Site icon இன்மதி

மற்றொரு பொருளாதார மந்தநிலை விளிம்பில் தத்தளிக்கும் உலகம்!: பொருளாதார நிபுணர் அருண்குமார் நேர்காணல்

(Photo Credit: Dana Ray Reynolds - Flickr)

Read in : English

அருண்குமார் ஒரு பொருளாதார நிபுணர் என்பதோடு மட்டுமல்லாமல், சிக்கலான கருத்துகளையும் ஒரு சாதாரண மனிதனுக்கு எளிதாக விளக்குகின்ற அறிவாற்றல் மனம் படைத்தவரும் ஆவார்.  உலகம் மற்றொரு பொருளாதார மந்தநிலை யின் விளிம்பில் உள்ளது என வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட செய்தி குறித்து டாக்டர் அருண்குமாரின் கருத்தோட்டம் என்ன என்பதை அறிந்து கொள்வதே நேர்காணலில் எங்களது முக்கியக் கவனத்துக்குரியதாக இருந்தது.

அமெரிக்கப் பொருளாதாரம் தேக்கம் அடைந்திருக்கும் சூழலில், அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை என்றாலும், மற்றும் உலக அளவில் பணவீக்கத்தின் பிடியில் அனுபவித்திருக்கிறோம் என்ற உணர்வும், இதன் நிகழ்முறைகளும்  திரும்பத் திரும்ப வருவதாகவே தோன்றுகின்றன. இருப்பினும் டாக்டர் அருண்குமாருக்கு வேறுவிதமான கருத்து இருக்கிறது. விளக்கம் தெரியாத  எல்லாவற்றுக்கும் விளக்கம் அளித்து, நிலைமையை நன்றாகப் புரிந்துகொள்ள டாக்டர் அருண்குமார் எங்களுக்கு உதவி செய்தார்.  நேர்காணலில் இருந்து சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.

கேள்வி:  பொருளாதார மந்தநிலை யின் தாக்குதல் தொடர்பாக மக்கள் மனதில் இருக்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க உதவி செய்வதில் இப்போதைய போர் எந்த அளவுக்கு மிகவும் முக்கிய இடம் வகிக்கிறது?

அருண்குமார் பொருளாதார நிபுணர்

அருண்குமார்: இப்போது நடக்கும் போர் இரண்டு பெரும் முகாம்களுக்கு இடையிலான பினாமி போர்.ஒருபுறம்  வல்லரசு ரஷ்யா, மறுபுறம் நேட்டோ; அமெரிக்கா ஆதரவுடன் மிகவும் சிறிய நாடான உக்ரைன். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் உலகிற்குத் தெளிவாகத் தெரிந்தாலும்,  பொருளாதாரத் தடைகள் மூலம் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடுத்திருக்கும் தாக்குதல் தெளிவாகத் தெரியவில்லை. அதற்கு மேல், இந்த மேற்கத்திய சக்திகள் ரஷ்யாவை நீண்ட காலத்திற்கு இந்த மோதலில் சிக்க வைக்க பார்க்கின்றன. இது, நேட்டோவின் விரிவாக்கத்துடன் இணைந்து ரஷ்யாவிற்கு அச்சுறுத்தலாக உள்ளது.

 இது தவிர, மேற்கத்திய நாடுகளுடன் பிரச்சினைகளை சந்தித்து வரும் மற்றொரு நாடு சீனா. டிரம்ப் அரசாங்கத்தின் காலத்தில் சீனத் தயாரிப்புகளுக்கு வரிகளை அதிகரித்தது முதல்,  உள்நாட்டிலேயே பொருட்களை உற்பத்தி செய்ய அமெரிக்கா முயல்வது  வரையில், தானும் சுற்றி வளைக்கப்பட்டு சிக்க வைக்கப்பட்டிருப்பதாக சீனாவும் கருதுகிறது.  இவ்வாறு இரண்டு முகாம்கள்; ஒன்று பணக்கார மேற்கத்திய நாடுகள், மற்றது ரஷ்யா மற்றும் சீனாவை உள்ளடக்கியது. இது, விரைவில் பனிப்போராக வெளிப்படும்.

