்தியவர்களைப் பற்றியும், துருவ நட்சத்திரம் விளக்கமாகப் பேசுகிறது. அந்த இசை விற்பன்னர்களில் தக்ஷிணாமூர்த்தியும் ஒருவர். மக்களின் இதயங்களை இசையால் மட்டும் வெற்றவர் அல்ல அவர்; தனது ஆன்மீகத்தாலும், பிறர்க்கு உதவும் குணத்தாலும் மனித மனங்களை வசீகரித்தவர் அவர்.

தக்ஷிணாமூர்த்தியைப் பற்றிய அத்தியாயம் அவருக்கு பாலக்காடு மணி ஐயர் செலுத்திய புகழுரையை நினைவுகூர்கிறது. முசிறி சுப்ரமணிய ஐயரின் கச்சேரி ஒன்றில் வாசித்துக் கொண்டிருந்த மணி ஐயர் அவசரமாக சென்னைக்கு ரயிலில் புறப்பட வேண்டியிருந்தபடியால், அவர் தக்ஷிணாமூர்த்தியை தன்னிடமிருந்த மிருதங்கத்தை வாங்கி வாசிக்கச் சொன்னார்.

முசிறி சுப்ரமணி ஐயர் திருவடி சரணத்தைப் பாடிய போது, பாலக்காடு மணி ஐயரால் நகர முடியவில்லை. தக்ஷிணாமூர்த்தி ‘கணக்கு, கோர்வை, சொல்லு’ ஆகியவற்றை வாசிக்கவில்லை. மிருதங்கத்தில் அவர் குமுகி, மீட்டு, சாப்பு ஆகியவற்றை மட்டுமே வாசித்தார். பல்லவிக்குப் பின்பு, அவர் முத்தாய்ப்பை வாசித்தார். அவ்வளவுதான். அதுபோதும், பாலக்காடு மணி ஐயரை மெய்மறக்கச் செய்ய. “நான் அங்கே ஐந்து நிமிடங்கள் தாமதிக்க வேண்டிதாயிற்று.

அந்த மிருதங்க இசையில் தெய்வீகம் கொப்பளித்தது. ஒரு சிலருக்குத்தான் அந்தத் தெய்வீகம் சாத்தியம். எல்லோருக்கும் அது சித்திப்பதில்லை,” என்று மணி ஐயர் சொன்னதை லலிதாராம் மேற்கோள் காட்டுகிறார்.

Share the Article

Read in : English

Exit mobile version