Site icon இன்மதி

மக்கள் எழுச்சியால் மக்கள் வசமான இலங்கை ஜனாதிபதி மாளிகை!

(Photo credit :President's Pavilion- Weranga Rajapaksha, Wikimedia Commons)

Read in : English

மக்கள் எழுச்சியால் கொழும்பில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகை, மக்கள் வசமாகியுள்ளது. நாட்டின் உச்சக்கட்டப் பாதுகாப்புக்கு உட்பட்டிருந்த இலங்கை ஜனாதிபதி மாளிகையில் மக்கள் புகுந்துள்ளனர். அதி ரகசியங்களின் பாதுகாப்பு அகமான அந்த மாளிகை, பொது வெளியாகக் காட்சியளிக்கிறது. அந்த மாளிகையில் யாரும், எங்கும் சென்று, என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை நிலவுகிறது.

வெளிநாட்டு பயணியரும் கூட அந்த மாளிகையில் புகுந்து, பார்வையிட்டு வருகின்றனர். இலங்கை மக்களாட்சியில் முக்கியத்துவம் மிக்கது கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகை.இதன் வரலாறு, ஐரோப்பிய காலனித்துவ காலத்திலிருந்து தொடங்குகிறது. இன்று ஜனாதிபதி மாளிகையாக அமைந்துள்ள இடம், போர்த்துகீசியர் இலங்கையை ஆட்சி செய்த போது ஒரு தேவாலயமாக இருந்தது.

ஐரோப்பாவிலிருந்து போர்த்துகீசியர், 1505இல் இலங்கைக்கு வந்தனர். அப்போது கொழும்பு கோட்டையில் உயரமான நிலப் பகுதியில், பிரான்சிஸ் தேவாலயத்தை அமைத்தனர். அத்துடன், இறந்தவர்களை அடக்கம் செய்யும் கல்லறையாகவும் ஒரு பகுதி இருந்தது. போர்த்துகீசியர்களில் முக்கிய தலைவர்களின் பூத உடல்களை அங்கேயே அடக்கம் செய்தனர்.

இலங்கையில் ஆளுநராக இருந்த ஏங்கல் பேக் இதை உருவாக்கினார். காலத்திற்கு ஏற்ப இந்த மாளிகை புதுப்பிக்கப்பட்டது. பின் அரச மாளிகையாக எழுப்பப்பட்டது

இந்த இடத்தில் ஹாலந்து கட்டடக் கலை பாணியில் இரண்டு மாடி மாளிகை ஒன்று கட்டப்பட்டது. இலங்கையில் ஆளுநராக இருந்த ஏங்கல் பேக் இதை உருவாக்கினார். காலத்திற்கு ஏற்ப இந்த மாளிகை புதுப்பிக்கப்பட்டது. பின் அரச மாளிகையாக எழுப்பப்பட்டது.

மேலும் படிக்க:

மீளத்துடிக்கும் இலங்கை தொழில்தொடங்க இந்தியர்களை அழைக்கிறது 

கோத்தபயவுக்கு எதிரான போராட்டம்: இலங்கைத் தமிழர்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்?

பிரிட்டிஷ் படை, 1782இல் கொழும்பு கோட்டையை தாக்கி வீழ்த்தியது. பிரிட்டிஷ் அரசால் 1804 ஜனவரி 17இல் இது உடமையாக்கப்பட்டது. தொடர்ந்து, 29 ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிகள் இதை பயன்படுத்தியுள்ளனர்.

(Photo credit: @Mngxitama2- twitter)

ஜனாதிபதி மாளிகையும் அதை சுற்றியுள்ள பிரதேசங்களும் உச்சக்கட்டப் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் ஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேன, ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையை சுற்றி உள்ள வீதிகள் மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்துவிடப்பட்டன. இந்த மாளிகையின் சில பகுதிகள் முதன் முறையாக மக்கள் பார்வைக்காக 2016 ஜூன் 8ம் தேதி முதல் 14 வரை மக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டு இருந்தது.

மக்கள் எழுச்சியால், வரலாற்று சிறப்பு மிக்க இலங்கை ஜனாதிபதி மாளிகை, மக்கள் வசம் வந்துள்ளது. ஜனாதிபதி அமர்ந்து பணியாற்றிய அதே இருக்கை, பல லட்சம் பேரின் பகடிப் பொருளாக மாறியுள்ளது

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இருந்த போது, இந்த மாளிகையைப் பயன்படுத்தவில்லை. அரச விருந்தினர்களை வரவேற்பது உள்ளிட்ட விசேஷ சந்தர்ப்பங்களில் மட்டும் பயன்படுத்தி வந்தார். இலங்கை ஜனாதிபதியாக, கோத்தபய ராஜபக்சே பொறுப்பேற்ற பின், அரசு அலுவல்களை கவனிக்கும் முக்கிய இல்லமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. மக்கள் எழுச்சியால், வரலாற்று சிறப்பு மிக்க இலங்கை ஜனாதிபதி மாளிகை, மக்கள் வசம் வந்துள்ளது. ஜனாதிபதி அமர்ந்து பணியாற்றிய அதே இருக்கை, பல லட்சம் பேரின் பகடிப் பொருளாக மாறியுள்ளது.

மிக உச்சபட்ச பாதுகாப்புக்குள் ஜனாதிபதி மாளிகை என்பதால் உச்சபட்ச பாதுகாப்பு நிறைந்திருந்த இந்த மாளிகையைப் பொதுமக்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்த மாளிகையின் எல்லா பகுதிகளிலும் மக்கள் ஊடுருவியுள்ளனர். வெளிநாட்டு பயணிகளும் இந்த மாளிகைக்குள் புகுந்து, சுற்றிப் பார்த்து வருகின்றனர். அந்த மாளிகையில் வசித்த கோத்தபய ராஜபக்சேயின் உள்ளாடை கூட கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

Share the Article

Read in : English

Exit mobile version