Site icon இன்மதி

கார்த்திக் கோபிநாத் கைது: இனி கிரவுட் ஃபண்டிங் அடிவாங்குமா?

Read in : English

கார்த்திக் கோபிநாத் என்னும் யூடியூபர், பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் கோயில் சிலைகளைப் ’புதுப்பிக்கும்’ நோக்கோடு கூட்டுநிதித் திரட்டல் (கிரவுட் ஃபண்டிங்) மூலம் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நிதியைத் திரட்டியதும், பின் அரசு அவரை கைது செய்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் எழுப்பியிருக்கும் ஓர் அசெளகரியமான கேள்வி இதுதான்: இந்தக் கூட்டுநிதி மோசடி கூட்டுநிதித் திரட்டலுக்கு விடப்பட்ட ஓர் அச்சுறுத்தலா?

வலதுசாரி யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தின் மீதான இந்த வழக்கு குற்றச்சாட்டு அளவிலே இருக்கிறது. அரசின் அனுமதி இல்லாமலே அவர் சிறுவாச்சூர் காளியம்மன் கோயில் பெயரைப் பிரயோகித்திருக்கிறார் என்பதுதான் அவர்மீதான குற்றச்சாட்டு. எனினும் இணையதளம் மூலம் சமூக இலட்சியங்களுக்காகச் செய்யும் கூட்டுநிதித் திரட்டல் என்னும் கருத்தாக்கமே இகழ்ச்சிக்கு ஆளாகிவிட்டது. அரசு நிர்வகிக்கும் ஒரு கோயில் பெயரையும், ஒரு தனியார் கோயில் பெயரையும் சொல்லி நிதித் திரட்டும் முயற்சியில் இறங்கினார் என்பதற்காக கார்த்திக் கோபிநாதன் கைது செய்யப்பட்டிருக்கிறார். நன்கொடையாக ரூ. 33 இலட்சம் திரட்டிய கார்த்திக் கோபிநாதன் மாநில பாஜக நிர்வாகிகளின் ஆதரவைப் பெற்றிருக்கிறார்.

யூடியூபில் ‘இளைய பாரதம்’ என்ற பெயரில் ஓர் அமைப்பை நடத்தும் கார்த்திக் கோபிநாதன் கோயில் சிலைகளுக்கான நிதிகேட்கும் பரப்புரையை மிலாப் இணையதளத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கினார். அதில் தவறேதும் நிகழவில்லை என்று கூறுகிறார் அவர். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயிலுக்கு நன்கொடைகள் பெறுவது சம்பந்தமாக அனுமதி கேட்டு 2021 டிசம்பரில் கார்த்திக் கோபிநாதன் விண்ணப்பித்திருந்தார் என்று ஊடகச்செய்திகள் சொல்கின்றன. நம்பிக்கைத் துரோகம், மோசடி மற்றும் கணினியைப் பயன்படுத்தி வேறொரு ஆளாய்த் தன்னை காட்டிக்கொள்ளுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரைக் கைது செய்ய தீர்மானித்தது அரசு.

மோசடிக்காரர்களுக்கான களமிது
கார்த்திக் கோபிநாதன் வழக்கு எப்படி முடிவடைந்தாலும் சரி, இணையதள கூட்டுநிதித் திரட்டலைப் பற்றிய கேள்வியை இந்தச் சர்ச்சை மீண்டும் எழுப்பியிருக்கிறது. என்றாலும் இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் இம்மாதிரி பிரதானமான மோசடி வழக்குகள் இருக்கின்றன.

கிரவுட் ஃபண்டிங் மோசடியின் ஆகச்சிறந்த உதாரணம் வீடில்லாத ஒரு மேனாள் அமெரிக்க இராணுவ ஊழியர் செய்ததுதான். அபலையான ஒரு பெண்ணைக் காக்க வேண்டும் என்று சொல்லி அவர் நடத்திய கூட்டுநிதித் திரட்டல் பரப்புரையில் அவருக்குக் கிட்டிய மொத்த தொகை டாலர் 4,00,000. ஒரு தம்பதியர் செய்த இந்த ’மனிதாபின நடவடிக்கை’ வெறும் மோசடி என்று கண்டுபிடிக்கப்பட்டு நிதித்திரட்டுத் திருட்டில் ஈடுபட்ட மூவர் மீது வழக்குப் பாய்ந்தது; அவர்களுக்குத் தண்டனையும் கிடைத்தது.

