Read in : English
இந்தாண்டு ஜேஈஈ (ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாம்) முடிவுகளைப் பார்த்தால் தேசிய நுழைவுத் தேர்வுகளின் போக்கிற்குத் தக்கவாறு தமிழ்நாடு அனுசரித்துப் போய்க்கொண்டிருக்கிறது போலத் தெரிகிறது. ஆனால் எப்போதும் ஆக்கப்பூர்வமான விளைவுகள் உண்டாகும் என்று சொல்ல முடியாது. இவ்வாறு சொல்கிறார் எயிட் இந்தியா மற்றும் ஆஹாகுருவின் நிறுவனரும் செயலருமான பாலாஜி சம்பத். நீட் தேர்வை எழுதும் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது; இதற்குப் பாதி காரணம் திமுக உச்சக்குரலில் இதைக் கடுமையாக எதிர்த்ததுதான். நீட்டில் ஏற்பட்ட தமிழ்நாட்டின் ஆர்வம் ஜேஈஈ விசயத்திலும் தொற்றிக் கொண்டது. ஜேஈஈ-யில் இருந்த தமிழ்நாட்டு மாணவர்களின் ஆர்வமின்மை குறைந்துவிட்டது போலவும் தோன்றுகிறது.
இதுசம்பந்தமாக பாலாஜி சம்பத் தன் கருத்துகளை இன்மதியிடம் பகிர்ந்து கொள்கிறார்.
ஜேஈஈ ஆர்வத்தை நீட்டோடு நீங்கள் தொடர்புப்படுத்துகிறீர்கள். எப்படி?
ஆம். நிறைய மாணவர்கள், குறிப்பாக ஸ்டேட் போர்டு மாணவர்கள், ஜேஈஈ-விற்காக தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்தில் ஏற்பட்ட மாற்றம். நீட் பங்கெடுப்பில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழக மாணவர்கள் ஏராளமானோர் நீட் எழுதுகிறார்கள். நீட் மிகவும் கடுமையானது; சராசரி மாணவனால் எழுத முடியாது என்ற பரப்புரை இதைவொரு சவாலாக்கியது; ஆதலால் சவாலை சமாளிக்க தமிழக மாணவர்கள் தயாராகி விட்டார்கள் என்பது என் கருத்து.
நீட் எழுதும் பெரும்பாலான மாணவர்களுக்கு நிஜத்தில் மருத்துவப் படிப்பில் ஆர்வம் கிடையாது. ஜேஈஈ-யும் நீட்டும் ஒருவகையில் ஒத்த தன்மை கொண்டவை என்பதால், சிலர் ஜேஈஈ எழுதுகிறார்கள். ஆனால் தேர்வுத்திறன் என்று பார்த்தால் மதிப்பெண் சதவீதத்தில் தமிழ்நாடு இன்னும் பின்தங்கியே இருக்கிறது; தெலங்கானா, ராஜஸ்தான் அப்படி அல்ல.
நீட் மிகவும் கடுமையானது; சராசரி மாணவனால் எழுத முடியாது என்ற பரப்புரை இதைவொரு சவாலாக்கியது; ஆதலால் சவாலை சமாளிக்க தமிழக மாணவர்கள் தயாராகி விட்டார்கள்
தெலங்கானாவிலும், ஆந்திரப் பிரதேசத்திலும், பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு ஈஏஎம்செட் என்ற தேர்வுமுறை இருக்கிறது; அதனால் அந்த மாணவர்களுக்கு ஜேஈஈ என்பது மற்றுமொரு தேர்வு. அவ்வளவுதான்.
மதிப்பெண் சதவீதங்களில் தமிழ்நாடு தொடர்ந்து முயற்சி செய்ய வேன்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?
