Site icon இன்மதி

வாசிப்பில் உலக சாதனை நிகழ்த்தும் தமிழகப் பள்ளிக் கல்வி!

பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தொகுதியான திருவெறும்பூரில் ஜூன் 1ஆம் தேதி வாசிப்பு மாரத்தானை தொடங்கி வைத்தார்

Read in : English

தமிழகப் பள்ளிக் கல்வி மாணவர்களிடம் வாசிப்பை மேம்படுத்துவதில் புதிய திட்டத்தை தமிழகப் பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்த உள்ளது. கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் விட்டுப்போய் இடைநின்ற பள்ளிக்கல்வியில் மாணவ, மாணவியருக்கு தொடர்ச்சி ஏற்படுத்த தன்னார்வலர்கள் தமிழக உதவியுடன் பள்ளிக் கல்வித்துறை எடுத்த சீரமைப்பு கல்வி முயற்சி நிறைவுக்கு வருகிறது.  இதையொட்டி, கூகுள் செயலியை. பயன்படுத்தி, வாசிப்பை மேம்படுத்தும் உலக சாதனை ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டுள்ளது பள்ளிக்கல்வித் துறை.

ஊரடங்கு காலத்தில், தமிழகத்தில் பள்ளிக் கல்வி கடும் பாதிப்பு அடைந்தது. மாணவ, மாணவியர் வீட்டில் அடைந்ததால், கற்பித்தல் நடைமுறை நிறைவேறவில்லை. இதனால் கல்வி தொடர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டது. இதை சீரமைக்கும் முயற்சிகள் நடந்த. தமிழக பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இந்த முயற்சியில் முன் நின்றன.

கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ள செயலியில் கதை வாசிப்பு நிகழ்வை நடத்துகின்றனர் மாணவ, மாணவியர். இந்த செயலி, மாணவர்கள் சரியாக வாசிக்கும் பதிவை ஏற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.  

பகுதி அளவில் மாணவ, மாணவியரை இணைத்து, வீதி வகுப்பறை, சிட்டுக்கள் மையம் என துவங்கி, விளையாட்டாக கற்பித்து அதன் மூலம் கல்வியில் தொடர்ச்சியை ஏற்படுத்த முயன்றன. ஆரம்ப மற்றும் நடுநிலை வகுப்பில் படித்த மாணவ, மாணவியர் கல்வியில் மிகவும் பின்னடைவு  ஏற்பட்டிருந்ததை தேசிய அளவிலான ஆய்வறிக்கைகள் பல உறுதி செய்தன. இதையடுத்து இந்த பின்னடைவை, தன்னார்வலர்கள் மூலம் சரி செய்ய  முன் வந்தது, தமிழக பள்ளிக்கல்வித்துறை. இதற்காக, 1.5 லட்சம் பேர் தமிழகம் முழுதும் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாதுகாப்பு  இயக்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அகரம் பவுண்டேஷன், எய்டு இந்தியா போன்ற சமூக நல அமைப்புகளும் இதில் உதவ முன் வந்தன.

இதற்கான திட்டம் உருவாக்கப்பட்டது. அதிகம் பாதிக்கப்பட்டிருந்த, துவக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவ, மாணவியருக்கு, வாரம் ஆறு மணி நேரம் பயிற்சி அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, மாணவ, மாணவியர் வசிக்கும் பகுதிகளில்,  20 பேர் கொண்ட குழுக்கள் உருவாக்கப்பட்டன. அந்த குழுக்களில் இருந்த மாணவ, மாணவியருக்கு, கல்வியில் தொடர்ச்சியை ஏற்படுத்த விளையாட்டு முறையில் பயற்சி அளிக்கப்பட்டது. இதற்காக  பல்வேறு கற்றல் உபகரணங்கள் உருவாக்கப்பட்டன. உள்ளூர் வளம் மற்றம் அறிவு இதற்கு பயன்படுத்தப்பட்டது. இவற்றை ஒருங்கிணைத்து,  வாரத்துக்கு, ஆறு மணி நேரம் என்ற அடிப்படையில் கற்றல் பயிற்சி அமைந்தது. தொடர்ச்சியான இந்த செயல்பாட்டால், கற்றலில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்த வாசிப்பு நிகழ்வில், இல்லந்தேடி கல்வி நிகழ்ச்சியில் பயிற்சி பெற்ற, 37 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். கற்பித்தலில் உலக அளவில் பெரும் சாதனையாக இது நிரூபிக்கப்படவுள்ளது.

அடுத்த கல்வி ஆண்டு துவங்க உள்ள நிலையில், இல்லந்தேடிக் கல்வி என்ற தன்னார்வலர்கள் கொண்ட பயிற்சி நடைமுறை இறுதிக்கட்டத்தை எட்டியுளது. இந்த திட்டத்தால் பெற்ற பலனை உலக அளவில் பறைசாற்ற அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த பயிற்சியின் வெற்றியை நிரூபிக்கும் விதமாக, மாணவ, மாணவியரின்  ரீடிங் மாரத்தான் என்ற வாசிப்பு நிகழ்வு ஒன்று நடத்தப்படுகிறது.

இதற்காக, கூகுள் நிறுவனத்துடன் இணைந்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ள செயலியில் கதை வாசிப்பு நிகழ்வை நடத்கின்றனர் மாணவ, மாணவியர். இந்த செயலி, மாணவர்கள் சரியாக வாசிக்கும் பதிவை ஏற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழையான வாசிப்பை திருத்தி, உற்சாகப்படுத்தி கற்பிக்கும். சிறப்பான வாசிப்பை வரவேற்று மேம்படுத்தும்.

இந்த வாசிப்பு நிகழ்வில், இல்லந்தேடி கல்வி நிகழ்ச்சியில் பயிற்சி பெற்ற, 37 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். ஒவ்வொருவரும், வாசிப்புதிறனை, 10 நிமிடங்கள் செயலியில் நிகழ்த்துவர். கற்பித்தலில் உலக அளவில் பெரும் சாதனையாக இது நிரூபிக்கப்படவுள்ளது. இது உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டு, கற்றல் நடைமுறையில் பின்தங்கியுள்ள நாடுகளுக்கு மாதிரியாக இருக்கும். இந்த நிகழ்வுக்கு பின், இல்லந்தேடி கல்வி என்ற கற்பித்தல் நடைமுறை வேறு செயல்முறைக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

Share the Article

Read in : English

Exit mobile version