Site icon இன்மதி

மீண்டும் எழுந்திருக்கும் பிரிவினை விவாதமும், திமுக அமைச்சர் கோரிய அமெரிக்க நிலைப்பாடும்: ஒரு மீள் நினைவு

Read in : English

1975-76-ஆம் ஆண்டு, அவசரநிலையை எதிர்த்து, மத்திய அரசின் வெம்மையை திமுக அரசு அதிகப்படுத்தியபோது, முக்கிய விவாதப்பொருளாக அமைந்தது மாநிலப் பிரிவினை.

அமெரிக்க தூதரக அதிகாரியால், அமெரிக்க அரசுக்கு அனுப்பப்பட்ட சில அறிக்கைகளை உள்ளடக்கியுள்ளது இத்தலைப்பு. 10 வருடங்களுக்கு முன்பு விக்கிலீக்ஸில் இவை வெளியானது. அவசர நிலை அறிவித்த ஒரு மாதத்துக்கு பின்பு, மாநில தொழிலாளர் துறை அமைச்சர் க.ராஜாராமை, தூதரக அதிகாரி சந்தித்திருந்தார். இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டின் பிரிவினையை அமெரிக்க ஆதரிக்குமா என ராஜாராம், அவரிடம் கேள்வியெழுப்பியிருந்தார். அப்போது அந்த அதிகாரி. அத்தகைய நடவடிக்கைகளை அமெரிக்கா நிச்சயம் ஆதரிக்காது என்பதைத் தெரிவித்திருந்தார்.  [ 2013-ஆம் ஆண்டு தி இந்துவில் பிரசுரிக்கப்பட்டது]

2022-ஆம் ஆண்டு, ஜூலை 4-ஆம் தேதி, திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய தொலைதொடர்பு அமைச்சருமான ஆ ராசா, தமிழ்நாட்டுக்கு ’மாநில சுயாட்சி’ என்பதை வலியுறுத்திப் பேசினார். மேலும், தனி நாடு கேட்குமளவுக்கு மத்திய அரசு, தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் அளிக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்தினார்.

திராவிட இயக்கத்தின் தூணான தந்தை பெரியார், தனி தமிழ்நாடு கோரிக்கைக்காக உறுதியாக நின்றிருந்தாலும், திமுக அக்கருத்தைக் கைவிட்டு விலகியது என நாமக்கல்லில் நடைபெற்ற, நகராட்சி அமைப்பு பிரதிநிதிகளின் கூட்டத்தில் பேசியிருக்கிறார் ஆ.ராசா.

பெரியாரை ஏற்று, அவர் வழி நடந்த கட்சியாக இருந்தாலும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்காகவும், ஜனநாயகத்தன்மைக்காகவும், ‘வாழ்க இந்தியா’ என்றது திமுக. இன்றும் அதே கருத்தைக் கொண்டிருக்கிறது இக்கட்சி எனவும் பேசினார். “எங்களை தனிநாடு கேட்கவைத்து விடாதீர்கள். மாநில சுயாட்சி உரிமையை நீங்கள் அளிக்கும்வரை நாங்கள் ஓயப்போவதில்லை” எனவும் பேசியிருக்கிறார்.

2022-ஆம் ஆண்டு, ஜூன் 4-ஆம் தேதி, திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய தொலைதொடர்பு அமைச்சருமான ஆ ராசா, தமிழ்நாட்டுக்கு ’மாநில சுயாட்சி’ என்பதை வலியுறுத்திப் பேசினார்.

ஆ.ராசா பேச்சின் மீது விமர்சனங்கள் எழுந்ததும், ’பிரிவினை கோரிக்கை அண்ணாவால் கைவிடப்பட்டுவிட்டது. அவர் இந்திய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையுமே ஆதரித்தார். அவர் கோடிட்ட வழியிலேயே கட்சி பயணிக்கிறது’ என திமுக விளக்கமளித்திருக்கிறது. அண்ணாதுரை இந்திய சுதந்திரத்தை வரவேற்று, அவ்விவகாரத்தில் பெரியாருடன் முரண்பட்டார். பிரிவினை கோரிக்கை வைப்பது சட்ட விரோதமானதாக பார்க்கப்பட்டபோது, திமுக அக்கருத்திலிருந்து பின்வாங்கியது, திரும்பப்பெற்றது.