நம் மாணவர்களின் தேர்ச்சித் திறனை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும். ஆனால் தெலங்கானாவிலும், ஹரியானாவிலும், ராஜஸ்தானிலும், டம்மி பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. ஆறாம் வகுப்பிலிருந்து மாணவர்கள் அந்த டம்மி பள்ளிக்கூடங்களில் தங்கள் பெயர்களையும் சேர்த்துக் கொள்கின்றனர்; ஆனால் கோச்சிங் கிளாஸ்களுக்கு மட்டுமே போகிறார்கள். அதனால் பள்ளிக்குச் செல்வதின் உண்மையான நோக்கம் அடிப்பட்டுப் போய்விடுகிறது.
அந்த மாநிலங்களில் மாணவர்களுக்கு மல்டிபிள் சாய்ஸ் கேள்விகளுக்கு எப்படி விடையளிப்பது என்று ஆறாம் வகுப்பிலிருந்து கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆதலால் ஜேஈஈ-யில் அவர்கள் 100 சதவீதம் மதிப்பெண் எடுத்து விடுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இந்தத் தேர்வு அமைப்பில் பயிற்சி பெற்றுவெளிவரும் மாணவர்கள் வெறும் ஒற்றைப் பரிமாண மனிதர்களாகவே இருக்கிறார்கள் ஒரு வாக்கியத்தைக் கூட அவர்களால் ஒழுங்காக எழுத முடியாது; முழுமையான அர்த்தங்களோடு அவர்களால் சிந்திக்கவும் முடியாது. அவர்களுக்கு வினாக்கள் தெரியும்; விடை சொல்லும் உத்திகள் தெரியும்; ஏபிசிடி வரிசை விடைகள் தெரியும். ஆனால் வேறொன்றும் தெரியாது. இயல்பிலே அவர்களுக்குத் தன்னம்பிக்கை குறைவுதான். தங்கள் சிந்தனைகளை வெளிப்படுத்த அவர்களால் முடியாது. அவர்களுக்குப் பள்ளியும் இல்லை; அதனால் தோழமை உணர்வோடு வாழும் வாழ்க்கையும் இல்லை.
ஜேஈஈ-யில் சில வினாக்களுக்கு மல்டிப்பிள் சாய்ஸ் விடை கிடையாது. கணிதமுறைப்படியான விடைகள்தான் உண்டு. அவற்றிற்கு கணக்குப்போடும் திறன் தேவை. அதனால் அந்த வினாக்கள் அவர்களுக்கு மிகவும் சிரமமானவை..
அந்த முறையில் தமிழ்நாடு பரவாயில்லைதானே?
ஆம். மேலே சொன்ன அந்த மாநிலங்களின் கல்விக் கலாச்சாரம் தமிழ்நாட்டில் நிஜத்தில் ஆரம்பமாகவில்லை. எங்களின் கோச்சிங் வகுப்புகளில் குறைந்தது 20 மாணவர்கள் 90 சதவீத வீச்சில் இருக்கிறார்கள். இது நல்லதுதான்.
மேலும் படிக்க:
+2 மாணவ, மாணவிகள் படிக்க வழிகாட்டும் புதுச்சேரி சண்டே மார்க்கெட் சாலையோர வியாபாரிகள்!
பொறியியல் படிப்புக்கு ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கை: தமிழக அரசு மீண்டும் கொண்டு வருமா?
ஆனால் தேசிய நுழைவுத் தேர்வுகளில் வெற்றிபெற வைக்கும் கோச்சிங் கிளாஸ் போன்ற பள்ளிகள் சென்னையிலும் உருவாகிக் கொண்டிருப்பதை நாம் பார்க்க ஆரம்பித்துவிட்டோம். அபார்ட்மெண்ட் கட்டிடங்களில் அந்த மாதிரியான பள்ளிகள் இயங்குகின்றன. அங்கே நுழைவுத் தேர்வுகளில் ஜெயிப்பது எப்படி என்று குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள். திரும்பத் திரும்ப நீட் கேள்விகளுக்கு விடையளிக்கும் போக்குதான் அங்கே நிலவுகிறது.
ஒரு தேசத்திற்கு இந்த மாதிரியான பள்ளிக் கட்டமைப்பு நல்லதல்ல. பிரச்சினைகள் உருவாகும்.
