Site icon இன்மதி

தேசிய, தமிழ்நாட்டு நலனுக்காக ஸ்டெர்லைட் ஆலை விற்பனை: நிர்வாகம் விளக்கம்

Sterlite by Saurabh Verma -Flickr

Read in : English

“நாட்டின் நலன் கருதியும் தமிழக மக்களின் நலன் கருதியும் , நாட்டில் அதிகரித்து வரும் காப்பர் தேவையை சமாளிக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையையும் அதன் சொத்துகளையும் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளைத் தேடி வருகிறோம்” என்று வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள நவீன ஸ்மெல்டர் அண்ட் ரிஃபைனிங் காம்ப்ளெக்ஸ் விற்பனை தொடர்பாக வேதாந்தா நிறுவனம் ஊடகங்களில் விளம்பரம் வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக ஊடகங்களில் எழுப்பட்ட கேள்விகளுக்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் விளக்கம் அளித்து செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.

“தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை தேசியச் சொத்து. நமது தேசிய காப்பர் தேவையில் 40 சதவீதத்தை இந்தத் தொழிற்சாலை உற்பத்தி செய்கிறது. காப்பர் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைவதற்கு இந்த ஆலை முக்கியப் பங்கு வகிக்கிறது” என்று அந்த செய்திக் குறிப்பில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் நலன் கருதியும் தமிழக மக்களின் நலன் கருதி, ஸ்டெர்லைட் ஆலையையும் அதன் சொத்துகளையும் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளைத் தேடி வருகிறோம் என்று வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது

மேலும் படிக்க:

விற்பனைக்கு வருகிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை!: பெயர் மாறினாலும், பிரச்சினை தீருமா?

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் துவங்கினால் விரிவாக்கத்துக்கு இடமிருக்குமா?  

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு

“ஸ்டெர்லைட் நிறுவன காப்பர் உற்பத்தி என்பது வேதாந்தா நிறுவனத்தின் காப்பர் வர்த்தகத்தில் முக்கியமானது. 1996லில் இந்த ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டதிலிருந்து காப்பர் உற்பத்தி சீராக வளர்ச்சி அடைந்து, நாட்டின் காப்பர் உற்பத்தியில் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இந்தியாவின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை ஸ்டெர்லைட் வழங்கி வந்தது. தூத்துக்குடியில் உள்ள ஸ்மெல்டர் பிரிவு ஆண்டுக்கு 400,000 மெட்ரிக் டன் காப்பர் உற்பத்தித் திறன் கொண்டது” என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கடந்த 20 ஆண்டுகளாக வேதாந்தா நிறுவனம் தேசிய கட்டமைப்புக்கு முக்கியப் பங்களித்து வருகிறது. ஆளுமை மற்றும் வளங்குன்றா வளர்ச்சி ஆகியவை வேதாந்தா நிறுவனத்தின் முக்கிய யுக்திகளில் ஒன்று. கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் 2050க்குள் அதை ஜீரோ என்ற நிலைக்குக் கொண்டு வருவதற்கும் வேதாந்தா நிறுவனம் உறுதி கொண்டுள்ளது. சமூக தாக்கத் திட்டத்தின் கீழ் கல்வி, சுகாதாரம், பெண்களுக்குத் தொழில் திறன்களை அளித்து அதிகாரமிக்கவர்களாக்குதல் போன்ற சமூக நலத் திட்டங்களுக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது” என்று வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டிலிருந்து செயல்படாமல் இருக்கும் காப்பர் ஸ்மெல்டர் பிரிவை மீண்டும் திறப்பது குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்ய உள்ளது. அது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முன்னணியில் இருப்பதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இயற்கை வளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆளுமை குறித்து ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் கடந்த காலச் செயல்பாடுகள், சில முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளன. அத்துடன், சுற்றுச்சூழல் மாசு, பாதுகாப்பு குறித்து மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

2018ஆம் ஆண்டிலிருந்து செயல்படாமல் இருக்கும் காப்பர் ஸ்மெல்டர் பிரிவை மீண்டும் திறப்பது குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்ய உள்ளது. அது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, கொரானா காலத்தில் நாட்டின் ஆக்ஸிஜன் தேவையைக் கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் ஜெனரேஷன் பிரிவு செயல்படுவதற்கு அனுமதி அளித்தது. அத்துடன், ஆக்ஸிஜன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க நிபுணர் குழுவையும் நீதிமன்றம் ஏற்படுத்தியது.

Share the Article

Read in : English

Exit mobile version