Read in : English
ஆர்சனிக் மற்றும் கடின உலோகத் துகள்களால் ஏற்படும் நிலத்தடி நீர் மாசுபாடு குறித்து அண்மையில் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. நீர்வளத் துறை அமைச்சகம் அதற்கு அளித்த பதிலானது தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. ஏனெனில், அந்தப் பதில் குறித்தான செய்தியில், 29 மாநிலங்களின் 491 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் ஆபத்து விளைவிக்கும் நஞ்சு வேதிப்பொருள்கள் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. அதில் இரும்பின் அளவு அதிகரித்து காண்பிக்கப்பட்டிருந்தது. தற்போதைய நிலையின்படி, 2024ஆம் ஆண்டுக்குள், ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் வசதி என்பது இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் சூழலியல் மையம் வெளியிட்டிருக்கும் தரவுகள் தொழிற்சாலைப் பகுதிகளில் தீவிரமான மாசுபாடு ஏற்பட்டிருக்கிறது எனும் தகவலைத் தெரிவிக்கின்றன. நிலத்தடி நீர் மாசுபாடு கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் இடம்பெறுகிறது.
நீர்வளத் துறை அமைச்சர் பிஷேஷ்வர் துடு அளித்த பதிலில், உத்தரபிரதேசத்தின் நிலத்தடி நீரில் 58 மாவட்டங்களில் மிக அதிகமான இரும்பும், 36 மாவட்டங்களில் அதிகமான ஆர்சனிக் அளவுகளும், இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில், தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அதிக ஆர்சனிக்கும், 16 மாவட்டங்களில் இரும்பும் கலந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது (ஆர்சனிக்குக்கு 0.01 மிகி/லி மற்றும் இரும்பு 1 மிகி/லிட்டர்).
காரீயம், யுரேனியம், காட்மியம், குரோமியம்
தமிழ்நாடு உட்படப் பல மாநிலங்களில் இத்தகைய மாசுபாடுகளைக் குறித்தும் அந்த நாடாளுமன்றக் கேள்வி முக்கிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பத்து மாவட்டங்களில் யுரேனியமும், ஏழு மாவட்டங்களில் குரோமியமும், ஆறு மாவட்டங்களில் காரீயமும், ஒரு மாவட்டத்தில் காட்மீயமும் மாசுபாடுகளாக நிறைந்திருப்பது பதிவாகியுள்ளது.
அறிவியல் மற்றும் சூழலியல் மையம் வெளியிட்டிருக்கும் தரவுகள் தொழிற்சாலைப் பகுதிகளில் தீவிரமான மாசுபாடு ஏற்பட்டிருக்கிறது எனும் தகவலைத் தெரிவிக்கின்றன. நிலத்தடி நீர் மாசுபாடு கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் இடம்பெறுகிறது.
அறிவியல் மற்றும் சூழலியல் மையம் வெளியிட்டிருக்கும் 2018ஆம் ஆண்டுக்கான தரவின்படி, வேலூர்- வட ஆர்க்காடு, மணலி மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகள் தீவிரமான மாசுபாடு ஏற்பட்டிருக்கிறது. கடலூரிலும், கோயம்புத்தூரிலும் கடுமையான மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, சூழலியல் மாசுபாடு அளவுகளுடன் ஒப்பிடுகையில் (CEPI), இப்பகுதிகளின் நீர் மதிப்பீடுகள் 2009 அளவுக்குக் குறைந்துள்ளது. நிலத்தடி நீர், மேற்பரப்பு நீர், நிலத்துக்கான வேலூர் – வட ஆற்காடு மாசுபாட்டுத் தரவின்படி தமிழ்நாட்டில் அதிக மாசுபாடு அடைந்த பகுதிகளாக அவை உள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொதுக் கணக்குக் குழு ஜூலை 25 அன்று அளித்த அறிக்கை, வேலூரிலும் ராணிப்பேட்டையிலும் 2018-19 ஆம் ஆண்டுகளில் அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு, 42 நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், அனுமதிச்சான்று இல்லாமல் 32 நிறுவனங்கள் நிலத்தடி நீரை எடுத்துவருகின்றன; ஏழு நிறுவனங்கள் உரிமம் காலாவதியானபின்பும் நிலத்தடி நீரை உறிஞ்சிவருகிறார்கள். நன்னீர் கிடைக்கும் இடங்கள் அதிகமான அளவில் தொடர்ச்சியாகத் தோண்டப்படுவதால், மற்ற வளங்களும் மாசடைந்துள்ளன.
மேலும் படிக்க :
சென்னை மழைநீர்ச் சேகரிப்பிற்குத் தயாராக இருக்கிறதா?
மோடியின் கங்கை குளியல்: சென்னையில் கூவம், அடையாறு நதிகள் எப்போது குளிப்பதற்கு உகந்ததாக மாறும்?
ஜி. கனகராஜ் மற்றும் எல்.இளங்கோ ஆகியோர், நிலத்தடி நீரின் மீதான தாக்கத்தை, ஆம்பூர் பகுதியிலும் கண்டறிந்தனர். 2016 இல் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் சூழலியல் ஆய்வு இதழில் அவர்கள் சொல்வது என்னவெனில், “தோல் தொழிற்சாலைகளைச் சுற்றி இருக்கும் நிலத்தடி நீர் குடிப்பதற்கோ குடிநீர் வசதி ஏற்படுத்தவோ ஏதுவானதாக இல்லை. தோல் தொழிற்சாலைக் கழிவுகளைத் திறந்தவெளியில் கொட்டுவதால் அவை நிலத்தடி நீருடன் கலந்து நீரை மாசுபடுத்துகின்றன.