 1947 இல் தொடங்கிய பனிப்போர் கருத்தியல் ரீதியாக வேறுபட்ட இரு முகாம்களுக்கு இடையேயான போர்; முதலாளிகள் மற்றும் சோஷலிஸ்டுகள். இப்போது, உலக அளவில் மேலாதிக்கம் செய்ய விரும்புவதாகத் தோன்றினாலும் இரண்டு முகாம்களுமே முதலாளித்துவ முகாம்கள்.

இந்த போரின் காரணமாக, விரைவில் வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆகியவற்றில் இரண்டு தனித்தனி முகாம்கள் உருவாகும்.  

எவ்வாறாயினும், இந்த போரின் காரணமாக, விரைவில் வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆகியவற்றில் இரண்டு தனித்தனி முகாம்கள் உருவாகும். ரஷ்யா-சீனா முகாமின் மீது, அமெரிக்கா  தடைகள் விதித்துள்ள சூழலில்,  குறிப்பாக நிதித் தடைகள் விதித்துள்ள நிலையில் இந்த நேரத்தில் இயலக்கூடிய  ஒரே வாய்ப்பு இதுதான் எனத் தோன்றுகிறது.

சீனாவின் ஆர்வம் வெளிப்படையாகவே ரஷ்யாவிடம் இருப்பதால்,  இந்தப் பொருளாதாரத் தடைகள் காரணமாக உலகின் பிற பகுதிகளுடனான அவர்களின் வர்த்தகம் பாதிக்கப்படும். இவை அனைத்தின் விளைவாக, உலக அளவில் பெரும் நிதி மற்றும் வர்த்தகச் சிக்கல்கள் எதிர் வரப் போகின்றன.

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரண்டுமே உலகிற்கு சில முக்கிய பொருட்களை சப்ளை செய்யும் நாடுகள் ஆகும். ரஷ்யா உலகிற்கு கோதுமை போன்ற சில முக்கிய பொருட்களை வழங்குகிறது. உக்ரைன், கோதுமை மட்டும் அல்லாமல், உலகிற்கு சூரியகாந்தி எண்ணெய் மற்றும் உரங்களை சப்ளை செய்கிறது.

இந்த இரண்டு நாடுகளும் சில முக்கியமான கனிமங்களையும் வழங்கும் நாடுகளாக உள்ளன. ரஷ்யாவில் உள்ள பல்லேடியம் மற்றும் நியான் வாயு அந்நாட்டின் முக்கியமான ஏற்றுமதியாகும்.நமது மொபைல் போன்கள் மற்றும் கார்களை இயக்கும் எலக்ட்ரானிக் சிப் உற்பத்தி செயல்முறையில் நியான் வாயு முக்கிய பகுதியாகும்.

இதன் விளைவாக, எரிசக்தி விநியோகங்கள், உலோகங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் உரங்கள் ஆகியவற்றின் விலைகள்  குறைவதற்கே வாய்ப்பில்லாமல் உயர்ந்துள்ளன. ஏனெனில் போர் நீடிக்கும் என்றே தோன்றுகிறது.

அமெரிக்காவில் பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது, இந்தியாவில் மொத்த விலைக் குறியீட்டு எண் 10% உயர்ந்துள்ளது. நுகர்வோர் விலைக் குறியீடும் 6% உயர்ந்துள்ளது, இது கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக இந்திய ரிசர்வ் வங்கியின் சகிப்புத்தன்மை வரம்பாக இருந்து வருகிறது. 

கோவிட் பெருந்தொற்று அலைகளின் போது சீனாவில் விதிக்கப்பட்ட கடுமையான பொதுமுடக்கமானது பொருள் விநியோகத்தில் தடைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இது தவிர, கன்டெய்னர் தட்டுப்பாடு காரணமாக  கப்பல் சரக்குப் போக்குவரத்து கட்டணங்கள் உயர்ந்து. இந்தியாவிலும், உலக அளவிலும் பணவீக்கம் அதிகரித்துள்ளது.சாமானிய மக்களின் வருமானம் உயராத காரணத்தால்,  அவர்களது வாங்கும் சக்தி குறைவதற்கு இது  வழிவகுக்கிறது.பெருந்தொற்றானது,  ஊதியக் குறைப்பு மற்றும் வேலையின்மை ஆகிய இருமுனைத் தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட் டெல்டா அலை தாக்குதலின்போதும் ஆக்ஸிஜன் போன்ற பொருட்களின் விற்பனை கள்ளச் சந்தையில் அதிகரித்ததன் காரணமாகவும் நடுத்தர வகுப்பினர் தங்கள் சேமிப்புகளை எல்லாம் கரைத்துவிட்டனர்.

