Read in : English
வன உயிர்களின் சடலம் உரிய முறையில் கையாளப்பட வேண்டியது அவசியம். வன உயிர்களின் சடலங்களை மேலாண்மை செய்யும் விசயத்தில் கர்நாடகம் சற்று முன்னேறியிருக்கிறது. உள்ளார்ந்த காடுகளில் இயற்கையாகவோ போட்டிச் சண்டைகளாலோ இறந்துகிடக்கும் விலங்குகள் இனிமேல் நிம்மதியாக நிரந்தரமாய் ஓய்வெடுக்கலாம்.
காடுகளின் விளிம்புகளில் மனித வசிப்பிடங்களின் அருகே இறக்க நேரிடும் விலங்குகளுக்குக் கெளரவமான ஈமச்சடங்குகள் நடத்தப்பட்டு அவை எரிக்கப்படலாம் அல்லது புதைக்கப்படலாம்.
இந்தப் புதிய விழிப்புணர்வு தேசிய அளவில் பிரபலமானவரான வன உயிர் விஞ்ஞானி டாக்டர் சஞ்சய் குப்பியின் புதியபாதை வகுத்த அறிக்கையால் சாத்தியமானது. காடுகளில், மனிதர்களுக்கு அருகில் இருக்கும் விலங்குக்காட்சிச் சாலைகள், யானை முகாம்கள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், காடுகளின் விளிம்புப் பகுதிகள் ஆகியவற்றில் கிடக்கும் விலங்குகளின் சடலங்குகளைக் கையாளும் முறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவருவதற்குக் கர்நாடக அரசிற்குத் தூண்டுகோலாக இருந்தது அந்த அறிக்கைதான்.
காடுகளில் கிடக்கும் விலங்குகளின் சடலங்களை முடிந்தவரை கருவிகளைப் பயன்படுத்தாமல் கையாள வேண்டுமென்று வனத்துறை அதிகாரிகளுக்கு அரசு ஆணையிட்டிருக்கிறது. முன்பு தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் காடுகளில் விலங்குகளின் சடலங்களை வனத்துறை பூக்கள் தூவி மரியாதையுடன் அடக்கம் செய்யும் அல்லது எரியூட்டும் வழக்கம் இருந்தது. உள்ளார்ந்த காடுகளில் இறந்துபோன விலங்குகளுக்குக் காட்டப்பட்ட இந்த மரியாதை நெஞ்சைத் தொட்டது.
தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் காடுகளில் விலங்குகளின் சடலங்களை வனத்துறை பூக்கள் தூவி மரியாதையுடன் அடக்கம் செய்யும் அல்லது எரியூட்டும் வழக்கம் இருந்தது
தந்தங்கள், தோல், கொம்புகள், நகங்கள் போன்ற உறுப்புகளைக் கெடாமல் அப்படியே வைத்திருந்து விலங்குகளுக்கு வனத்துறை அதிகாரிகள் இறுதிச்சடங்கு செய்கிறார்கள். மேலும், விலங்குகளைத் திருடும் வேட்டைக்காரர்கள் சடலங்களைத் தோண்டி உறுப்புகளை எடுத்துவிடக் கூடாது என்பதற்காக விலங்குகளின் புதைகுழிகளை வனக்காவலர்கள் காவல் காக்கின்றனர் என்று மலே மஹாதேஷ்வர குன்றுகளில் இருக்கும் இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
“யானைகள், புலிகள், தாவர உண்ணிகள் போன்ற பெரிய மிருகங்கள் உள்காடுகளில் இறந்தால், அவை வனத்துறையின் மரியாதையோடு புதைக்கப்படுகின்றன. நம் உலகத்தைச் சிறந்ததோர் உலகமாக மாற்றுகின்ற அந்த விலங்குகளுக்கு நாம் காட்டும் நன்றியும், மரியாதையும் இது” என்று கர்நாடகாவின் தலைமை வனப் பாதுகாவலர் பிரகாஷ் நடல்கார் இன்மதியிடம் கூறினார்.