(Photo credit : Wikipedia)
தோல் தொழிற்சாலைக் கழிவுகளின் உப்பு நீராலேயே நிலத்தடி நீர் மாசுபடுகிறது என்பதை உப்பு நீர் கலப்புக் குறியீடு சுட்டிக்காட்டுகிறது. “நிலத்தடி நீரை மேம்படுத்த, அதிகமான மழைநீர் சேமிப்பைத் துரிதப்படுத்தி, நீரைச் சுத்திகரிக்கும் பணிகளிலும் ஈடுபட வேண்டும்” எனப் பரிந்துரைக்கின்றனர்.
வேலூர், கிருஷ்ணகிரி பகுதியில், பாறைச் சிதைவு, விவசாயம், வீட்டு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் ஆகியவையே குளோரைடு மற்றும் சோடியம் அளவு அதிகரிக்கக் காரணமாக உள்ளன. இது, ஏ. ஷண்முகசுந்தரம், எம். ஜெயப்பிரகாஷ் மற்றும் சிலரைக் கொண்ட குழு ஒன்று 2017-ஆம் ஆண்டு பயன்பாட்டு நீர் அறிவியல் (Applied water science) என்னும் ஆய்விதழில் எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீர் மாதிரிகளில் 58 சதவீதமானது மட்டுமே பாசனத்துக்குத் தகுதியானதாகப் பரிந்துரைக்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் அனுமதிக்கப்பட்ட அளவிலான மாசுபாட்டின்படியும், BIS தரநிலைகளின்படியும், மாதிரிகளில் 40 சதவீதமானது குடிக்கத்தக்க நிலையில் இல்லை.
பம்பர் ஆறு தோன்றுமிடத்தில், தென்கிழக்குப் பகுதியில் அந்த ஆறுடன் பர்கூர் மற்றும் மதுர் ஆறுகள் கலக்கும் இடங்களே மாசுபாட்டுக்கு இலக்கான இடங்களாக உள்ளன. ஏனெனில், தோல் தொழிற்சாலைகள், வேதி உரம் மற்றும் குடிநீரில் தாக்கம் செலுத்தும் சிறு குறு சாயத் தொழிற்சாலைகள் ஆகியவற்றின் கழிவு அங்கேதான் ஆறுகளில் கலக்கிறது. “ஆகவே, கரையோர மக்களது குடிநீரில் அதன் தாக்கம் பெரிதாகவே உணரப்பட்டது” என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன், வேலூரில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (JCEE) இணைத் தலைமைச் சூழலியல் பொறியாளரகத்தில் இருந்து, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்குநரகம், ரூ.3.58 கோடியையும் 450 சவரன் நகையையும் பறிமுதல் செய்துள்ளது.
“நிலத்தடி நீரை மேம்படுத்த, அதிகமான மழைநீர் சேமிப்பைத் துரிதப்படுத்தி, நீரைச் சுத்திகரிக்கும் பணிகளிலும் ஈடுபட வேண்டும்”
மாநிலங்களின் பொறுப்பு : மத்திய அரசு
தண்ணீருக்கான தேசிய கொள்கையாக ஒன்று இருப்பினும், CPCB-க்குச் சூழலியல் (பாதுகாப்பு) சட்டத்துக்கு ஒட்டுமொத்தப் பொறுப்பும் உள்ளது. பொதுமக்களுக்குச் சுத்தமான குடிநீரை வழங்குவது மாநில அரசுகளின் பொறுப்பு என்கிறது மத்திய அரசு.
மத்திய அமைச்சர், திரு டுடு, மக்களவையில் கேள்வி நேரத்தில் உத்தரபிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்குப் பதிலளித்தபோது, “2024-இல் உத்தரபிரதேசம் உட்பட நாட்டின் அனைத்து கிராமப்புற வீடுகளிலும், நீண்ட நாள் மற்றும் சீரான அடிப்படையில், சுத்தமான குடிநீர் தருவதற்காக, மத்திய அரசு மாநில அரசுகளுடன் சேர்ந்து ஜல் ஜீவன் மிஷனைச் செயல்படுத்துகிறது.” என்றார்.
ஆறுகளையும், நிலப்பரப்பு நீரையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்தும் தொழிற்சாலைக் கழிவுகளின் விவகாரத்தில், ஜே.எஸ் கேகர் மற்றும் நீதியரசர் டி.வொய் சந்திரசூட், எஸ்.கே கெளல் ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, 2017-ஆம் ஆண்டில், சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடாத தொழிற்சாலைகள் மூடப்படவேண்டும் என்றும், மின் விநியோகத்தைத் தடைசெய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. சுத்திகரிப்புக்கான நடவடிக்கை தொடங்கிய பின்புதான் தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த வருடம், மாசுபாட்டால் ஏற்படும் ஆரோக்கியக் கேடுகளை ஆய்வு செய்யவும், அதற்கேற்ப நடவடிக்கையை முடுக்கிவிடவும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொண்டது. தொழிற்சாலை வருவதற்கு முன்பாகவும், பின்பாகவும், அப்பகுதி வாழ் மக்களின் நலன் எப்படி இருந்தது என்பதையே முக்கியமாக ஆய்வு செய்ய வலியுறுத்தியிருந்தது.
நிலத்தடி நீர் மற்றும் நிலப்பரப்பு நீரின் மீதான புத்தாக்க இலக்கு என்பது, மாசுபாட்டின் மீதான வெள்ளை அறிக்கையை வெளியிடுவதற்கு திமுக அரசுக்குக் கிடைத்த வாய்ப்பாகும். வேலூர், மணலி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்பட வேண்டும். சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவு சுகாதாரக் கேட்டையும், மரணத்தையும், உற்பத்திக் குறைபாட்டையும் ஏற்படுத்துகிறது.
Read in : English