அரசு நிர்வகிக்கும் ஒரு கோயில் பெயரையும், ஒரு தனியார் கோயில் பெயரையும் சொல்லி நிதித் திரட்டியதிற்காக கார்த்திக் கோபிநாதன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தியாவில் கிரவுட் ஃபண்டிங் தளமான கெட்டோவில், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளில் செய்யப்படும் சிகிச்சைக்களுக்காகவும், வழங்கப்படும் மருந்துகளுக்காகவும் கிரவுண்ட் ஃபண்டிங் முயற்சி நடந்தது. இதுமாதிரி நிதிகேட்டு இணையத்தில் கொடுக்கப்படும் வேண்டுகோள்கள் மற்ற நாடுகளிலும் சர்வ சாதாரணம். குறிப்பாக அமெரிக்காவில் இது மிகவும் சகஜம். அந்த நாட்டில்தான் காப்பீடு அடிப்படையிலான விலையுயர்ந்த மருத்துவ அமைப்பு இருக்கிறது; அதுபோன்ற மருத்துவ அமைப்புதான் இந்தியாவிlulm இருக்கிறது.

இணையதளங்கள் செல்வத்தைக் குவிப்பது பரப்புரைகள் வளர்வதைப் பொறுத்தது. கெட்டோ இணையதளம் அரசுசாரா தொண்டுநிறுவனங்களுக்கும், தனிமனிதர்களுக்குமான அடிப்படை பரப்புரைகளுக்கு பூஜ்ய சதவித வெற்றிக் கட்டணம் வசூலிக்கிறது; சிறப்புப் பரப்புரைகளுக்கு ஐந்து சதவீத வெற்றிக் கட்டணம் வசூலிக்கிறது; எல்லோருக்கும் உள்ளூர், வெளிநாடுகள் வழியாக வருகின்ற நன்கொடைகளுக்கு மூன்று சதவீதம் கட்டணமும் வசூலிக்கிறது. இதெல்லாம் கெட்டோவின் இணையதளம் தருக்கின்ற தரவுகள். அதில் ‘ப்ளஸ்’ மற்றும் ‘ஆம்பிளிஃபை’ என்ற தேர்வுப்பிரிவு இருக்கிறது. கூட்டுநிதித் திரட்சிக்கும் வழிகாட்டும் ஒரு நிபுணரும் உள்ளடக்கப் படைக்கத் தேவையான உதவியும் அதில் இருக்கின்றன. மோசடிகளைத் தடுக்கும் கட்டமைப்பு மற்றும் நிதிகளின் அளவு ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளுக்கு கெட்டோ விடைகள் தரவில்லை. அப்படி ஒருவேளை தந்தால் இந்தக் கட்டுரை அந்தத் தகவல்களால் மேலும் செழுமைப்படுத்தப்படும்.

இந்த எழுத்தாளரின் கேள்விகளுக்கு மிலாப் தந்திருக்கும் பதில் பின்வருமாறு: “மிலாப் முழுக்க இலவசமான ஃபண்ட்ரெய்சிங் தளம். கட்டணம் இலவசம். நன்கொடையாளர்கள் (தானம் தரும்போது) கொடுக்கின்ற டிப்ஸ் மற்றும் பரப்புரை அமைப்பாளர்கள் (நிதியை எடுக்கும்போது) தருகின்ற டிப்ஸ் – இவற்றை நம்பியே நாங்கள் இருக்கின்றோம். என்றாலும் அந்த டிப்ஸ் கட்டாயமல்ல; அவர்களாகவே விருப்பப்பட்டு தருவது.

நிதி திரட்டுபவர்களின் சட்டப்பூர்வ அந்தஸ்தைப் பரிசோதிக்க மிலாப்பிடம் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உண்டு. பரிசோதனையின் முதல்கட்டத்தில் அரசுதந்த அடையாள அட்டை, கைபேசி எண், ஆகியவை சோதிக்கப்படும். பின்பு பரப்புரை மேலாளர் தொலைபேசி முலம் அழைக்கப்படுவார்; நிதி திரட்டுபவரின் பின்னணி விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்கள் ஆகியவவை திரட்டப்படும்.

எங்கள் ஊழியர்கள் அமைப்பாளர்களுடன், பயனாளிகளுடன், நன்கொடையாளர்களுடன் மற்றும் விரிவாக்கப்பட்ட வட்டாரத்துடன் இணைந்து நெருக்கமாக இயங்குகிறார்கள். நிதிதிரட்டும் பரப்புரைகள் சரியாக பிரதிநிதித்துவப் படுவதை நாங்கள் உறுதிசெய்கிறோம். நிதிதிரட்டுபவர்மீது லேசான சந்தேகம் எழுந்தால், மேலும் சில சாட்சியங்களைக் கேட்டு அவரைப் பற்றி மேலும் புலன்விசாரணை செய்கிறோம். அவர் மோசடி செய்ய விழைகிறார் என்று தெரிந்தால், அவரை நீக்கிவிடுகிறோம் அல்லது தடை செய்து விடுகிறோம்.”