ரஷ்யா உக்ரைன் போர் – ஒடெசாவில் ஷெல் தாக்குதலுக்குப் பிறகு (Photo Credit by manhai – Flickr)

நுகர்வோர் உணர்வு தேக்க நிலையில் இருப்பதால், தேவை குறைவாகவே இருக்கும். இது முதலீடுகள் பாதிக்கப்படுவதற்கும், வளர்ச்சித் திறன் குறைவதற்கும் வழிவகுக்கும். இவை அனைத்தும் சேர்ந்து, உலக அளவிலும்  உள்ளூரிலும் இரண்டிலும்  இந்தியாவிற்கு  ஒரு நெருக்கடியை உருவாக்கும் என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

ரஷ்ய பொருளாதாரம் சுருங்கும்.அதற்கு அது எப்படி தீர்வு காணும்?ரஷ்யா மிகப்பெரிய வர்த்தக உபரியைக் கொண்டுள்ளது. ரஷ்யாவில் கம்பெனிகள் மூடப்படும். ரஷ்யர்கள் கைப்பற்றுவார்கள். மெக்டோனல்ஸ். ரஷ்யர்கள் அதைக் கைப்பற்றினர். மேற்கத்திய உலகம் மேலும் சுருங்கும். ரஷ்யா இதுபோன்ற ஒரு பெரிய பிரச்சனையை எதிர்கொள்ளாது.  போர் பயனற்றது. நகரங்கள் அழிந்து வருகின்றன. வல்லரசுகளின் அதிகார விளையாட்டுக்கு, மக்கள் துன்பப்படுகின்றனர். உக்ரைன் நடுநிலையாக இருக்கட்டும். ரஷ்யர்கள் வெளியேறுவார்கள். போர் முடிவுக்கு வரும். ஆனால் இதைச் செய்யக்கூடிய சில அரசியல்  மேதைகள் நமக்குத் தேவை. போர் யாருக்கும் நல்லதல்ல.

மேலும் படிக்க:

வெளிநாட்டில் மருத்துவக் கல்வி: மாணவர்களின் கலைந்து போன கனவு!

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க இலங்கை அரசுக்கு ஐஎம்எஃப் கடன் உதவி கிடைக்குமா?

கேள்வி:  இந்த நிலவரத்தில் இந்தியாவுக்கு  உள்ள வாய்ப்புகள் என்ன? நாம் இதை சரியாக கையாள்கிறோமா அல்லது இன்னும் சிறப்பாக செய்ய முடியுமா?

 அருண்குமார்: ஆம், ரஷ்யாவுடன் நாம் செய்து கொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்களால் இந்தியா ஒரு கடினமான சூழ்நிலையில் உள்ளது. நமது 60% ஆயுத சப்ளைகளுக்கு ரஷ்யாதான் இன்னும் பொறுப்பாக உள்ளது. மேலும் நமது சுகோய் விமானத்திற்கு குறிப்பிட்ட பொருட்கள் தேவை. நாம் தயாரித்து வருகிறோம் என்றாலும் அதற்கான உரிமத்தை ரஷ்யாவிடம் இருந்துதான் பெற்றுள்ளோம். 

எல்லையில் சீனா இருப்பதால், நமக்கு அனைத்து உதவிகளும் தேவை. நாட்டைப் பாதுகாப்பதில் மேற்கு நாடுகளையும் ரஷ்யர்களையுமே இந்தியா சார்ந்துள்ளது. இந்த இரண்டையும் சார்ந்திருப்பதால், இந்தியா எந்த பக்கமும் சாயவில்லை, ரஷ்யாவின் நடவடிக்கைகளை விமர்சிக்கவில்லை.  நடுநிலை வகிக்கிறது. நாம் நடுநிலைக் களத்தில் செயல்படுகிறோம், இது ஒட்டுமொத்தத்தில் நாட்டின் மீதான நம்பிக்கையை குறைக்கும்.

பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அறிமும் ஆகியவற்றின் விளைவுகளால், அமைப்புசாரா துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  

 

சீனாவிற்கு எதிராக நம்மிடம் இருந்து உதவி அல்லது ஆதரவை விரும்பும் போது அமெரிக்கா நம்மை நம்பகமான பங்காளியாக பார்க்காது. இதற்கும் மேலாக, நமது நாட்டிற்கான ஆயுதங்கள் மற்றும் விநியோகங்களைக் குறைக்குமாறு  ரஷ்யாவுக்கு சீனா அழுத்தம் கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யா பெட்ரோலியத்தை மலிவாகவும், போருக்கு முந்தைய விலையை விட $25க்குக் குறைவாகவும் சப்ளை செய்வது இந்த நேரத்தில், நமக்கு சாதகமாகும். இதனால் ரஷ்யாவில் இருந்து இந்தியா அதிக அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. நாம் எவ்வளவு அதிகமாக வாங்குகிறோமோ, அவ்வளவு அதிகமாக உபரியை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

தற்போது, நம்மை தொல்லைக்கு உள்ளாக்கும் மற்றொரு பிரச்சினை, நமது எல்லையில் நடக்கும் மோதல். இந்தியா வலுவிழந்து இருப்பதைப் பார்த்து, சீனா அழுத்தம் கொடுக்க முடிவு செய்தால் நமது பாதுகாப்புச் செலவுகள் உயரக்கூடும். இதன் விளைவாக, நாட்டின் வளர்ச்சிக்கான செலவுகள் கணிசமாகக் குறையும். நமது பொருளாதாரம் மந்தமானால் வரவு செலவுத் திட்ட நெருக்கடிகள் ஏற்படலாம், நமது வரி வருவாய் வசூல் குறையும்.

 கேள்வி:  இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு, தேவையைத் தூண்டுவதற்கும் நுகர்வோர் உணர்வை உயர்த்துவதற்கும் இந்தியா ஏதாவது செய்ய முடியுமா?

 அருண்குமார்: பெருந்தொற்று தாக்குவதற்கு முன்பே நமது வளர்ச்சி விகிதம் 8% லிருந்து 3.1% ஆகக் குறைந்துவிட்டது.அமைப்புசாராத் துறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் காரணமாக தேவைக்கு பற்றாக்குறை ஏற்பட்டதுதான் இதற்குக் காரணம்.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆனார்கள், ஏழைகள் மேலும் ஏழைகள் ஆனார்கள். இதனால்தான், உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) தரவுகளில் அமைப்புசாரா துறையை தனியாக சுதந்திரமாக கணக்கிடவில்லை என்பது எனது வாதம். அமைப்புசாரா துறை மற்றும் அமைப்பு ரீதியான துறை ஆகிய இரண்டும் ஒரே விகிதத்தில் வளர்ந்து வருவதாக ஒரு அனுமானம் செய்யப்படுகிறது. இருப்பினும், இது உண்மை இல்லை. பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அறிமும் ஆகியவற்றின் விளைவுகளால், அமைப்புசாரா துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 கேள்வி:  எனவே இதை சரிசெய்ய எந்த வழியைப் பரிந்துரைக்கிறீர்கள்?

 அருண்குமார்: பெருந்தொற்றுக்கு முன்பு நமது பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிந்து கொண்டிருந்தது. தேவை குறைவாக இருந்ததால், எட்டு காலாண்டுகளில் நமது வளர்ச்சி விகிதம் 8 சதவீதத்தில் இருந்து 3.1 சதவீதமாக குறைந்தது. அமைப்பு சாரா துறை பாதிக்கப்பட்டது.ஏற்றத் தாழ்வு அதிகரித்து வந்தது. அது நீடிக்கிறது. இந்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பு, உச்சியில் உள்ள 20% பேர் வருமானம் ஈட்டியதாகவும், கீழே உள்ள 60% பேர் வருமானத்தை இழந்ததாகவும் காட்டியது. 

நமது உள்நாட்டு மொத்த உற்பத்தி தரவுகளில், அமைப்புசாரா துறைகளை நாம் தனியாக  கணக்கிடவில்லை. அமைப்புசாரா துறைகளும் அமைப்புசார்ந்த துறைகளும் ஒரே விகிதத்தில் வளர்ந்து வருவதாக அவர்கள் யூகித்துக் கொண்டனர். அது உண்மை இல்லை.