மாநிலத்துக்கும், மாநில சுயாட்சிக்கும் கூடுதலான அதிகாரங்கள் தரப்படவேண்டும் என்பது திமுகவின் நிலைப்பாடாக இருந்தாலும், முரண்களால் எழுந்த எரிச்சலால், ஒவ்வொரு காலத்திலும், கட்சியில் சில தலைவர்கள் அவ்வப்போது பிரிவினையைக் குறித்து பேசியே வந்திருக்கிறார்கள். தற்போதைய மாநில ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் இடையிலான முரணும், திமுக தலைவர்களுக்கும், அரசுக்கும் கோபத்தை வரவழைத்திருக்கிறது.

மேலும் படிக்க:

துணைவேந்தர் நியமன மசோதா: 28 ஆண்டுகளுக்கு முந்திய வரலாறு மீண்டும் திரும்புகிறது!

கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: மத்திய அரசின் ஆலோசனை பெற ஆளுநர் தில்லி பயணம்!

அப்போதைய திமுக அமைச்சர் ராஜாராம் சொன்னதாக, அச்சமயத்தில் சொன்னதாக தெரிவிக்கப்பட்டது என்னவெனில், “திமுகவின் இளைஞர்கள், இந்திரா காந்தி ஜனநாயகத்தைக் கொன்று விடுவார். அதனால் தமிழ்நாடு பிரிவினையைக் கோரவேண்டும் என்கிறார்கள். ரஷ்யா, இந்திரா காந்தியை ஆதரித்ததால், இளைஞர்கள் பிரிவினையை நோக்கிய அமெரிக்க எதிர்வினையைக் குறித்து விவாதித்தார்கள்” என்றாராம். ஆனால், கட்சியின் மூத்த தலைவர்களும், முன்னோடிகளும் பிரிவினை கருத்தை ஆதரிக்கவில்லை என்றே தெரிவித்திருக்கிறார்.

ராஜாராம் தனது உரையாடலில் மீண்டும் அவ்விவகாரத்தை குறித்து  பேசியிருக்கவில்லை. ஆழம் பார்ப்பதற்காக திமுக தலைமை அத்தகையை கருத்தை சொல்லி பரிசோதித்துப் பார்த்ததா என்பதும் அப்போது அறியப்படவில்லை.

ஜூலை 1975-இல், ராஜாராமின் பிரிவினை விவகாரத்தை விவாதித்த தூதரக அதிகாரியின் அறிக்கையில், அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் இவ்விவகாரத்தை கொண்டு வந்த, அன்றைய மெட்ராஸைச் சேர்ந்த பெயர் குறிப்பிடா கல்வியாளரைக் குறித்தும் பேசியது. இந்தியாவின் மற்ற பகுதிகள் கம்யூனிச சர்வாதிகாரத்துக்குள் வந்தாலும், தமிழ்நாடு தனிநாடாக இருக்க முயற்சி செய்ய வேண்டும் எனவும், அதை அமெரிக்கா ஆதரிக்கும் எனவும், முதலமைச்சரிடம் தான் சொன்னதாக, அந்தக் கல்வியாளர் தூதரக அதிகாரியிடம் தெரிவித்திருந்தார். ஆனால், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, வியட்நாமுக்குப் பின், ஆசியாவில் அமெரிக்கா புதிதாக எதையும் முன்னெடுக்கப்போவதில்லை என தெரிவித்திருந்தார். வியட்நாமில் ஒரு கம்யூனிச எதிர்ப்பு அரசுக்கு துணை நின்றதைப்போல், தனித் தமிழ்நாட்டிலும், எதிர் கம்யூனிச நிலையில் அமெரிக்க தலையிட்டு வினையாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை பற்றித்தான் கருணாநிதி அப்போது பேசியிருக்கிறார்.