கோபிநாத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த நன்கொடைகளின் விதிபற்றி இன்மதி எழுப்பியிருந்த கேள்விக்கு, ஒரு மிலாப் பிரதிநிதி சொன்னது இது: “கார்த்திக்  திரட்டிய நிதியை நாங்கள் பத்திரமாக வைத்துள்ளோம். நாங்கள் நம்பிக்கைக்குரியவர்கள். அதிகாரிகள் இந்த வழக்கில் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதற்காகக் காத்திருக்கிறோம். இதற்கிடையில் தங்களின் நன்கொடைகள் எப்படி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை முடிவு எடுக்க வேண்டிய முதல் அதிகாரம் எங்களின் நன்கொடையாளர்களிடமே இருக்கிறது. அவர்கள் பணத்தைத்  திருப்பிக் கேட்டால், நாங்கள் உடனே திருப்பிக் கொடுத்திடுவோம். நன்கொடையாளர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லி ஒரு பயனாளியோ அல்லது அமைப்பாளரோ எழுத்துப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்தால், நாங்கள் உடனே திருப்பிக்க் கொடுத்திடுவோம்.”

மிலாப், கெட்டோ போன்ற அர்ப்பணிக்கப்பட்ட இணைய தளங்களிலும், முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களிலும் நிகழ்ந்த கூட்டுநிதித் திரட்டல் அனுபவம் சொல்வது இதுதான்: பரிசோதித்தல் முக்கியமானது.  

கட்டுப்பாடு குறித்து அமெரிக்காவின் கருத்து
இணையத்தில் கிரவுட்ஃபண்டிங்கில் மோசடி நடக்கும் சாத்தியம் இருப்பதால், இந்திய சட்ட இதழில் வெளியான கட்டுரையில் நாட்ரே டேம் சட்டப் பள்ளியின்ஹ் லாயிடு ஹிட்டோஷி மேயர் ஒரு கட்டுப்பாட்டு கட்டமைப்பை முன்மொழிகிறார்: “முதலில், திரட்டப்படும் நிதி பயனாளிகளைப் போய்ச்சேருவதை உறுதிப்படுத்திக்கொள்ள உதவும் வகையில், அவர்களைப் பற்றிய அறிவிப்பை வெளியிடுவதைக் கட்டாயமாக்க வேண்டும். இரண்டாவது, ஒப்பீட்டளவில் உயர்ந்த எல்லையைத் தாண்டிய பரப்புரைகளின் சிறிய துணைப்பகுதிக்கான கட்டுப்பாட்டாளர்கள் பற்றிய அறிவிப்பைக் கட்டாயமாக்க வேண்டும். அதன்மூலம் கருணைக் கூட்டுநிதித் திரட்டலின் அளவு, வளர்ச்சி பற்றிய தகவலைப் பெறமுடியும். மேலும் ஆகப்பெரிய பரப்புரைகளில் எழும் பிரச்சினைகளைத் தீர்க்க உதவி செய்யமுடியும்.”

கலிஃபோர்னியா மாநிலம் கிரவுட்ஃபண்டிங்கைக் கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவந்திருக்கிறது. நிதிதிரட்டும் கருணை நிறுவனங்களும், அவற்றின் பரப்புரைகளை ஏற்றுநடத்தும் இணைய தளங்களும் மாநிலத்தின் கருணை அறக்கட்டளைகள் பதிவேட்டு அமைப்பிடம் அவ்வப்போது அறிக்கை தரவேண்டும் என்று சொல்லும் அந்தச் சட்டம் 2023 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவிருக்கிறது.

என்றாலும் உண்மையானா சொந்த பிரச்சினைகளைக் கடக்க பலருக்கு உதவும் ஓர் அமைப்பை அதீதமான கட்டுப்பாடு அழித்துவிடக்கூடாது என்ற அக்கறையும் இருக்கிறது. அதே சமயம் மோசடிக்கு எதிரான கவனம் இல்லாமல் போனால், கூட்டுநிதித் திரட்டலுக்குக் கெட்ட பெயர் வந்துவிடும். நன்கொடை தருபவர்கள் தயங்க ஆரம்பித்து விடுவார்கள்.

பாலிசி அண்ட் இண்டர்நெட்டில் (2018) மார்கோ ஜெனோன் மற்றும் ஜெரமி சிண்டர் மருத்துவக் காரணங்களுக்காகச் செய்யப்படும் கூட்டுநிதித் திரட்டலை ஆய்வு செய்திருக்கிரார்கள். பெரும்பாலும் ஒருவர் தன்நோயை மிகைப்படுத்தி பொய்யாக நிதிதிரட்டுவதையும், மற்றொருவரின் நோயை மிகைப்படுத்தி நிதி கேட்பதையும், ஆள்மாறாட்டத்தையும், நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதையும் அந்த ஆய்வு கண்டுபிடித்திருக்கிறது.