டாக்டர் குப்பியின் அறிக்கை விலங்குகளைப் பற்றிய புரிதலையும், இயற்கைக்கும் அவற்றிற்குமான உறவைப் பற்றிய புரிதலையும் தந்து ஒரு புதிய விழிப்புணர்வை உருவாக்கியது. முன்பு மாமிசப்பட்சிணி விலங்குகளும், தாவர உண்ணிகளும் அவற்றின் இயல்பான சுற்றுப்புறச் சூழலில் இறந்துகிடந்தால் அந்தச் சடலங்கள் எரிக்கப்பட்டன. ஆனால், விலங்குகளின் சடலங்கள் சுற்றுப்புறச்சூழல் செழுமைக்கு மிகவும் நல்லது என்று டாக்டர் குப்பி நம்புகிறார்.
மேலும் படிக்க:
தந்த வர்த்தகமும் கடத்தலும் இன்னும் முற்றிலும் அழியவில்லை
இந்தியக் காடுகளில் அழிந்து போன சிவிங்கிப்புலி மீண்டும் உலா வருமா?
ஏனென்றால், விலங்குகளின் சடலங்கள் பல்வேறு நுண்ணுயிரிகளுக்கு உணவாகின்றன. மேலும், அவற்றில் ஊட்டச்சத்துகள் இருப்பதால் அவற்றைத் தேடிவந்து உண்ணும் வன உயிரிகளுக்கும், அடித்துத் தின்னும் விலங்குகளுக்கும் உயிராற்றல் கிடைக்கிறது.
டாக்டர் குப்பியின் அறிக்கை விலங்குகளைப் பற்றிய புரிதலையும், இயற்கைக்கும் அவற்றிற்கும் இருக்கும் உறவைப் பற்றிய புரிதலையும் தந்து ஒரு புதிய விழிப்புணர்வை உருவாக்கியது
விலங்குகளின் சடலங்குகளைக் கையாளும் முறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டுமென்ற கர்நாடகத்தின் தீர்மானம் ஓர் உண்மையை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. இயற்கைப் பாதுபாப்பிற்கான அகில உலகச் சங்கம் ஆபத்தான நிலையில் அருகிவருகின்றன என்று வகைப்படுத்தியிருக்கும் கழுகுகளுக்கு விலங்குகளின் சடலங்களே போஷாக்கு அளிக்கின்றனே என்பதே அந்த உண்மை.
விலங்குகளின் சடலங்கள் அழுகிப் போகும்போது அவை மண்ணுக்கு உரமாகி மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது என்னும் உண்மை, வன உயிர்களின் சடலங்களை அகற்றும் உத்தியில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற டாக்டர் குப்பியின் கருத்துக்கு வலுவூட்டுகிறது. விலங்குகளின் சடலங்கள் பாக்டீரியாக்களையும், நுண்ணுயிரிகளையும் 40 மாதங்களுக்கு வளர்த்தெடுக்கின்றன என்று ஆராய்ச்சி சொல்கிறது.
இப்போது தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் சங்கமிக்கும் காடுகள் திருட்டு விலங்கு வேட்டைக்காரர்களுக்கு உகந்த இடமல்ல. மலே மஹாதேஷ்வரா குன்றுகளின் மூத்த வன அதிகாரி யாடகொண்டலா இப்படிச் சொல்கிறார்: “எங்கள் அனுமதியின்றி யாரும் காடுகளுக்குள் நுழைய முடியாது. திருட்டு விலங்கு வேட்டைக்கு எதிராக ஒரு மூன்றடுக்குப் பாதுகாப்புக் கட்டமைப்பை நாங்கள் உருவாக்கி வைத்திருக்கிறோம்.
முதல் அடுக்காகக் காடுகளில் வசிக்கும் பழங்குடிகள் உள்ளனர்; இரண்டாவது அடுக்கில் எங்கள் காவலர்கள் இருக்கிறார்கள்; மூன்றாவதாக உள்ளவர்கள் எங்கள் ரேஞ்சர்கள். அதனால்தான், இந்தப் பிராந்தியத்தில் வன உயிர்கள் வியாபாரம் மிகவும் மந்தமாகிவிட்டது.”
