Read in : English
செய்தி தயாரிப்பவர்கள், அதன் உள்ளீடாக பல அனுபவங்களை பெறுவதுண்டு. அவை, எந்த விதமாகவும் பதிவு செய்யப்படுவதில்லை. கேட்பாரற்று அமிழ்ந்து விடும். மிகவும் சுவாரசியமான உலகம் அந்த அனுபவங்களுக்குள் இருக்கும். உற்சாக மனநிலை ஏற்பட்டால் செய்தியின் பின்னணியில் அடைத்திருக்கும் வாசலை திறப்பர் சில மூத்த செய்தி ஆசிரியர்கள். மிகவும் நெருக்கமாக இருப்பவர்களுடன் அனுபவங்களை பகிர்ந்து கொள்வர். அப்படி ஓர் அனுபவத்தை அறியும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது.
தமிழகத்தில் முதல்வர்களாக இருந்த, ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, ஜெயலலிதா ஆகியோரோடு நெருங்கி பழகி அனுபவங்களை பெற்றவர். அவரது பத்திரிகை வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை சமீபத்தில் கேட்க நேர்ந்தது.
தமிழில் வெளிவந்த அண்ணா நாளேட்டில் நீண்ட கால பணி அனுபவம் பெற்றவர் அ.பொ. நாராயணன். அவரை அண்ணா நாராயணன் என்று அழைப்பர். தமிழகத்தில் முதல்வர்களாக இருந்த, ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, ஜெயலலிதா ஆகியோரோடு நெருங்கி பழகி அனுபவங்களை பெற்றவர். அவரது பத்திரிகை வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை சமீபத்தில் கேட்க நேர்ந்தது. நாராயணன் பகிர்ந்த அனுபவக் கதையின் ஒரு பகுதி…
எல்லையில், சீனா போர்தொடுத்த போது, இந்தியாவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. உதவி கோரி, ராஜாஜியை அமெரிக்காவுக்கு அனுப்பினார், பிரதமர் நேரு. அமெரிக்க ஜனாதிபதி கென்னடியுடன் பேச்சு நடத்தி, சென்னை திரும்பிய, ராஜாஜியைப் பேட்டி காண சென்றேன்.
தமிழகத்தில் முதல்வர்களாக இருந்த, ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, ஜெயலலிதா ஆகியோரோடு நெருங்கி பழகி அனுபவங்களை பெற்றவர். அவரது பத்திரிகை வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை சமீபத்தில் கேட்க நேர்ந்தது.
பேட்டி துவங்கியதும், அப்போதைய இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணமேனனைத் திட்ட துவங்கினார் ராஜாஜி. தொடர்ந்து, நேருவையும் விமர்சித்தார்.
‘என்ன நடந்தது?’
மிகவும் மென்மையாக கேட்டேன்.
‘சீனாவை விரட்டியடிக்க, ஒரு நிபந்தனையுடன் அமெரிக்க ஜனாதிபதி கென்னடி சம்மதித்தார். அமெரிக்கப் படையை, இந்தியாவில் நிலையாக வைத்திருக்க வேண்டும் என்பது தான் நிபந்தனை. அதை, ஏற்க மறுத்து விட்டார் நேரு. என்னை நாடு திரும்பி வரும்படி கூறிவிட்டார்…’ என்றார் ராஜாஜி.
அத்துடன், ‘வீட்டின் அடிச்செங்கலை உருவி உருவி, மேலே மேலே வைத்து கட்டி, வீடு கட்ட முனைகிறார்…’ என, மிகவும் கிண்டலாக, நேருவை விமர்சித்தார்.
பிரதமர் நேரு இறந்தபோது, மொரார்ஜி தேசாய் தான் அடுத்த பிரதமர் என்ற தகவல் பரவியது. அகில இந்திய காங்கிரஸ் தலைவராக, காமராஜர் இருந்தார். இறுதி சடங்கில் பங்கேற்று சென்னை திரும்பிய காமராஜரை சந்தித்து, அடுத்த பிரதமர் பற்றிய தகவல் அறிய விரும்பினோம். முக்கிய முடிவுகளின் போது, காமராஜர் நேரடி பேட்டியை தவிர்ப்பார். ஆனால், தகவல்களை மறைமுகமாக தெரிவிப்பார்.

நடிகர் எம்.ஜி.ஆருடன் பத்திரிகையாளர் அண்ணா நாராயணன்
அன்று சந்தித்தபோது, ‘எல்லோரையும் அனுசரித்து போகிற ஒருவரை தேடுகிறோம்…’ என்றார் காமராஜ். நாங்கள், ‘மொரார்ஜிக்கு வாய்ப்பில்லை’ என்று செய்தி வெளியிட்டோம். அதற்கு காரணம் இருந்தது. நேரு அமைச்சரவையில், தங்கக்கட்டுப்பாட்டு சட்டத்தை மொரார்ஜி கொண்டு வந்தார். அது, நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த சட்டத்தை திரும்ப பெற, நேரு உட்பட, காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியும், மொரார்ஜி மறுத்து விட்டார். அந்த பிடிவாதத்தை, பிரதமர் பதவிக்கான தகுதி குறைவு என, சுட்டிக் காட்டவே, காமராஜர் அப்படி சொன்னார்.
‘போஸ்டர்’ மூலம் பிரசாரம் செய்வது, அந்த காலத்தில் பெரும் உத்தியாக இருந்தது. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக, ராஜாஜி பதவி வகித்தார். அது, மிக உயர்ந்த பதவி. பின், மேற்கு வங்க கவர்னராக பதவி வகித்தார். இது, கலெக்டராக இருந்தவரை, கிராம அதிகாரியாக நியமிப்பது போல் என, விமர்சனம் எழுந்தது.
பின், சென்னை மாகாண முதல்வரானார் ராஜாஜி. அப்போதும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறவில்லை. மேலவையில், நியமன உறுப்பினராகித் தான், முதல்வர் பதவியை ஏற்றார்.
இதை கிண்டல் செய்யும் விதமாக, தி.மு.க., தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டியது. அந்த போஸ்டரில், ‘முன்வாசல் கதவெல்லாம் மூடிவிட்ட காரணத்தால்… பின்வாசல் வழியாக பீடுநடை போட்டவரே…’ என்ற வாசகம் இருந்தது.
Read in : English