ஒரு மேனாள் அமெரிக்க இராணுவ ஊழியர் அபலையான ஒரு பெண்ணைக் காக்க வேண்டும் என்று சொல்லி கூட்டுநிதித் திரட்டல் பரப்புரை செய்து டாலர் 4,00,000 சம்பாதித்தார். ஒரு தம்பதியர் செய்த இந்த ’மனிதாபின நடவடிக்கை’ வெறும் மோசடி என்று கண்டுபிடிக்கப்பட்டது

யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனின் ஆய்வாளர்கள் அச்சுக்கு முன்பான ஆய்வுக்கட்டுரையில் (2020), மோசடியைத் தடுக்கும் நடவடிக்கைகள் இணையதளக் கட்டமைப்புக்குள்ளே இயல்பாகவே பொருத்தி வைக்கப்பட வேண்டும் என்கிறார்கள். நிரூபிக்கப்பட்ட மோசடி வழக்குகளில் பயன்படுத்திய இயல்பான மொழியை உள்ளூடுருவி ஆய்வு செய்யும் வசதியையும், படிம ஆய்வையும் பயன்படுத்தலாம் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். நன்கொடைகளில் பிளாக் செயின் தொழில்நுட்பத்தைக் கொண்டுவந்தால் நன்கொடையாளர்களுக்குக் கண்காணிப்பு மற்றும் கட்டுப்படுத்தும் வசதிகள் கிடைக்கும். நிதி போகும் பாதையை அவதானிக்க முடியும்.

வளரக்கூடியதுதான்
கடந்த ஆண்டுகளில் நிலவிய போக்குகளையும், செயல்முறையின் எளிய தன்மையையும் பார்க்கும்போது, மனிதாபினக் காரணங்களுக்கான இணையதள நுண்நன்கொடைகள் மேலும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் கிரவுட்ஃபண்டிங் 2014-ல் டாலர் 597 மில்லியனாக இருந்து 2017-ல் டாலர் 17.2 பில்லியனாக உயர்ந்திருக்கிறது என்று யூசிஎல் கட்டுரை ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

இந்தியாவில் கோவிட் ஆண்டுகளில் நிகழ்ந்த கூட்டுநிதித் திரட்டல் பற்றிய தரவுகளை மிலாப் தர மறுத்துவிட்டது. ஆனால் 46,975-க்கும் மேலான மருத்துவ நிதிதிரட்டல் பரப்புரைகள் அந்த இணையதளத்தில் நிகழ்ந்ததாகவும், 52 இலட்சம் நன்கொடைகள் மூலம் ரூ.1,046 கோடி திரட்டப்பட்டதாகவும் மிலாப் சொன்னது. சமூக மற்றும் இனக்குழுக்கள் காரணங்களுக்காக, 28,493-க்கும் மேலான நிதிதிரட்டல் பரப்புரைகள் நிகழ்ந்ததாகவும், 18 இலட்சம் நன்கொடைகள் மூலம் ரூ 550 கோடி திரட்டப்பட்டதாகவும் அது மேலும் தகவல் தந்தது.

மிலாப், கெட்டோ போன்ற அர்ப்பணிக்கப்பட்ட இணைய தளங்களிலும், முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களிலும் நிகழ்ந்த கூட்டுநிதித் திரட்டல் அனுபவம் சொல்வது இதுதான்: பரிசோதித்தல் முக்கியமானது. நிதிதிரட்டும் பரப்புரையை மேற்கொள்ளும் ஒரு தனிநபரின் அந்தரங்க சரித்திரம், அவரின் பெளதீக முகவரி, தரமான முகமைகளும், மருத்துவமனைகளும் அவரைப் பற்றித் தருகின்ற, சரிபார்க்கக்கூடிய ஆதரவு வாக்குமூலங்கள், நிதிப்பயன்பாட்டால் ஏற்படும் விளைவு, பொதுவெளி ஆவணங்களை இணையதளங்கள் பேணிக் காக்கவேண்டும் என்ற சட்டவிதி ஆகியவை நுண்நன்கொடைகளை மேலும் வளர்த்தெடுக்கும். பணம் செலுத்தும் தொழில்நுட்பமும், எளிதான கைப்பேசி வசதியும் வைத்திருக்கும், வாக்களிக்கத் தகுதியான 90 கோடி மக்களைக் கொண்ட ஒரு தேசத்திற்கு இது மிகவும் அவசியமானது.

Share the Article

Read in : English

Exit mobile version