விலங்குக்காட்சிச் சாலைப் பூங்காக்களிலும், தேசியப் பூங்காக்களிலும் விலங்குகளின் சடலங்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மைசூரு சாமராஜேந்திர விலங்குக்காட்சிச் சாலைக்கும், மங்களூரு டாக்டர் கே. சிவராம கரந்த்-பிலிகுலா வன உயிர்க் காப்பகத்திற்கும், பெங்களூரில் இருக்கும் பன்னெர்கட்டா தேசியப் பூங்காக்கிற்கும் வருகின்ற விலங்குரிமைச் செயற்பாட்டாளர்கள் உயிரிழந்த விலங்குகளுக்கான ஈமச்சடங்குகளில் கலந்து கொள்கின்றனர். மேலும், ஆயிரக்கணக்கானவர்களும் கலந்துகொள்கிறார்கள்.
நாடு முழுவதும் உள்ள விலங்குக் காட்சிச் சாலைப் பூங்காக்களில் இயற்கையாக இறக்கும் விலங்குகளுக்கு அவற்றின் உறுப்புகள் சிதைவுபடாமல் இறுதிச்சடங்கு நடத்தப்படுகின்றன என்று விலங்குக் காட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள். மனிதர்களின் வசிப்பிடங்கள் சூழ்ந்த இடங்களில் விலங்குகள் கட்டப்பட்டு இருக்கின்றன; அவையும் சமூகத்தில் ஓரங்கமே. விலங்குக் காட்சிச் சாலைக்கு வருபவர்களில் எவரேனும் தங்களுக்குப் பிடித்த விலங்குகள் தொடர்பாக ஏதேனும் தவறு தென்பட்டால் அதைக் கண்டுபிடித்துச் சொல்கிறார்கள்.
யானையின் சடலம் தரையிலிருந்து ஒன்றரை அடி ஆழத்திற்கு மண்ணிலிருக்கும் நைட்ரஜனை அதிகரிக்கச் செய்யும் என்று தற்காலத்து ஆய்வுகள் சொல்கின்றன; மேலும், 40 மாதங்களுக்கு பாக்டீரியாக்களையும் நுண்ணுயிரிகளையும் வளர்த்துவிடுகிறது
நாட்டிலுள்ள ஆசிய யானைகளில் மிக நீண்ட தந்தங்கள் கொண்ட ஒரு யானையின் சடலம் புதைக்கப்படும் சடங்கைக் கண்காணித்த மூத்த அதிகாரி ஒருவர், இன்மதியிடம் இப்படிக் கூறினார்: அந்த யானை சமீபத்தில் இறந்தது. அது கர்நாடகக் காடுகளில் ஏதோவோர் இடத்தில் தந்தங்களோடு புதைக்கப்பட்டது.
யானையின் சடலம் தரையிலிருந்து ஒன்றரை அடி ஆழத்திற்கு மண்ணிலிருக்கும் நைட்ரஜனை அதிகரிக்கச் செய்யும் என்று தற்காலத்து ஆய்வுகள் சொல்கின்றன; மேலும் 40 மாதங்களுக்கு பாக்டீரியாக்களையும் நுண்ணுயிரிகளையும் வளர்த்துவிடுகிறது. கழுதைப் புலிகளுக்கும், முள்ளம்பன்றிகளுக்கும் யானை உடல் கால்சியம் சத்தைக் கொடுக்கிறது.
உள்காடுகளில் கிடக்கும் விலங்குகளின் சடலங்களை மண்ணோடு கலக்கும் வண்ணம் அப்படியே விட்டுவிட வேண்டும் என்று கர்நாடக அரசு வனத்துறைக்குப் பொத்தாம்பொதுவான ஆணையை இட்டிருக்கிறது. இனிவரும் நாள்களில் விரிவானதோர் அறிக்கை அரசிடமிருந்து வரும் என்று வன உயிர் ஆர்வலர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.
Read in : English