Read in : English
பொதுவாக ஊடகங்கள் என்பவை வணிகத்துக்காக நடத்தப்படுபவை. அவை கொள்கைகளுக்காக அர்ப்பணிப்புடன் நடத்தப்படுகிறது என்பதே தவறாக நினைப்பு என்று மூத்த பத்திரிகையாளரும், பிபிசி தமிழின் முன்னாள் ஆசிரியருமான T.மணிவண்ணன் கூறுகிறார். இன்மதி.காம் இதழின் ‘செய்தி ஊடகத்தை நம்பலாமா?’ என்ற தொடரின் பகுதியாக அவர் பேசினார். ஆனால் T.மணிவண்ணன் கூறும்பொழுது சமூக ஊடகங்களின் வளர்ச்சி என்பது செய்தி ஊடகத்தில் நம்பகத்தன்மை இருக்கிறதா இல்லையா என்பதனால் ஏற்பட்டது அல்ல என்று கூறுகிறார். எப்படியும் சமூக ஊடகம் என்பது அதன் இயல்பில் தானாகவே வந்திருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
அது இலவசமானது. அதில் கையில் செல்போன் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் செய்திகளைத் தர முடியும் என்பதுதான் அதன் ஈர்ப்புக்கான காரணம்.
கட்டமைக்கப்பட்ட, மரபு சார்ந்த பொது ஊடகத்தின் நம்பகத்தன்மை எப்பொழுதுமே கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது, அது இப்பொழுதும் தொடர்கிறது. “சமூக ஊடகம் அந்த கேள்வியை முன்னுக்குக் கொண்டுவந்துள்ளது” என்கிறார் அவர். மூத்த பத்திரிகையாளரான அவர் ஒட்டுமொத்தச் செய்தி ஊடகத்தின் எதிர்காலத்தைப் பற்றி அவநம்பிக்கையுடன் பேசவில்லை. “முதன்மை ஊடகங்களுக்கு வணிகரீதியில் எவ்வளவு அழுத்தங்கள் இருந்தாலும் அவற்றுக்குப் பதில் கூற வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அப்படி ஒன்றைச் சமூக ஊடகத்திற்குக் கூறமுடியாது” என்று அவர் கூறினார், கூடுதலாக, “பொதுவாக ஊடகங்கள் ஒரு வணிகமாக இருப்பதால் வருமானத்துக்காக அவை நம்பகத்தன்மையையும் பதில் கூறவேண்டிய நேர்மையையும் கொண்டிருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது” என்றும் கூறுகிறார். மணிவண்ணன் நீண்ட காலம் அனுபவம் கொண்டவர். அதில் அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் காலத்தில் பணியாற்றியதும் அடக்கம்.
மேலும் படிக்க:
செய்திகளை இருட்டிப்பு செய்யும் தமிழ் ஊடகங்கள்: `அறப்போர் இயக்கம்’
பாஜக மடியில் தில்லி ஊடகம், திமுக மடியில் தமிழக ஊடகம்: சுமந்த் சி. ராமன் கருத்து
ராம்நாத் கோவிந்தா, நாளிதழ் என்பது அர்ப்பணிப்புடன் நடத்தப்படுவது என்று கூறியதை அவர் நினைவுகூர்ந்தார். ஆனால், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், ஸ்டேட்ஸ்மேன் இன்னும் சில நாளிதழ்கள் திமுகவின் முரசொலி போன்றவை அவசர காலத்தை கடுமையாக எதிர்த்தது நீங்கலாக வேறு எடுத்துக்காட்டுகள் என்று பெரிதாக இல்லை. அதேவேளையில் தி ஹிந்து நாளிதழ் போபர்ஸ் செய்தியை வெளிக்கொண்டு வந்ததை மணிவண்ணன்
“முதன்மை ஊடகங்களுக்கு வணிகரீதியில் எவ்வளவு அழுத்தங்கள் இருந்தாலும் அவற்றுக்குப் பதில் கூற வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அப்படி ஒன்றைச் சமூக ஊடகத்திற்குக் கூறமுடியாது” என்று T.மணிவண்ணன் கூறினார்
நினைவுகூர்ந்தார். ‘அச்சு இதழ்கள், மின்னணு ஊடகங்கள் இரண்டுமே தங்களுடைய கடமையில் தோல்வியடைகின்றன. இதழியலின் விடுதலை உணர்வு, பேச்சுரிமை ஆகியவற்றுக்கான முன்னுரிமை பெருமளவு குறைந்திருப்பதாகத் தெரிகிறது.