தற்போதைய போக்கின்படி தமிழ்நாடு தனக்கான ஒரு கல்வித் திட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. நீங்கள் எதை ஆதரிக்கிறீர்கள்?
கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களை நாம் மதிப்பிழக்கச் செய்துவிட்டோம். எளிமையான அல்ஜீப்ராகூட தெரியாத ஒரு மாணவன் 10-ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்று விடுகிறான். நாம் கல்வி அமைப்பை மிகவும் வீரியமிழக்கச் செய்துவிட்டோம்,. ஆனால் ஒன்றிய அரசு தூக்கிப்பிடிக்கும் கல்லூரி நுழைவுத் தேர்வு கட்டமைப்பு தர அளவுகோல்களை உயர்த்தியிருக்கிறது. அதனால்தான் ஆகப்பெரும் இடைவெளி நிலவுகிறது.
கடந்த காலத்தில் மாநில அரசு நுழைவுத் தேர்வெல்லாம் வைக்கவில்லை; பள்ளிக் கல்விக் கட்டமைப்பு மிக எளிதாகவே இருந்தது. இப்போது கூட கல்லூரிக் கல்விக்கு நுழைவுத் தேர்வுகள் வைக்காமலே இருக்கலாம். ஆனால் பள்ளிக்கல்வியைத் தரமேம்பாடு செய்ய வேண்டும்.
பாடத்திட்டம் ஏதோ கொஞ்சம் மேம்பட்டிருக்கிறது. எது எப்படியோ, நாடு முழுவதும் இருக்கும் பாடப்புத்தகங்கள் என்சிஈஆர்டி-யை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், அவை ஒரே சீராக இருக்கின்றன.
நீட்டில் ஏற்பட்ட தமிழ்நாட்டின் ஆர்வம் ஜேஈஈ விசயத்திலும் தொற்றிக் கொண்டது. ஜேஈஈ-யில் இருந்த தமிழ்நாட்டு மாணவர்களின் ஆர்வமின்மை குறைந்துவிட்டது போலவும் தோன்றுகிறது
கடந்த காலத்தில், தேர்வு வினாக்களுக்கு முன்னதாகவே தயாரிக்கப்பட்ட திட்டம் என்று ஒன்று இருந்தது. இதில் நான்கு அல்லது ஐந்து குறிப்பிட்ட கேள்வித்தாள்கள் ஏற்கனவே கட்டமைக்கப்பட்டிருக்கும். அவற்றிலிருந்துதான் தேர்வுக் கேள்விகள் கேட்கப்படும். அதனால் மாணவர்கள் எளிதாக மனப்பாடம் செய்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தார்கள். இப்போது அந்த அமைப்பு ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் பாடப்புத்தகத்தைத் திரும்ப வாசிக்க வைக்கும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. பாடத்திட்டத்தோடு ஒத்துப் போகும் இந்தக் கேள்விகள் புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாத்தின் முடிவில் அல்லது புத்தகத்தின் முடிவில் இருக்கும் கேள்விகள்.
பாடத்திட்டக் குழுக்களிலும் பிற குழுக்களிலும் நான் பணி புரிந்திருக்கிறேன். தேர்வுக் கேள்விகளில் பத்து சதவீதமாவது பாடப்புத்தகத்தைத் தாண்டி இருக்க வேண்டும் என்றேன். ஆனால் அதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. நமது கேள்வித் தாள்களும், கல்வி உட்கட்டமைப்பும், கற்பித்தல் முறைகளும் மேம்பட வேண்டும். அப்போதுதான் தமிழ்நாடு ஆச்சிறந்த நிலையை எட்டிப் பிடிக்கும். தரம்குறைந்த பள்ளிகளில் பெற்ற கல்வியை ஈடுகட்டும் விதமாக நுழைவுத் தேர்வுகளை அடித்துப் பிடித்து எழுதும் தற்காலத்துப் பைத்தியகாரத்தனமான போக்கிற்குத் தமிழ்நாடு நல்லதோரு மாற்றாக எழுந்துவரும்.
Read in : English