முத்ரா கடன்

தமிழ்நாட்டில் உள்ள ஒரு நர்சரியில் சுயஉதவி குழுவைச் சேர்ந்த பெண்கள் (Photo Credit: Self Help Group Nursery by Project GreenHands- Flickr)

குறிப்பாக ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) நெருக்கடி மற்றும் பலவற்றால் அமைப்புசாரா துறை பாதிக்கப்பட்டுள்ளது: ஐந்து ஆண்டுகளில் நான்கு பெரிய அதிர்ச்சிகள். அவர்களின் வளர்ச்சி 0% ஆகும். இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை நாம் ஓரே பிரிவுக்குள் அடைத்திருக்கிறோம். ஆனால் நம்நாட்டில் 6 கோடி குறுந் தொழில் நிறுவனங்கள் உள்ளன. 6 லட்சம் சிறு தொழில் மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. எந்தக் கொள்கையும் குறுந் தொழில் துறையை விட சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைக்கே  அதிகப் பயன் தருகிறது. குறு, சிறு, நடுத்தரத் தொழில் (MSME) துறையில் 97.5%  ஆக உள்ள குறுந் தொழில் துறை (micro sector)  வீழ்ச்சி அடைந்துள்ளது.

2015-16ல் 46% ஆக இருந்த தொழிலாளர்கள் எண்ணிக்கையின் பங்கேற்பு 40% ஆகக் குறைந்துள்ளது. இதன் பொருள், 15 முதல் 64 வயதுக்கு உள்பட்ட பிரிவைச் சேர்ந்த பலர் வேலை இல்லாததால் தொழிலாளர் அணியை விட்டு வெளியேறியுள்ளனர் என்பதாகும். ஏற்கனவே,தொழிலாளர்கள் எண்ணிக்கை  46% என்பதே மிகவும் குறைவானதாகும். சீனா மற்றும் பிரேசில் நாடுகளில் இது 60% ஆகும். இவர்களில் பெரும்பகுதியினர் அமைப்புசாரா, விவசாயம் சாராத துறைகளில், அதாவது குறுந் தொழில் துறையில் பணிபுரிகின்றனர்.குறுந் தொழில் (மைக்ரோ) துறைக்கு ஆதரவு தேவை.

அமைப்புசாரா துறையினரின், குறுந்தொழில் துறையினரின் கைகளில் அரசு பணத்தை தர வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்டங்களை வலுப்படுத்த வேண்டும். நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் தொடங்க வேண்டும்.  

அமைப்புசாரா துறையினரின், குறுந்தொழில் துறையினரின் கைகளில் அரசு பணத்தை தர வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்டங்களை வலுப்படுத்த வேண்டும். நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் தொடங்க வேண்டும். கல்வி, சுகாதாரம், குடிநீர் போன்றவற்றில் பரவலாக்கப்பட்ட திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

நெடுஞ்சாலைகள் போன்ற பெரிய மையப்படுத்தப்பட்ட திட்டங்களில் முதலீடுகளை அரசாங்கம் ஊக்குவித்துள்ளது. இவை தானியங்கி பெரிய திட்டங்கள். முன்பெல்லாம் பெரிய திட்டங்கள் நிறைய பேருக்கு வேலை கொடுத்த நிலையில், இப்போது பெரிய புல்டோசர்களை வைத்துக் கொண்டு ஐந்து அல்லது பத்து பேர் நெடுஞ்சாலைத் திட்டங்களில் வேலை செய்கிறார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை அளிப்பதை விட இது நடக்க வேண்டும். 2019 -இல் கார்ப்பரேட் வரி விகிதம் கடுமையாகக் குறைக்கப்பட்டபோது, முதலீடு செய்வதற்குப் பதிலாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் கடனில் இருந்து விடுபட்டன, ஆனால் மூலதன முதலீட்டை அதிகரிக்கவில்லை. தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டுமே அதிக முதலீடு வந்துள்ளது ஆனால் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் இல்லை.குறுந் தொழில் துறை (மைக்ரோ துறை) முக்கியமானது, ஏனெனி்ல் அது தேவையை உருவாக்குகிறது.

Share the Article

Read in : English

Exit mobile version