மணிவண்ணன் பார்வையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அச்சு ஊடகம் அதிமுகவைவிட திமுகவை அதிகமாக விமர்சித்தே வந்திருக்கிறது. அதற்கு அவர்களுடைய வர்க்க நலன் சார்ந்த பார்வைதான் காரணம். தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் கூட அரசு அது சார்ந்த நிறுவனங்களை விமர்சிக்கும் வலிமையான மரபு ஊடகத்துறையில் இல்லை என்று அவர் கூறுகிறார். எனவே அரசுகள் அதைச் சார்ந்த நிறுவனங்களைக் கேள்வி கேட்பது குறித்த கேள்விக்கு நிலைமை பெரிதாக ஒன்றும் மாறவில்லை, என்று கருத்து தெரிவித்தார். மேலும் ஜெயலலிதா ஆட்சியில் ஊடகவியலாளர்கள் பலர்மீது தொடுக்கப்பட்ட மான நஷ்ட குற்றவியல் வழக்குகளையும் அதன் கடுமையான தாக்கங்களையும் அவர் நினைவு கூர்ந்தார்.
உரையாடல் பிபிசி செய்திகளைத் தொட்டுச் சென்றது. பிபிசி என்பது தனித்தன்மையான ஊடக நிறுவனம். அது அரசுடமையாக்கப்பட்டது, எனவே அதில் வணிக அழுத்தங்கள் இல்லை. அரசுடைமையாக இருந்த போதிலும் பிபிசி என்பது ஊடகவியலின் மிகச்சிறந்த தரத்திற்கான பதாகையை உயர்த்தி பிடிக்கிறது. பிபிசி பொது ஒளிபரப்பு நிறுவனம்தான்
ஆனால் அரசின் ஒளிபரப்பு நிறுவனம் அல்ல என்பதை மணிவண்ணன் சுட்டிக்காட்டினார். அவர்கள் நிர்வாகக் குழுவுக்குத்தான் பதில் அளிக்க வேண்டியதிருந்தது; அரசுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை, எனவே அவர்கள் மிகப்பெரிய அளவிற்கு சுதந்திரத்தை அனுபவித்தார்கள்.
மார்கரெட் தாட்சர் பிரதமராக இருந்த பொழுது நடந்த ஃபால்க் லேண்டு போர் பற்றிய செய்திகள் உட்பட இங்கிலாந்து அரசு கூட பலமுறை அவர்களுடைய செய்திகளை விமர்சித்திருக்கிறது. மார்கரெட் தாட்சர் பிரதமராக இருந்த பொழுது பிபிசி தேசியவாத உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள், ஆனால் பிபிசி அதை மறுத்து விட்டது. மணிவண்ணன் அந்த நிகழ்ச்சியை இப்போது இந்தியாவுடன் ஒப்பிட்டார்.
அனைத்திந்திய வானொலியும் தூர்தர்ஷனும் மிகப்பெரிய நம்பகத்தன்மையுடனும் தொழில் நேர்த்தியுடனும் கூடிய ஊழியர்களைக் கொண்டுள்ளன. ஆனால், எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வந்தால் தங்களுடைய கட்டுப்பாட்டைக் கைவிடத் தயாராக இல்லை. அந்தக் காரணத்தால் பொது ஒளிபரப்பு துறையின் தன்னாட்சியான செயல்பாடு என்பது ஒரு தொலைதூரக் கனவாகவே இருந்து வருகிறது.
பிபிசியிடம் இருந்து இந்திய ஊடகங்கள் கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்களைப் பற்றி பேசும்பொழுது பிபிசிக்கும் இந்திய செய்தி ஊடகங்களுக்குமான கட்டமைப்பு வேறுபாடுகளை மணிவண்ணன் முதன்மையாகச் சுட்டிக் காட்டுகிறார். பிபிசியின் நிர்வாக இயக்குநர் நேரடியாக அரசுக்குப் பதில் கூற வேண்டியது இல்லை. அவர்கள் நிர்வாகக் குழுவிற்குப் பதில் கூற வேண்டியவர்கள். இந்தியாவில் இல்லாத தன்னாட்சியை பிபிசிக்கு வழங்குவது இதுதான்.
இந்தியாவில் ஒளிபரப்பை பொதுச் சேவையாக நடத்துவதன் அவசியத்தை அனைத்திந்திய வானொலி தூர்தர்ஷன் போன்ற ஒளிபரப்பாளர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மக்களால், மக்களுக்காக, மக்களுடையதாக இருப்பதற்கான சாரம் இந்த ஒளிபரப்பாளர்களின் செயல்பாடுகளில் ஊடுருவ வேண்டும், அப்பொழுதுதான் சார்பு இல்லாமல் நடுநிலையோடு
செய்திகளை அவர்களால் வழங்க முடியும்.
Read in : English