அதற்கு அடுத்த ஆண்டே, திமுக அமைச்சர்கள் கலந்துகொண்ட திராவிடர் கழக சந்திப்பில், தஞ்சாவூரில் பிரிவினை குறித்து பேசப்பட்டது. 1971-1976 வரை திமுக அரசின் தலைமை செயலராக இருந்த பி சபாநாயகம், இக்கூட்டத்தில் திமுக அமைச்சர்கள் இருப்பது, ”பிரதமரின் ஆட்சி கலைப்பு முடிவுக்கு சாதகமாகிவிட்டது” என்பதாக தூதரக அதிகாரியின் அறிக்கை தெரிவித்தது. ஜனவரி மாதத்தின் இறுதியில் ஆட்சி கலைக்கப்பட்டது.

அப்போதைய திமுக அமைச்சர் ராஜாராம் சொன்னதாக, அச்சமயத்தில் சொன்னதாக தெரிவிக்கப்பட்டது என்னவெனில், “திமுகவின் இளைஞர்கள், இந்திரா காந்தி ஜனநாயகத்தைக் கொன்று விடுவார். அதனால் தமிழ்நாடு பிரிவினையைக் கோரவேண்டும் என்கிறார்கள்.

அவசரநிலை அறிவிக்கப்பட்டபோது, திமுக தனது எதிர்ப்பு நிலையை பகிரங்கமாகவே பதிவு செய்தது. ஜனதா தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. பத்திரிகை தணிக்கைக்கு தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காக, விளக்கெண்ணெயின் குளிர்ச்சி குறித்தும், வெண்டைக்காய் உடல்நலத்துக்கு நல்லது என்பது குறித்தும் செய்திகளை முரசொலி வெளியிட்டுக்கொண்டிருந்ததாக தூதரக அதிகாரி அறிக்கை தெரிவித்திருந்தது.

திமுக அரசு கலைக்கப்பட்ட பிறகு, மெரினா கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திரா காந்தி, திமுக ஆட்சியைக் கலைத்ததற்கான காரணங்களைப் பேசினார். மாநிலத்தில் வன்முறையை கட்டவிழ்க்க திமுக அரசு திட்டமிட்டதாகவும், அந்த வன்முறையில் தங்களை தியாகிகளாக அவர்கள் காட்டிக்கொள்ள முற்பட்டதாகவும் அவர் பேசினார். தூதரக அதிகாரியின் அறிக்கைப்படி, “திமுகவில் இருக்கும் ஓரிரண்டு தலைவர்கள் பிரிவினையைக் கோராமல் இருக்கும் நிலையில், மற்றவர்கள் அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாட்டின் பிற பகுதிகளுக்கு வெளிப்படையாகவே அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்” என்று இந்திரா காந்தி பேசியதாகத் தெரிவிக்கிறது.

ஆனால், அமெரிக்க தூதரக அறிக்கை தெரிவித்ததன்படி, ஜூன் 25, 1975-இல் அமலுக்கு கொண்டுவரப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு நிலைத்த அவசரநிலையின்போது திமுக வன்முறையை கட்டவிழ்க்க நினைக்கவில்லை என சபாநாயகம் தெரிவித்ததாக தெரிவிக்கிறது. மற்ற மாநிலங்களை விட இங்கு ஊழல் அதிகம் இல்லை என்று கூறி, திமுக தலைமையின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைப் பற்றி பேசினார். மத்திய அரசு அதிகாரி, தமிழ்நாட்டின் நிர்வாகம் மிகச்சிறந்தது எனவும், நாட்டிலேயே சிறந்தது எனவும் தெரிவித்ததாக, தூதரக அதிகாரி குறிப்பிட்டிருக்கிறார்.

Share the Article

Read in : English

Exit mobile version